உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமண வாழ்வின் பிரச்னையை தீர்க்கு ம் கபாலம்மா

திருமண வாழ்வின் பிரச்னையை தீர்க்கு ம் கபாலம்மா

- நமது நிருபர் -திருமண வாழ்க்கையில் தம்பதிக்குள் சண்டை ஏற்படுவது பொதுவாக வழக்கம். ஒரு சில தம்பதி பேச்சு வார்த்தை மூலம் சரியாகிவிடுவர். சில தம்பதிக்குள் ஏற்படும் பிரச்னை சரியாவதில் சிரமம் ஏற்படும். யாரிடம் சென்று முறையிட்டால் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை சரியாகும் என்று தம்பதி நினைப்பர். இப்படிப்பட்ட தம்பதிக்கு ஏற்ற இடமாக உள்ளது ஸ்ரீ கபாலம்மா கோவில்.ராம்நகரின் கனகபுராவில் இருந்து 15 கி.மீ., துாரத்தில் ஸ்ரீ கபாலம்மா கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் முக்கிய தெய்வம் துர்க்கா தேவி, சக்தி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அம்மன் தரிசனம்

மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான இங்கு, ராம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும், இங்கு சென்று அம்மனை தரிசித்துச் செல்கின்றனர்.திருமண வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளும் தம்பதி, இங்கு வந்து அம்மனை தரிசித்தால், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னை நீங்குவதாக நம்பப்படுகிறது. இதனால் இந்த கோவிலில், அம்மனை தரிசிக்க தம்பதிகளே அதிகம் வருகின்றனர்.இந்த கோவிலின் நுழைவு வாயிலில் ஒரு காளை உள்ளது. இந்த காளை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அம்மனை தரிசித்துவிட்டு வரும் பக்தர்கள், காளையிடம் சென்று ஆசி பெறுகின்றனர். தரையில் படுத்து காளையின் காலைத் தொட்டு வணங்குகின்றனர்.

ஆசிர்வாதம்

பக்தர்கள் மீது, காளை தனது காலை வைத்து ஆசிர்வாதம் செய்தால் நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் காளையிடம் குழந்தைகளை அதிகமாக ஆசிர்வாதம் வாங்க வைக்கின்றனர். காளை ஆசிர்வதித்த பின் அதன் கொம்பில் பணத்தை கட்டித் தொங்க விடுகின்றனர்.கபாலம்மா கோவில் கட்டட கலைக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.நுழைவு வாயில் முதல் மண்டபங்கள் வரை கல் சிற்பங்கள் கோவிலின் அழகை பற்றி எடுத்துரைக்கிறது. சிற்பங்கள் கோவிலின் புராண கதைகளையும் விவரிக்கின்றன. ஆண்டுதோறும் இந்த கோவிலில் நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.கோவிலின் நடை தினமும் காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும்.பெங்களூரில் இருந்து பஸ்சில் சென்னப்பட்டணா, ராம்நகர், கனகபுரா பஸ் நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து கோவிலை சென்றடையலாம். ரயிலில் சென்றால் சென்னப்பட்டணா ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை