உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 14.8 கிலோ தங்கம் கடத்தல்: கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!

14.8 கிலோ தங்கம் கடத்தல்: கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!

பெங்களூரு : துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில், கன்னட நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான ரான்யா ராவ் , துபாயிலிருந்து நேற்று புறப்பட்டுள்ளார்.பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், சட்டவிரோத தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ) அதிகாரிகள், கன்னட நடிகை ரன்யா ராவை கைது செய்தனர்.அவரிடம் 14.8 கிலோ தங்கம் இருந்தது. அதை அவர் முன்கூட்டியே தெரிவிக்கவும் இல்லை. சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.கைது செய்யப்பட்ட நடிகை ரான்யா ராவ், கிச்சா சுதீப்புடன் மாணிக்யா உள்ளிட்ட கன்னடப் படங்களிலும், 'பதாகி' மற்றும் 'வாகா' போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.நடிகை கடந்த 15 நாட்களுக்குள் நான்கு முறை துபாய்க்கு பயணம் செய்துள்ள நிலையில் டி.ஆர்.ஐ., அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்தார். பெரும்பாலான தங்கத்தை கண்ணுக்குத் தெரியாமல் அணிந்திருந்ததாகவும், அதே நேரத்தில் தனது ஆடைகளுக்குள் தங்கக் கட்டிகளையும் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரியவந்தது.இந்நிலையில் நடிகை ரான்யா ராவ் 14.8 கிலோ தங்கத்துடன் பிடிபட்டார்.டி.ஆர்.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:நேற்று இரவு துபாயில் இருந்து பெங்களூரு வந்த நடிகை ரான்யா ராவ், நாகவாராவில் உள்ள டி.ஆர்.ஐ., அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.தங்கம் தொடர்பான தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை நடிகை ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், அதிகாரிகள் தங்கத்தைப் பறிமுதல் செய்வார்கள். அதுமட்டுமின்றி, அதிக அளவு தங்கம் இருந்ததால் நடிகைக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Karthik
மார் 05, 2025 15:01

குருவி குருவியோவ்வ்..சின்ன சிட்டு "குருவி "யோவ்வ்வ்....


kulandai kannan
மார் 05, 2025 14:03

இவள் தந்தை DGP என்பதால் விமான நிலையத்தில் உடல் சோதனை செய்வதில்லையாம்.


DARMHAR/ D.M.Reddy
மார் 05, 2025 11:28

பாரபட்சம் பார்க்காமல் யாருடைய சிபாரிசையும் ஏற்றுக்கொள்ளாமல் இந்த நடிகையை கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்தி நீதி அரசரால் தகுந்த சிறை தண்டனை வழங்கப்படவேண்டும்


Natarajan Ramanathan
மார் 05, 2025 11:00

இதற்கு முன்பு மூன்று முறை எவ்வளவு கிலோ தங்கத்தை கடத்தி வந்தாரோ?


Barakat Ali
மார் 05, 2025 10:19

உபதொழில்களிலும் சேர்த்தால்தான் சரிப்பட்டு வரும் ..... நல்ல புரிதல் .....


பிரேம்ஜி
மார் 05, 2025 08:16

வசதி இருக்கிறவர்கள் அதிக குற்றங்கள் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது! ஏழை பார்வைகள் பழிக்கு அஞ்சி ஒழுங்குகாக வாழ்கிறார்கள்!


Kasimani Baskaran
மார் 05, 2025 06:05

எப்படி இவர்களால் கோடிகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்ல முடிகிறது? சுங்கத்துறை அமலாக்கத்துறையுடன் இணைந்து பணியாற்றினால் பல சிக்கல்களை தவிர்க்க முடியும்.


m.arunachalam
மார் 05, 2025 01:19

வர வர சினிமாக்காரர்களின் ஆட்டம் அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது .


முக்கிய வீடியோ