உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக முதல்வர் மாற்றம் விரைவில்?: தேடுதல் வேட்டையில் காங்., தீவிரம்

கர்நாடக முதல்வர் மாற்றம் விரைவில்?: தேடுதல் வேட்டையில் காங்., தீவிரம்

பெங்களூரு:'மூடா' எ னும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டு விவகாரத்தில் சித்தராமையா சிக்கியுள்ளார். இதனால், முதல்வரை மாற்றும்படி கட்சி மேலிடத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. எனவே தகுதியான நபரை கண்டுபிடிக்க, காங்கிரஸ் மேலிடம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. மூவரின் பெயர் பரிசீலனையில் உள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. இரண்டாவது முறை முதல்வரான சித்தராமையா, ஆரம்ப நாட்களில் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றினார்.

கக

தேர்தலுக்கு முன்பு அளித்த ஐந்து வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தி, மக்களிடையே நற்பெயர் சம்பாதித்தார். இது கட்சியில் உள்ள அவரது எதிரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஒன்பது இடங்களில் வெற்றி பெற்ற பின், முதல்வர் மாற்றம் குறித்த சர்ச்சை எழ ஆரம்பித்தது.இதற்கிடையே 'மூடா'வில் நடந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டத்திலேயே முறைகேடு நடந்ததுடன், அவரது மனைவி பார்வதிக்கு சட்டவிரோதமாக 14 மூடா மனைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த விவகாரம் குறித்து கவர்னர் விசாரணை நடத்த அனுமதி அளித்ததும் அரசியல் வட்டாரம் சுறுசுறுப்படைந்தது. இந்த பிரச்னை தற்போது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. என்ன நடக்கும் என்பதை நினைத்து முதல்வர் நடுக்கத்தில் உள்ளார்.மற்றொரு புறம், காங்கிரஸ் நடத்திய போராட்டங்களை சுட்டிக்காட்டி, தன்னால் வெளியே சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதிக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் கடிதம் எழுதினார்.இது மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்பதை மறைமுகமாக புகார் கூறுவதாகும். இது கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.முதல்வருக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதிய போராட்டங்கள் அவருக்கு எதிராகவே திரும்பும் என்று யாரும் நினைக்கவில்லை.

கக

இதனால் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் முதல்வரை மாற்றும்படி மேலிடத்தின் காதில் சிலர் ஓதுகின்றனர். தொடக்கத்தில் முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாக காங்., மேலிடம் நின்றது.ஜனாதிபதிக்கும் உள்துறைக்கும் கவர்னர் அறிக்கை அளித்துள்ளதை அடுத்து, நிலைமை மாறி உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வரை மாற்ற காங்., மேலிடம் ஆலோசிப்பதாக, தகவல் வெளியாகிஉள்ளது.மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் முதல்வர் பதவியை எதிர்பார்ப்பவர்கள் பட்டியல் மிக நீளம். துணை முதல்வர் சிவகுமார், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், தொழிற்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் என தினமும் பலர் சேர்ந்து வருகின்றனர்.அதனால் யாருக்கும் அதிருப்தி இல்லாமல், ஒரு மனதாக முதல்வரை முடிவு செய்யும் ஒருவரை மேலிடம் தேடுகிறது.அனைத்துத் தரப்பினருடனும் தனித்தனியே ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் எந்த முடிவுக்கும் மேலிடம் வரவில்லை என்பதால் தினமும் ஒவ்வொருவராக ஆசையை வெளியிட்டு வருகின்றனர்.மற்றொரு புறம், முதல்வர் பதவியை சித்தராமையா விட்டுத் தருவாரா என்ற கேள்வியும் எழுகிறது.கட்சியின் நன்மையை கருத்தில் கொண்டு மேலிடம் உறுதியாக நின்றால், ராஜினாமா செய்வதைத் தவிர சித்தராமையாவுக்கு வேறு வழி இல்லை என்றே கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை