உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதைப்பொருள் வழக்கில் கர்நாடக காங்., தலைவர் கைது

போதைப்பொருள் வழக்கில் கர்நாடக காங்., தலைவர் கைது

பெங்களூரு : கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு நெருக்கமான கலபுரகி தெற்கு பிளாக் காங்கிரஸ் தலைவர் லிங்கராஜ கன்னே, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மஹாராஷ்டிர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கலபுரகி தெற்கு பிளாக் காங்கிரஸ் தலைவர் லிங்கராஜ கன்னே. இவர் இதற்கு முன், பா.ஜ.,வில் இருந்தார். 2023 சட்டசபை தேர்தலின்போது காங்கிரசில் இணைந்தார். மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே, கலபுரகி தெற்கு காங்., - எம்.எல்.ஏ., அல்லம பிரபுவுக்கு மிகவும் நெருக்கமானவர்.இந்நிலையில், மஹாராஷ்டிராவின் தானேவில் நேற்று காலை போதைப்பொருள் விற்பனைக்காக லிங்கராஜ கன்னே சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார், அவரை கைது செய்தனர்.அவரிடம் இருந்து, தடை செய்யப்பட்ட 'கோடின்' போதை மருந்து கலந்த 20க்கும் மேற்பட்ட சிரப் பாட்டில்கள், 'ஷெட்யூல் - ஹெச் டிரக்ஸ்' எனப்படும் டாக்டர் பரிந்துரையின்றி கடைகளில் வாங்க முடியாத மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை போதைக்காக பலர் பயன்படுத்துகின்றனர்.இவருடன் சேர்த்து தவுசிப் ஆசீப், சையத் இர்பான் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லிங்கராஜ கன்னே கைதானதை தொடர்ந்து, இவர் அமைச்சர் பிரியங்க் கார்கேவுடன் சேர்ந்திருக்கும் படங்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.இது, கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திஉள்ளது. இதையடுத்து, லிங்கராஜ கன்னேவை கட்சியில் இருந்து நீக்கி, கலபுரகி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜகதேவ் குத்தேதார் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

shyamnats
ஜூலை 15, 2025 09:17

கான் கிராஸ் ன்னா சும்மாவா? கட்சி தலைமையே, குடும்பமே கோர்ட் வாசல் ஏறி இறங்கி கொண்டு இருக்கும் போது கட்சி அங்கத்தினர் அவர்களால் முடிந்த அளவுக்கு போதை, ஊழல் செய்யாமல் இருக்க முடியுமா? ஆனாலும் கடுமையான நடவடிக்கை தேவை.


Barakat Ali
ஜூலை 15, 2025 05:59

[இவருடன் சேர்த்து தவுசிப் ஆசீப், சையத் இர்பான் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ] அவமானம் ...... அருவருப்பாக உள்ளது ......


Iyer
ஜூலை 15, 2025 05:34

• காங்கிரஸின் பெரும் புள்ளிகள் உள்கை இல்லாமல் இவர் மட்டும் இவ்வளவு பெரிய போதை வியாபாரம் செய்யமுடியாது. • இது ஒரு மிகவும் ஆபத்தான நாட்டையே சீரழிக்கும் TREND ஆகும். • ஊழல் செய்தே நாட்டை அழித்த காங்கிரஸ் - இப்போது ஊழல் செய்ய முடியாததால் போதை வியாபாரத்தில் இறங்கி உள்ளது. • உடனே கர்நாடக அரசை கலைத்து - ராஷ்ட்ரபதி சாசனம் பிறப்பித்து இந்த போதை NETWORK தீவிர புலன் செய்வது அவசியம். • பல காங்கிரஸ் பெரும் புள்ளிகள் சிக்குவார்கள்


நிக்கோல்தாம்சன்
ஜூலை 15, 2025 04:32

இப்போ புரியுது கார்கே


Kasimani Baskaran
ஜூலை 15, 2025 03:58

தீம்க்காவை காப்பி அடித்தால் இப்படித்தான் ஆகும். அயலக அணி வைத்து இருக்கிறாரா அந்த செல்வப்பெருந்தொகை என்பதையும் விசாரிக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி