மேலும் செய்திகள்
பக்தி மணம் கமழும் கோவர்த்தன மலை
19-Nov-2024
குடகு மாவட்டம், மடிகேரியில் இருந்து 37 கி.மீ., தொலைவில் செலவாரா கிராமம் அருகில் அமைந்து உள்ளது கப்பே மலை. 1,420 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலை, குடகிலேயே உயரமான மலையாகும்.இந்த மலையில் தான் செலவாரா நதி உற்பத்தியாகிறது. மலையின் தென்கிழக்கு பகுதியில், 1,600 மீட்டர் உயரம் உள்ள சோமகுந்த் மலை அமைந்து உள்ளது.மழை காலத்தில் இங்கு குட்டி குட்டி நீரோடைகள், சிறிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி, பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும்.சாகச பிரியர்களுக்கும் இம்மலை ஏற்றது. மலையேற்றம் செய்பவர்களுக்கு இது சொர்க்கம் என்றே கூறலாம்.மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள வனத்துறை அலுவலகத்தில் இருந்து, மலை உச்சியை, 30 நிமிடங்களில் சுலபமாக அடைந்து விடலாம்.மலையேற்றின் முதல் மூன்றில் ஒரு பங்கு, சீரற்ற கல் பாதைகள் இருப்பதால் மெதுவாக ஏற வேண்டும். அடுத்த மூன்றில் ஒரு பங்கு, செங்குத்தானதாக இருக்கும். அதேவேளையில் இதை சமாளித்து ஏறிவிடலாம்.மலை உச்சியை அடைந்தவுடன், அங்கிருந்து சுற்றிலும் பார்க்கும் போது, முடிவற்ற பசுமையான காட்சி, பச்சை போர்வை போர்த்தியது போன்று இருக்கும். மூடுபனி, மேகங்களால் நிரம்பிய மேற்கு தொடர்ச்சி மலையின் அழகிய பள்ளத்தாக்குகளையும் நீங்கள் காணலாம்.மூடுபனி இல்லாத நாட்களில், ஒரு புறம் கேரள மாநில எல்லையையும், மறுபுறும் குடகு எல்லையையும் பார்க்க முடியும். அமைதியும், தனிமையும் உங்களை வசீகரிக்கும்.இம்மலையில் ஏறுவதற்கு முன், வனத்துறை முன் அனுமதி பெற வேண்டும். காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மலையேற்றம் செய்யலாம்.
கப்பே மலையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் படர்ந்துள்ள பனிமூட்டம். - நமது நிருபர் -
19-Nov-2024