உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைதானம் கேட்டு வகுப்பை புறக்கணித்து வரும் 4ம் வகுப்பு மாணவியுடன் நீதிபதி பேச்சு

மைதானம் கேட்டு வகுப்பை புறக்கணித்து வரும் 4ம் வகுப்பு மாணவியுடன் நீதிபதி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துமகூரு: அரசு பள்ளியில் மதில் சுவர், மைதானம் இல்லை என்பதற்காக, வகுப்புகளை புறக்கணித்து வரும் நான்காம் வகுப்பு மாணவி யை, மூத்த சிவில் நீதிபதி சந்தித்தார். கர்நாடகாவின் துமகூரு தாலுகா, பெலதாரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி, சிம்ரா சனோபர். மதில் சுவர் தான் படிக்கும் பள்ளியில் விளையாட்டு மைதானம், மதில் சுவர் கட்டி தரக்கோரி பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் சித்தராமையாவுக்கு கடந்த 3ம் தேதி, மாணவி கடிதம் எழுதியிருந்தார். 'சுற்றுச்சுவர் கட்டித் தரும் வரை பள்ளிக்குச் செல்ல மாட்டேன்' என, மாணவி சிம்ரா சனோபர் கூறியிருந்தார். அதுபோல, 15 நாட்களுக்கும் மேலாக மாணவி, பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளார். இந்நிலையில், துமகூரு மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலரும், மூத்த சிவில் நீதிபதியுமான நுாருன்னிசா, பெலதாரா அரசு பள்ளியில் ஆய்வு செய்வதற்காக சென்றார். பள்ளி கட்டடத்தின் நிலைமை, தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார். அப்போது, மாணவி சிம்ரா பல நாட்களாக பள்ளிக்கு வராமல் இருப்பதை அறிந்தார். இதையடுத்து, மாணவியின் வீட்டுக்கு நீதிபதி நுாருன்னிசா சென்றார். மாணவியுடன் பேசினார். மாணவி கூறுகையில், “பள்ளியில் மதில் சுவர் இல்லாததால், அருகிலுள்ள திருமண மண்டபத்திற்கு வருவோர், தங்கள் பள்ளியில் வாகனங் களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். விளையாட்டு மைதானம் ''பலரும் பள்ளி வளாகத்திற்குள் புகை பிடிக்கின்றனர், சிறுநீர் கழிக்கின்றனர். இதனால், பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது,” என்றார். இதை கேட்ட நீதிபதி நுாருன்னிசா, மாணவியின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, வட்டார கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தினார். இருப்பினும், “சுற்றுச் சுவர், விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரும் வரை பள்ளிக்கு வர மாட்டேன்,” என, மாணவி சிம்ரா பிடிவாதமாக கூறிவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Muruga Muruga
ஆக 24, 2025 21:15

பொதுமக்களாகிய நீங்க சொன்னாதான் கொஞ்சமாவது அவங்க பாப்பாங்க தலைமை ஆசிரியருக்கும் டீச்சருக்கும் அக்கறை இல்லைன்னா நினைக்கிறீங்க சொல்லிக்கிட்டே தான் இருக்கோம் கிடைச்சா தானே இது மாதிரி பொதுமக்கள் இறங்கினால் தான் உடனே முடிவு எடுக்குறாங்க ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் சொன்னா உடனே முடிவெடுக்க போறாங்க நாங்களும் EMIS பதிஞ்சுகிட்டே தான் இருக்கோம் இது மாதிரி ஆசிரியர் சம்பளத்தையும் ஆசிரியரையும் பேசாட்டி உங்களுக்கு எல்லாம் தூக்கமே வராது என்னங்க சார் நீங்க ஏதாவது கொஞ்சமாவது யோசிச்சு பேசுங்க நீங்களும் படிச்சு இருக்கீங்க தானே.


Easwar Samban
ஆக 24, 2025 16:18

சரியாக சொன்னீர்கள். நன்றி


Rathna
ஆக 24, 2025 12:47

தனது சமூகம் என்பதால்??


Seyed Omer
ஆக 23, 2025 20:31

மாணவியின் தைரியத்தையும் ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் மேலோங்க ஆசிரியர்களும் பொதுமக்களும் சமுக ஆர்வலர்களும் ஒத்துழைப்பு செய்ய வேண்டும்


M Gabriel
ஆக 23, 2025 15:05

புத்தக மூட்டை சுமந்து வர மாட்டேன் என்று குழந்தை பள்ளி மற்றும் பெற்றோர் கட்டாயத்துக்கு பணியும் அவல நிலை நீதிபதி தாமாகவே விசாரிக்க வேண்டும். நல்ல தீர்வு உடனடியாக வர வேண்டும்


சத்யநாராயணன்
ஆக 23, 2025 14:51

இந்தக் குழந்தைக்கு உள்ள அக்கறையும் ஈடுபாடும் ஆசிரியர்களுக்கோ தலைமை ஆசிரியருக்கோ இல்லாது போனது ஏன் சரிதான் அவர்கள் லட்சியம் சம்பளம் இது மட்டும் தானே


Saravanan N
ஆக 23, 2025 12:37

Goverment take care about schools infra, by push theres officials.


Soundararajan Damodaran
ஆக 23, 2025 11:55

நமது குழந்தைகள் இவ்வாறுதான் வளர வேண்டும் ....நமது மாநிலத்தின் வளர்ச்சியை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுவோர் தயவுசெய்து அங்கு சென்று பார்த்துவிட்டு மதிப்பீடு செய்யுங்கள் ...


Padmasridharan
ஆக 23, 2025 08:02

18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் சிறுவர்_சிறுமி ஆவார்கள், திருமணம் கூடாது, வேலையில் அமர்த்தக்கூடாது என்று சொன்ன அரசு தற்பொழுது இந்த மாணவியை தைரியமாக போராட்டம் செய்யற மாதிரி யோசிக்க பின்னின்று வழி நடத்துவது யார் சாமி.


Jack
ஆக 23, 2025 06:57

ஒரு கும்பல் முட்டுக்கொடுக்க வரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை