உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரை சீரழித்த 3 குடும்ப கட்சிகள்: பிரதமர் மோடி தாக்கு

காஷ்மீரை சீரழித்த 3 குடும்ப கட்சிகள்: பிரதமர் மோடி தாக்கு

தோடா: காஷ்மீரை, குடும்ப அரசியல் நடத்தும் 3 அரசியல் குடும்பங்கள், சேர்ந்து வாரிசு அரசியல் நடத்தி சீரழித்து விட்டது என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும்.இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி இன்று(செப்.,14) தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தோடா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: இந்த தேர்தலானது, 3 குடும்பங்களுக்கும் காஷ்மீர் இளைஞர்களுக்கும் இடையே நடக்கிறது. ஒரு குடும்பம் காங்கிரஸ் கட்சியையும், மற்றொரு குடும்பம் தேசிய மாநாட்டு கட்சியையும் மற்றொரு குடும்பம் மக்கள் ஜனநாயக கட்சியையும் சேர்ந்தது. இந்த குடும்பங்கள் பாவத்தை தவிர உங்களுக்கு என்ன செய்தனர். அவர்கள் மாநில இளைஞர்களை முன்னேற விடுவது கிடையாது. மாநிலத்தின் அடிமட்டம் வரை ஜனநாயகம் பரவி உள்ளது. வாரிசு அரசியல் கட்சிகள், புதிய தலைவர்களை உருவாக அனுமதிப்பது கிடையாது. அவர்கள் தங்களது வாரிசுகளை மட்டும் வளர அனுமதித்து மற்றவர்களை அழித்தனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.1982ம் ஆண்டு பிறகு தோடா மாவட்டம் சென்ற முதல் பிரதமர் மோடி ஆவார். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rajarajan
செப் 14, 2024 16:00

அப்படியே ஆறு அல்லது ஏழு தலைமுறைக்கு முன்ன தோண்டி பாத்தா, இந்தியா பாகிஸ்தான் என ரெண்டா பொளந்ததுக்கு, ஒரு குறிப்பிட்ட குடும்ப பங்காளிகளின் சுயநலம்தான்னு நல்லா தெரியுது.


Indian
செப் 14, 2024 15:30

நாங்க வாயாலே வடை சுடுவோம்


venugopal s
செப் 14, 2024 13:18

தமிழ்நாடு காஷ்மீர் போல் ஆகாது. ஆனால் காஷ்மீர் தேர்தல் முடிவுகள் தமிழக தேர்தல் முடிவுகள் போல் தான் இருக்கும்!


SRISIBI A
செப் 14, 2024 12:46

காஸ்மீரில் இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் தேர்தல் தேவை இல்லை இந்த நாடாளும் மன்றம் தேர்தல் முடிந்த பிறகு காஸ்மீர் மீது மீண்டும் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகமாகி விட்டது . நீங்கள் என்ன கவனமாக இருந்தாலும் பாகிஸ்தான் வாழைப்பழத்தை காஸ்மீர் மர்ம மக்கள் வாயில் வைத்து கொள்ளவார்கள்.


பாமரன்
செப் 14, 2024 10:20

ஆஹா தேர்தலாம்ல... வேஷங்கட்ட வேண்டிய வேளை வந்தாச்சா..? . விட்றா ப்ளேனை தால் ஏரிக்கு...


veeramani
செப் 14, 2024 09:44

இந்திய மக்க ளின் ஏகோபித்த ஆதரவு பெட்ரா மதிப்பிற்குரிய மோடி ஜி அவர்களின் ஆட்சியில்தான் காஷ்மீர் இரண்டு குடும்பத்தின் சூழ்ச்சியில் இருந்து ஜனநாயக முறைக்கு கொண்டுவரப்பட்டது .மேலும் அங்குள்ள அனைத்து இந்துக்கள் சீக்கியர்கள் சுதந்திரமாக செயல் ப ட்டுக்கொண்டுள்ளனர். சுற்றுலா துறை அபரீத வளைச்சி அடான் ந்துள்ளது காஷ்மீர் சுபிட்சத்தை பொறுக்கமுடியாத பாகிஸ்தான் மு ஸ்லிம்கள் பிரச்சினைகள் பல கொடும் செயல் பூரி க்கின்றனர். எலேச்ச ன் முடிந்த பின்னர் பாகிஸ்தான் இல்லாமல் செய்வதே நமது குறிக்கோள்


முக்கிய வீடியோ