உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக தி.மு.க.,வினரை கண்டுகொள்ளாத கனிமொழி

கர்நாடக தி.மு.க.,வினரை கண்டுகொள்ளாத கனிமொழி

பெங்களூரு : பெங்களூரில் காங்கிரசார் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க., - எம்.பி., கனிமொழி, கர்நாடக தி.மு.க.,வினரை அலட்சியம் செய்ததாக விமர்சனம் எழுந்துள்ளது.தமிழகத்தில் தி.மு.க., உதயமான போதே கர்நாடகாவிலும் உருவானது. அண்ணாதுரை வகுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற லட்சியத்தை பின்பற்றி வருவதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த கொள்கை, காலத்தால் அழியாமல் வேரூன்றியிருப்பதாக அக்கட்சி செயல்வீரர்களின் எண்ணம்.கர்நாடகாவுக்கு வரும்போது, அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர், இங்குள்ள மாநில தலைமைக்கு தெரிவித்துவிட்டுத் தான் வருவர். இந்த செயல்பாடு, கட்சி செயல் வீரர்களுக்கு 'பூஸ்ட்' கொடுத்தது போல் இருக்கும்.தி.மு.க., மாநில அமைப்பாளராக இருந்த எஸ்.வி.பதி, இளஞ்சேரன், திராவிட மணி, சோழன், வி.டி.சண்முகம், கிள்ளி வளவன், ராமசாமி ஆகியோர், தி.மு.க. தலைமை வந்து செல்லும் வரை, அவர்களுக்கு படை தளபதியாக இருப்பர்.ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், எம்.பி.,யுமான கனிமொழி, நேற்று பெங்களுரில் காங்கிரசார் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர்கள் அளித்த 'கிருஷ்ண பகவான்' சிலையை பெற்றுள்ளார்.ஆனால், அவரின் வருகை குறித்து மாநில தி.மு.க., நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் எந்த தி.மு.க.,வினரும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

தொடரும் மவுனம்

தி.மு.க., மூத்த தலைவர்கள் கூறுகையில், 'கர்நாடகாவில் விழா நடத்துவதற்காக, கனிமொழிக்கு மாநில தி.மு.க., அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் தேதி தருவதாக கூறினாரே தவிர, அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.'அரசு நிகழ்ச்சிக்கு கருணாநிதி வருவதாக இருந்தாலும் கூட, கட்சியின் செயல் வீரர்களுக்கு உரிய கவுரவம் கொடுத்து, அவர் தங்கிய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சந்திப்பார். ஆனால் அவரது மகளான கனிமொழி, காங்கிரசாருக்கு தரும் கவுரவத்தை, தான் சார்ந்துள்ள தி.மு.க.,வினருக்கு தரவில்லையே' என வருத்தம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 09, 2024 13:09

ஒருவேளை கனிமொழிக்கு முதல்வர் ஸ்டாலின் மீது கோபமோ... அந்த துணை முதல்வர் பதவி தனக்கு கொடுக்கவில்லையே என்று... அதை நேராக காட்டமுடியாமல், இப்படி மறைமுகமாக தன்னுடைய கட்சித்தொண்டர்களை கண்டுகொள்ளாமல் காட்டியிருக்கிறார்.


சமீபத்திய செய்தி