ஜே.கே.ஐ.எம்., அமைப்புக்கு 5 ஆண்டு தடை: சட்டவிரோத அமைப்பாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் இத்திஹாதுல் முஸ்லிம் அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து, உள்துறை அமைச்சகம் ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.ஜே.கே.ஐ.எம்., எனப்படும் ஜம்மு காஷ்மீர் இத்திஹாதுல் முஸ்லிமீன் என்பது ஜம்மு காஷ்மீரில் செயல்படும் ஒரு அமைப்பாகும். இது நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை பாதுகாப்புக்கு எதிரான சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் உள்துறை அமைச்சகம் தடை விதித்து உள்ளது.இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஜே.கே.ஐ.எம்., அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து, உடனடியாக ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த அமைப்பு வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகவும், இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.ஜம்மு காஷ்மீர் பல ஆண்டுகளாக பாதுகாப்பு சவால்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உட்பட்டு வருகிறது. இதனால், அங்கு பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை பலப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இவ்வாறு உள்துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.