உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்: நவ.,24ல் பதவியேற்பு

இந்தியாவின் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்: நவ.,24ல் பதவியேற்பு

புதுடில்லி: இந்தியாவின் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் நவ.,24 ல் பதவியேற்க உள்ளார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர்.கவாய், நவ., 24 ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டன. அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்தை நியமிக்க பி.ஆர்.கவாய் பரிந்துரை செய்து இருந்தார்.இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இந்திய அரசியலமைப்பு வழங்கிய அதிகாரத்தின்படி, சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்தை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, அவர் அடுத்த தலைமை நீதிபதியாக வரும் நவ.,24ல் பதவியேற்க உள்ளார்.

யார் இவர்

*சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியான சூர்யகாந்த், கடந்த 1962ம் ஆண்டு பிப்.,10 ல் ஹரியானா மாநிலம் ஹிசார் நகரில் பிறந்தவர்.*ஹிசாரில் கல்லூரியில் 1981ம் ஆண்டு பட்ட மேற்படிப்பு முடித்தார்.*1984 ல் ரோதக் நகரில் உள்ள மஹரிஷி தயானந்த் பல்கலையில் சட்டப்படிப்பு முடித்தார்.*அதே ஆண்டு ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.* தொடர்ந்து 1985 ல் பஞ்சாப் மற்றும் சண்டிஹர் ஐகோர்ட்டில் பணி தொடர்ந்தார்.*2000 ம் ஆண்டு ஹரியானாவின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.*2004 ம் ஆண்டு ஜன.,9 ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.*2018 ல் ஹிமாச்சலபிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். 2019 ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி நியமனம் செய்யப்பட்டார்.*வரும் நவ.,24 ல் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் அவர், 2027 பிப்.,9 வரை பதவி வகிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
அக் 31, 2025 04:11

உச்ச நிதி மன்றம் உச்ச நீதி மன்றமாக மாற வாழ்த்துகள்.


Sun
அக் 30, 2025 23:13

உச்ச நீதி மன்ற அறையில் காலனி வீசியவரை இந்த நீதிபதி மன்னித்து பெருந்தன்மையாக மேல் நடவடிக்கை வேண்டாம் என சொல்லி விட்டாராம்! காலணி வீசியவர் மேல் மேல் நடவடிக்கை எடுத்து வழக்கு விசாரணைக்கு மட்டும் வந்திருந்தால்? அகில இந்திய ரீதியில் சும்மா கிழித்து தோரணம் கட்டி இருப்பார்கள்! இவர் போல இல்லாமல் சாதாரண மக்கள் நீதிமன்றத்தை கோயிலாகவும் நீதி பதிகளை கடவுளாகவும் பார்க்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறோம். வாழ்த்துக்கள்.


R.Varadarajan
அக் 30, 2025 21:34

அவருடைய முன்னோடிகளின் வழியில் செல்லாமல் , நடுநிலையாக செயல் பட்டால் மதிப்பு கெடாமல் ஓய்வு பெறலாம்.


ஈசன்
அக் 30, 2025 21:20

நியாயத்திற்கு போராடும் மக்களின் கடைசி வாய்ப்பு நீதிமன்றம் மட்டுமே என்ற உணர்வோடு செயல்பட வாழ்த்துக்கள்.


Suresh Velan
அக் 30, 2025 21:06

தற்போதுள்ள தலைமை நீதிபதி கவாய் DMK விடம் பெரிய லஞ்ச பணம் வாங்கி டாஸ்மார்க் கேஸை குப்பையில் போட்டார் , செந்தில் பாலாஜி கேசில் பெரிய லஞ்ச பணம் வாங்கி குப்பையில் போட்டார் , இவரால் தான் dmk லஞ்ச அமைச்சர்கள் திமிர் எடுத்து பேசி வருகிறார்கள் . வருபவர் நல்லவராக இருந்தால் DMK லஞ்ச பேய் அமைச்சர்கள் சுடலை உட்பட ஜெயிலில் கம்பி எண்ணுவது உறுதி


Murugesan
அக் 30, 2025 21:15

மிக்க சரியான வார்த்தைகள் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்க தகுதியற்றவரை தலைமை நீதிபதியாக ,கோடிக்கணக்கான பணம் நீதிபதி வீட்ல பிடித்தும் நடவடிக்கை எடுக்காமல் ,ஐந்து வருடங்களாக திமுக அயோக்கிய ஆட்சிக்கு ஆதரவாக...


RAMESH KUMAR R V
அக் 30, 2025 19:33

சத்தியமேவ ஜெயதே. வாழ்த்துக்கள்.


முக்கிய வீடியோ