| ADDED : நவ 18, 2024 01:25 PM
புதுடில்லி: டில்லி அரசில் போக்குவரத்து அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட், தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவர் இன்று (நவ.,18) பா.ஜ.,வில் இணைந்தார்.டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளது. டில்லி அரசில் போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட், தன் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் ஆதிஷிக்கு நேற்று கடிதம் எழுதினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=owfh9hlt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் கடிதம் அனுப்பினார். இந்நிலையில், இன்று (நவ.,18) அவர் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் பா.ஜ.,வில் இணைந்தார். 'மத்திய அரசுடன் சண்டையிட்டுக் கொண்டு இருந்தால், டில்லி வளர்ச்சி அடையாது' என கைலாஷ் கெலாட் தெரிவித்தார். கைலாஷ் கெலாட்டை, வரவேற்று உறுப்பினர் அடையாள அட்டையை மத்திய அமைச்சர் மனோகர் கட்டார் வழங்கினார்.