உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கைலாஷ் -மானசரோவர் யாத்திரை மீண்டும் துவக்கம்: இந்தியா, சீனா ஒப்புதல்

கைலாஷ் -மானசரோவர் யாத்திரை மீண்டும் துவக்கம்: இந்தியா, சீனா ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கைலாஷ்- மானசரோவர் யாத்திரை மற்றும் நேரடி விமான சேவை இவை இரண்டையும் மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.புது டில்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2025ம் ஆண்டில் கைலாஷ் மானசரோவர் யாத்திரையையும் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்களையும் மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும் முடிவு செய்துள்ளன.இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வெளியுறவுச் செயலாளர்-துணை அமைச்சர் முறை கூட்டத்திற்காக விக்ரம் மிஸ்ரி இரண்டு நாள் பெய்ஜிங்கிற்கு பயணம் செய்தார்.அப்போது,வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இடையேயான சந்திப்பின் போது, இந்தியா- சீனா இருதரப்பு உறவுகளை மேலும் சரிசெய்யும் நோக்கில், 2020 முதல் நிறுத்தப்பட்ட கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.புது டில்லி- பெய்ஜிங் இடையே நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 75 வது ஆண்டு நிறைவாக இந்த 2025ம் ஆண்டு அமைந்துள்ளது.இந்த ஆண்டில் ஒருவருக்கொருவர் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொதுமக்களிடையே பரஸ்பர நம்பிக்கையையும் மீட்டெடுக்கவும் பொது ராஜதந்திர முயற்சிகளை இரட்டிப்பாக்கப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

SIVATHILLAI RAMASAMY
பிப் 12, 2025 03:22

2025 ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரையில் கலந்து கொள்ள இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அடியேன் நேரில் புதுடெல்லி சென்று சைனீஸ் எம்பசியில் கேட்டுத்தான் பதிவு செய்கிறேன்.


yesganesh
ஜன 28, 2025 10:43

ஓம் நமசிவாய


சா.திருஞானசமாபந்தம்
ஜன 28, 2025 08:14

ஓம்நமசிவாய


அப்பாவி
ஜன 27, 2025 22:30

அவன் இஷ்டத்துக்கு நுழைவுக்.ஜட்டபம் ஏத்திருவச்ன். இவன் அதுக்கு 18% ஜி.எஸ்.டி உருவுவான்.


சமீபத்திய செய்தி