உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபா எம்.பி.யாக கமல் பதவியேற்பு; தமிழில் உறுதிமொழி ஏற்பு

ராஜ்யசபா எம்.பி.யாக கமல் பதவியேற்பு; தமிழில் உறுதிமொழி ஏற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,யாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பதவியேற்றார். அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றார்.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o3ne3kds&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (ஜூலை 25) காலை 11 மணிக்கு லோக்சபா, ராஜ்யசபா கூடியது. ராஜ்யசபா கூடியது, எம்.பி.,யாக கமல் தமிழில் பதவியேற்று கொண்டார். அவருக்கு ராஜ்யசபா தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.இதை தொடர்ந்து, திமுகவின் வில்சன், சிவலிங்கம், சல்மா மற்றும் அதிமுகவின் இன்பதுரை, தனபால் எம்.பி.,யாக பதவியேற்றுக்கொண்டனர்.

லோக்சபா ஒத்திவைப்பு

லோக்சபா காலை 11மணிக்கு கூடியதும் பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.

இண்டி கூட்டணி போராட்டம்

இதற்கிடையே, இன்று காலை 11 மணிக்கு லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் கூடிய பிறகு, பார்லி., வளாகத்தில் இண்டி கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பீஹார் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பார்லி., வளாகத்திற்கு இண்டி கூட்டணியினர் பேரணி நடத்தினர். பேரணியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், பிரியங்கா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Padmasridharan
ஜூலை 25, 2025 19:34

சாமியோவ், அரசியல் பள்ளிக்கூடம் முதல் நாளே strike & holiday


selvelraj
ஜூலை 25, 2025 15:37

தமிழர்களின் பெருந்தன்மையே சிறந்தது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். எல்லா மாநிலத்தை சேர்ந்தவர்களும் இனிமேல் உலக நாயகன் வாய் திறக்கும் போது தலைமுடியை பிய்த்து கொண்டு ஓட வேண்டியதுதான்.


கண்ணன்
ஜூலை 25, 2025 15:23

நாட்டு மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை. மக்களின் வரிப்பணம் வேஸ்ட்


M Kannan
ஜூலை 25, 2025 15:04

Shameless person


Mani . V
ஜூலை 25, 2025 15:02

துணை ஜனாதிபதி ஏன் ராஜினாமா செய்தார்? என்று இப்பொழுது தெரிந்து விட்டது. இவரின் புரியாத பேச்சில் இருந்து தப்பிக்கத்தான். பதவி ஏற்புக்கு முன்பே ஒரு விக்கெட் எடுத்த சாதனை நாயகன். பாவம் மற்றவர்கள்.


M S RAGHUNATHAN
ஜூலை 25, 2025 14:54

ஏன் ஹாசன் தமிழர் மரபுப்படி வேட்டி அணியாமல், கால் சராய் அணிந்து சென்று இருக்கிறார். நல்ல வேளை " பதினாறு வயதினிலே" சப்பாணி மாதிரி சொல்லாமல் இருந்தாரே . அதற்கு நன்றி.


C.SRIRAM
ஜூலை 25, 2025 14:19

இது என்ன கதை


G Mahalingam
ஜூலை 25, 2025 13:53

எந்த மொழியில் பேச போகிறேன் என்று சொல்லி கமல் பேச வேண்டும். யாருக்கும் தெரியாத மொழியில் பேச கூடாது.


KRISHNAVEL
ஜூலை 25, 2025 13:51

இங்க முதலாளிக்கு உடம்பு சரியில்லை 24 மணி நேரம் ஆகுது அப்டேட் வந்து , அங்க என்ன மேன் நீ பதவிப்பிரமாணம் எடுத்துக்கிட்டு இருக்க


RAAJ68
ஜூலை 25, 2025 13:43

அவர் சென்னைக்கு திரும்புகையில் விமான நிலையத்திற்கு எல்லோரும் சென்று பெரிய மாலை போட்டு மேளதாளம் அதிர்வெட்டு சகிதம் அவருக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். சிவாஜி கணேசனுக்கு அப்படித்தான் செய்தார்கள்.


புதிய வீடியோ