உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கண்ணனூர் துணை கலெக்டர் தற்கொலை விவகாரம்; மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அதிரடி நீக்கம்

கண்ணனூர் துணை கலெக்டர் தற்கொலை விவகாரம்; மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அதிரடி நீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கண்ணனூர்: கேரளா, கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமான நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கேரளாவின் கண்ணனூர் துணை கலெக்டர் நவீன் பாபுவின் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றவர்கள், புகழ்ந்து பேசி அவரது செயல்பாடுகளை நினைவுகூர்ந்தனர். ஆனால், இந்த நிகழ்வில் அழையா விருந்தாளியாக பங்கேற்ற ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.பி.திவ்யா, நவீன் பாபு மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இதனால், மனமுடைந்து போன நவீன் பாபு, கடந்த 15ம் தேதி, தான் தங்கியிருந்த குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். நவீன் பாபுவின் மரணத்திற்கு காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், திவ்யாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து, நவீன் பாபுவை தற்கொலைக்கு தூண்டியதாக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து திவ்யாவை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக கே.கே., ரத்னகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, பதவி நீக்கம் குறித்து திவ்யா பேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த விவகாரத்தில் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். சட்டப்பூர்வமாக என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பேன். கட்சி என் மீது எடுத்துள்ள இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்கிறேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Jysenn
அக் 18, 2024 14:45

கம்மிக்கள் ஒழிக்க பட வேண்டும் .


Ramesh Sargam
அக் 18, 2024 12:51

தற்கொலைக்கு முக்கிய காரணம் அந்த அழையா விருந்தாளியாக வந்து துணை கலெக்டர் மீது அபாண்ட பழி சுமத்திய இந்த திவ்யா கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். இதே ஒரு பெண் அதிகாரி, அதுவும் ஆளும் கட்சியை சேர்ந்தவர் இப்படி தற்கொலை செய்து கொண்டிருந்தால், இவ்வளவு நேரம் பெரிய கலவரமே ஏற்பட்டிருக்கும் கேரளாவில்.


sankaran
அக் 18, 2024 12:29

மூல காரணம் பெண் சுதந்திரம்.. அழையா விருந்தாளியை விரட்டி அடித்திருக்க வேண்டும்.. எவ்ளோ படித்தாலும், பதவியில் இருந்தாலும் மனோதைரியம் வேண்டும் ... அதை நாம் சாமியிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டும்.. நிர்மலா மாதிரி அசட்டு தைர்யம், கர்வம் இருக்க கூடாது ...


sridhar
அக் 18, 2024 11:23

பினராய் விஜயன் மேலும் அவன் குடும்பத்தார் மேலும் ஆயிரம் ஊழல் குற்றச்ச்சாட்டு. அதை பேசும் தைரியம் அந்த பெண்மணிக்கு உண்டா ?


Indian-இந்தியன்
அக் 18, 2024 11:12

இறந்தவர் மிகவும் நேர்மையான அதிகாரியே


சம்பா
அக் 18, 2024 11:03

நீக்கம் மட்டும் பத்தாது தற்கொலக்கு தூண்டியது னு வழக்கும் பதியனும் அப்பதான் அடங்குவாளுக


KRISHNAN R
அக் 18, 2024 10:17

வாய் கிழிய வெட்டி சித்தாந்தம்....இப்படி தான் இருக்கிறது. மேலும், இறந்தவர் குறித்த முழு தகவல் தேவை


Nandakumar Naidu.
அக் 18, 2024 08:37

நுணலும் தன் வாயால் கெடும். அழையா விருந்தாளியாக வந்தது முதல் தவறு, அவரை இழந்து பேசுவது இரண்டாவது தவறு. ஒரு உயிர் போக காரணமாகிவிட்டார் மற்றும் தன் வேலையும் போக்கிக் கொண்டார். தேவையா இது.


sundarsvpr
அக் 18, 2024 08:35

கண்ணனூர் துணை ஆட்சியர் தற்கொலை செய்துகொண்டது கேவலமான செயல். பேச்சின் விபரம் இல்லை. பொதுவாய் அரசு பதவிக்கு வந்தால் நேர்மையாய் பணிபுரிவது பொதுவாக இயலாத காரியம். அரசியல்வாதி வாயில் விழாத அரசு அலுவலர்யாராவது இருந்தால் பொதுமக்கள் அவருக்கு நன்கொடை வழங்கவேண்டும்.


raja
அக் 18, 2024 08:30

நமது கோவால் புற ஒன்கொள் கொள்ளை கூட்டம் திருட்டு திராவிட மாடலை கேரளாவுக்கும் விரிவு செய்ததின் விளைவு....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை