உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் பிரசாரத்திற்காக பட ரிலீசை தள்ளி வைத்தார் கங்கனா ரணாவத்

தேர்தல் பிரசாரத்திற்காக பட ரிலீசை தள்ளி வைத்தார் கங்கனா ரணாவத்

மும்பை: லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக ‛‛எமர்ஜென்சி' திரைப்பட ரிலீசை தள்ளி வைத்தார் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், லோக்சபா தேர்தலில் இமாச்சல் பிரதேசம் மாண்டி லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்இந்நிலையில் இவர் நடிப்பில் '' எமர்ஜென்சி' என்ற திரைப்படம் மறைந்த முன்னாள் காங்கிரஸ் பிரதமர் ‛‛இந்திரா'' பற்றிய திரைப்படம் ஆகும். இதில் ‛இந்திரா ' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்திரா தன் ஆட்சி காலத்தில் கொண்டுவந்த நெருக்கடிநிலை பற்றிய அரசியல் படம் என கூறப்படுகிறது. கடந்த 14-ம் தேதி இப்படம் ரலீசாக இருந்தது திடீரென தள்ளி வைக்கப்பட்டது. தற்போது தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக கங்கனா ரணாவத் போட்டியிடுவதால் விரைவில் வெளியாகும் என தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு அறிக்கையாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Narayanan Muthu
மே 16, 2024 13:00

கங்கனாவின் படங்கள் இனி ஓடாது தேர்தல் நேரத்தில் எதிர்மறையான செய்திகளால் தேர்தல் தோல்வி சதவீதம் இன்னும் கூடும் என்பதால் படத்தை தள்ளி வைத்துள்ளார்


ஆரூர் ரங்
மே 16, 2024 08:37

அராஜகத்தின் உச்சகட்டம். உலகின் டாப் பத்து பேரழகிகளில் ஒருவர் ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரி தேவி என்று ஊடகங்கள் சிலாகித்து எழுதின. அதற்காக பொறாமையில் அவரை வழக்கு ஏதுமின்றி மிசா வில் கைது செய்து சிறையில் வாட்டியது. 200 உ.பி ஸ் இதையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும்.


J.V. Iyer
மே 16, 2024 04:23

வெற்றிபெற வாழ்த்துக்கள், கங்கனா உங்களைப்போன்ற தைரியமான பெண்கள் பாஜகவுக்கு வந்து மோடிஜியின் கரங்களை வலுப்படுத்தவேண்டும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ