உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதி, கவர்னர்களுக்கு கால நிர்ணயம் விதித்த விவகாரம் தொடர்பான வழக்கில், 10 நாட்களாக நடந்து வந்த விசாரணை முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்' என, ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு கால வரம்பு நிர்ணயம் செய்தது. இந்த தீர்ப்பு குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, 14 கேள்விகளை எழுப்பி, ஜனாதிபதி திரவுபதி முர்மு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தை அப்படியே வழக்காக மாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், அதை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றினார். அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில், இந்த மனு மீதான விசாரணை கடந்த, 10 நாட்களாக நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது. -டில்லி சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Madras Madra
செப் 12, 2025 13:23

ஆக எங்களுக்கு 11 கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை அதனால் கேள்விகள் அவுட் ஆப் சிலபஸ் என்று தீர்ப்பு கொடுத்து விடுங்கள் யுவர் ஹானர்


Chandru
செப் 12, 2025 12:07

Gavai is unfit for the post. His judgements are a proof. He should be shown the place that he deserves


சுரேஷ் பாபு
செப் 12, 2025 11:56

தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஏதாவது காலக்கெடு உண்டா? ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்கள் என்று ஏதாவது ஒரு வரையறை?? அப்படி நீதிமன்றம் ஒரு குறித்த காலத்தில் தீர்ப்பு வழங்காவிட்டால் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே தீர்ப்பு வழங்க முடியுமா? (இது இரண்டு நீதியரசர்கள் அளித்த தீர்ப்பின் ரிவர்ஸ் மாதிரி!)


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 12, 2025 15:49

நீதிபதிகள் வக்கீல்கள் நினைத்தால் எத்துணை வருடங்கள் ஆனாலும் தீர்ப்பே கொடுக்காமல் வழக்கை வைத்து கொள்ள முடியும்.


V Venkatachalam
செப் 12, 2025 11:49

நீதிமான்களே இந்த ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பை வழங்குவதற்கு உங்களுக்கு காலக் கெடு இருக்கிறதா என்பதை நீங்கள் குறிப்பிடவில்லையே. அப்படி உங்களுக்கே முடியாத ஒரு விஷயத்தை நீங்கள் ஜனாதிபதி மீதும் அவரால் நியமிக்கப்படும் கவர்னர் மீதும் எப்படி பிரயோகம் செய்ய முடியும்?


venugopal s
செப் 12, 2025 11:40

வழக்கம் போல் மத்திய பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றத்திடமிருந்து பெரிய ஆப்பு காத்திருக்கிறது!


Oviya Vijay
செப் 12, 2025 10:20

இந்த விளக்கங்களைக் கேட்டது உண்மையில் ஜனாதிபதி அல்ல. அவர் பெயரில் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கங்கள் கேட்டிருப்பது சாட்சாத் நம் மத்திய அரசு தான் என்பது சாதாரணக் குடிமக்களாகிய நமக்கேத் தெரியும் பொழுது மெத்தப் படித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியாதா என்ன... இன்னொரு முறை விளக்கம் என்று எதையும் யாரும் கேட்கா வண்ணம் அடுமையாக தீர்ப்பு வழங்கப் போகிறார்கள். என் கணிப்பின் படி உச்சநீதிமன்றம் தன் தரத்தை எந்நாளும் குறைத்துக் கொள்ளாது. ஏற்கனவே அவர்கள் குறிப்பிட்டிருந்தபடி பதவியில் இருப்பவர்கள் மாறிக் கொண்டேயிருப்பர். ஆனால் சட்டம் எந்நாளும் மாறாது... ஆகையால் தன் முந்தைய தீர்ப்பிலிருந்து வளைந்து கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது...


sankar
செப் 12, 2025 12:23

அரசுதான், அரசு நிர்வகிக்கும் ஜனாதிபதி & கவர்னர்கள் தான் பெரியவர்கள் - அவர்கள் முடிவுகளை ஆட்சேபிக்க முடியாது - என்பது அரசியல் சட்டம்


V Venkatachalam
செப் 12, 2025 14:13

உச்ச நீதிமன்றத்துக்கு தரம் இருக்குதா? இது என்ன புதுசா இருக்கு? அதைதான் கபில் சிபல் அபிஷேக் மனு சிங்வி இவிங்க கஷ்டப் பட்டு ரயில் தண்டவாளத்தில் ஏத்துனாங்க. நம்ம சாராய யாவாரி பாத்தாரு. அடடா ஸ்டிக்கர் ஒட்றது போய்டுமேன்னு சாராயக் கடையில் கவர்மெண்ட்டே கொள்ளையடிக்குதுங்குற கேஸுல தானாக சூப்பர் கோர்ட்டுக்கு போயி ஏற்கனவே தண்டவாளத்தில் ஏத்தி வச்ச தரத்தை ராக்கெட்டில் ஏத்தி அனுப்பிட்டாரே. அப்புறம் எங்க இருக்கு தரம்?


vivek
செப் 13, 2025 03:34

இந்த ஓவியம் ரொம்ப அறிவாளி மாதிரி சொல்லும்...ஆனால் எதிராக நடக்கும்...இதயம் பத்திரம் சொம்பு


Ganesan
செப் 12, 2025 10:06

சட்டமன்றத்திற்க்கு மதிப்பு கொடுக்காமல் ஜனநாயகத்தை கொலை செய்யும் கவர்னர்கள் ஐ தூக்கில் போடலாம்... தீர்ப்பு கொடுங்கள் நீதிபதிகளே...


V RAMASWAMY
செப் 12, 2025 11:05

ஜனநாயகம் என்கிற போர்வையில் தேவைப்படாத மாநிலத்துக்கும் மக்களுக்கும் கேடு விளைவிக்கும் செயல்களுக்கு அனுமதி மறுத்தால் அவர்கள் கெட்டவர்களா?


V Venkatachalam
செப் 12, 2025 11:40

மக்களுக்குண்டான பணத்தை கொள்ளையடித்து தன் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளும் அரசியல் திருடன்களை தூக்கில் போட தீர்ப்பு கொடுங்கள் நீதிபதி அவர்களே. அந்த திருட்டுக்கு துணை போறவர்களையும் சேர்த்து தீர்ப்பு கொடுங்கள். அப்படி நீங்கள் நீதி வழங்கவில்லையென்றால் டமில் நாடு நேபாளம் மாதிரி ஆகிவிடும் நீதிபதி அவர்களே. கொஞ்சமாவது யோசியுங்கள் நீதிபதி அவர்களே..


Madras Madra
செப் 12, 2025 13:20

ஜனநாயக போர்வையில் கொள்ளை அடிப்பவர்களை சாகும் வரை தூக்கு அன்று தீர்ப்பு கொடுங்கள் நீதிபதி அவர்களே


Ganesan
செப் 12, 2025 10:05

இதெல்லாம் வெறும் கண்துடைப்பு நீதிபதிகள் எல்லாம் விசாரிப்பார்கள் கடுமையாக பாஜகவை கேள்வி கேட்பார்கள் தண்டனை கடுமையாக இருக்கும் என மக்கள் நினைக்கிற போது தீர்ப்பு பாஜகவிற்கு சாதகமாக அமையும் இந்த மாதிரியான பல டிராமக்களை பார்த்தாகிவிட்டது. உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் பாஜக விற்கு சாதகமாகத்தான் இருக்கும்.


V Venkatachalam
செப் 12, 2025 12:00

பாஜக வுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் நீதிபதிகள் ஒழுங்காக விசாரித்தார்கள் என்று நிரூபணம் ஆகிறது. பாஜக ஒழுங்காக இருக்கிறது என்பதுவும் நிரூபணம் ஆகிறது. பகலிலேயே கண் தெரியாத குருடன்கள் இருக்கிறான்கள். அவர்களுக்கு கண்ணிருந்தும் பார்வையில்லை என்பது பரிதாபம்.


Ganesan
செப் 12, 2025 10:05

முதலமைச்சர் தான் அதிகாரம் மிக்கவர். கவர்னர்கிடையாது.இப்படி ஒரு சிக்கல் வந்ததால் கவர்னர் பதவியை ஒழித்து விடவேண்டும். பிரதமர் சட்டம் இயற்றுவதை இதுவரை ஜனாதிபதி நிறுத்தி வைக்க வில்லை அது எப்படி. ஆளும்கட்சியால் தேர்ந்துஎடுக்கப்பட்டவர் என்பதால் மசோதாவை சட்டம் ஆக்குகிறாரா. பொதுநலவாதியாக ஜனாதிபதி செயல்பாட்டிலும் இவ்வளவு பிரச்சனைகள் வந்து இருக்காது. மேலும் புஜேபி ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் மசோதாவை நிறவைற்றும்போது பீஜேபி இல்லாத மாநிலங்களில் ஏன் கவர்னர்கள் இப்படி செய்கிறார்கள் என்று ஜனாதிபதி கேள்வி கேட்கவேண்டும்.அப்படி இவர்கள் தவறுகள் செய்தால் கவர்னர்கள் அனைவரையும் மாற்றம் செய்ய வேண்டும்.ஜனாதிபதி பொதுவாக இல்லை.ஆளும்கட்சிக்கு சாதகமாக உள்ளார்.அதனால் உச்சநீதிமன்றம் ஜனாதிபதியிடம் கேள்வி கேட்கவேண்டும்.


Ganesan
செப் 12, 2025 10:04

ஆளுநர் மாளிகைக்கு மின்சாரம் தண்ணீர் சம்பளம் நிறுத்தி வைக்க வேண்டும். பின் கவரனர் உச்சநீதிமன்றத்தில் முறையிட ட்டும்.


புதிய வீடியோ