உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ; முதல்நாளிலேயே வரலாற்றுச் சாதனை

ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ; முதல்நாளிலேயே வரலாற்றுச் சாதனை

- நமது சிறப்பு நிருபர் -ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் மெகா ஐபிஓ வெளியீடு இன்று (அக்டோபர் 21) முதல் நாளை மறுநாள் அக்டோபர் 23ம் தேதி வரை சந்தை விற்பனைக்காக அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல் நாளிலேயே இன்று முழுமையாக சந்தாதாரர்களால் வாங்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. விலை நிர்ணயம் பங்கு ஒன்றுக்கு ரூ.1,065 முதல் ரூ.1119 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ₹30,213 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இது இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ ஆகும். இன்று (அக்டோபர் 21) காலை 10:39 மணி நிலவரப்படி, 1.03 மடங்கு சந்தா பெறப்பட்டுள்ளது. அதாவது, விற்பனைக்கு விடப்பட்ட 19.75 கோடி பங்குகளுக்கு எதிராக, முதலீட்டாளர்கள் 20.25 கோடி பங்குகளுக்கு ஏலம் கோரியுள்ளனர். வழக்கமாகப் பெரிய நிறுவனங்களின் ஐபிஓக்கள் முதல் நாளில் மெதுவாகவே நிரம்பும். ஆனால் ஜியோ ஐபிஓ தொடங்கப்பட்ட முதல் 1 மணி நேரத்திலேயே 85% பங்குகள் வாங்கப்பட்டு, 100 நிமிடங்களுக்குள் முழுமையாகப் பங்குகள் விற்றுத் தீர்ந்தன. ஐபிஓ-விற்கு, முதல் நாளன்றே முதலீட்டாளர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஜியோ ஐபிஓ என்பது என்ன?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம், பங்குச் சந்தையில் முதன்முறையாக தனது பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வழங்கும் திட்டமே ஜியோ ஐபிஓ. சில்லறை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ஒரு லாட் (12 பங்குகள்) வாங்க வேண்டும். இதற்கு ரூ.13,428 தேவைப்படும். திரட்டப்படும் நிதியில் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாமின் கடன்களை அடைக்கப் பயன்படுத்தப்படும்; 5ஜி நெட்வொர்க் மேம்பாடு, ஏஐ தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி