உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரட்டை வாக்குப்பதிவு குற்றச்சாட்டுக்கான உரிய தரவுகள் தர வேண்டும்; ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இரட்டை வாக்குப்பதிவு குற்றச்சாட்டுக்கான உரிய தரவுகள் தர வேண்டும்; ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு; இரட்டை வாக்குப்பதிவு என்று கூறிய குற்றச்சாட்டுக்கான உரிய தரவுகளை தருமாறு கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கடந்த 7ம் தேதி டில்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த சந்திப்பின் போது, கர்நாடகாவில் (மகாதேவபுரா சட்டசபை தொகுதியில்) பெண் வாக்காளர் ஷகுன் ராணி என்பவர் இருமுறை வாக்களித்தார் என்று கூறி சில ஆவணங்களை மேற்கோள் காட்டி குற்றம்சாட்டினார். இந் நிலையில், ராகுலின் குற்றச்சாட்டை மறுத்துள்ள கர்நாடக முதன்மை தேர்தல் அதிகாரி தரப்பில், போலி வாக்குப்பதிவு என்பதற்கான உரிய ஆவணங்களை தருமாறு நோட்டீஸ் ஒன்றை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; உங்கள் (ராகுலின்) செய்தியாளர் சந்திப்பில், காட்டப்பட்ட ஆவணங்கள் தலைமை தேர்தல் ஆணையத்தின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்று கூறியுள்ளீர்கள். தேர்தல் அதிகாரி அளித்த பதிவுகளின்படி, ஷகுன் ராணி என்ற வாக்காளர் இரண்டு முறை வாக்களித்துள்ளார் என்றும் நீங்கள் கூறி உள்ளீர்கள். ஆனால் ஷகுன் ராணி அந்த குற்றச்சாட்டை மறுத்து, தான் ஒரு முறை மட்டுமே ஓட்டு போட்டதாக கூறியுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி கூறி இருக்கிறார். நாங்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி, அந்த ஆவணம் வாக்குச்சாவடி அதிகாரியால் வழங்கப்பட வில்லை என்பது தெரியவந்துள்ளது.விசாரணையில், ஷகுன் ராணி, நீங்கள் குற்றம் சாட்டியது போல், இரு முறை அல்ல, ஒருமுறை மட்டுமே ஓட்டு போட்டதாக கூறியுள்ளார். எங்கள் முதல் கட்ட விசாரணையில், நிருபர்கள் சந்திப்பில் நீங்கள் காட்டிய அந்த குறிப்பிட்ட ஆவணம், வாக்குச்சாவடி அதிகாரியால் வழங்கப்பட்ட ஆவணம் அல்ல என்பதும் தெரிய வந்துள்ளது.எனவே, நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணையை நடத்த உங்களின் வசம் உள்ள ஆவணங்களை வழங்க வேண்டும். ஷகுன் ராணியோ அல்லது வேறு யாரோ ஒருவரோ இருமுறை வாக்களித்து உள்ளனரா என்பதை கண்டறிய நீங்கள் வைத்துள்ள ஆவணங்கள் அடிப்படையில், விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.எனவே, அது தொடர்புடைய ஆவணங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு தேர்தல் ஆணையம் அந்த நோட்டீசில் குறிப்பிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Kasimani Baskaran
ஆக 11, 2025 03:51

போலி ஆவணம் தயாரிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல முன்னனுபவம் உண்டு. போலி ஆவணம் தயாரித்து தன்னை ஒரு பிராடு என்று நிருபித்த பின்னரும் இவன் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது இமாலயத்தவறு.


Amruta Putran
ஆக 11, 2025 01:23

Pappu told it just for fun, nothing serious, because he is joker


surya krishna
ஆக 11, 2025 00:52

ரவுல் வின்சி கான் தனக்கு ரெட்டை குடியுரிமை உள்ளது அதை பற்றி பேச வேண்டும். அரசியலில் தகுதி இல்லாத தேசதுரோகிகள் இவனும் இவனை சார்ந்தவர்களும்.....


முருகன்
ஆக 10, 2025 22:46

ராகுல் காந்தி தேர்தல் கமிஷனை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் சாரியான பதில் மட்டும் இதுவரை இல்லை


வாய்மையே வெல்லும்
ஆக 10, 2025 23:19

கொஞ்சம் பொறு .. பொய்ச்சொல்லுற மெஷின் அதான் ராவுல் வாய் நிக்கட்டும்.. பிறகு ஆட்டம் ஆரம்பம் .. இவனையும் நம்பி என்னமுருகா பதிவு போட்டுள்ளாய்.. ஜாக்கிரதை .. பொய்ச்சொல்லுபவனும் அவனை கண்மூடி ஆதரிப்பவன் மானம் கப்பலேற ரொம்பநேரம் ஆகாது ..


vivek
ஆக 11, 2025 05:48

முதலில் கையெழுத்து போட சொல்லு, அப்புறம் நேரா ஜெயில் தான் முருகா


vadivelu
ஆக 11, 2025 07:10

சரியாதான் கேட்குறாங்க. ஆதாரத்தை எங்களிடம் கொடு என்கிறார்கள், கொடுக்க வேண்டியதுதானே. கையில் வைத்து கூவுவம் ஆவணம் எங்களுடையது இல்லை என்கிறார்கள், வேறென்ன வேண்டும். கொடுத்து அவர்களின் முக திரையை கிழிக்க வேண்டியதுதானே.


Priyan Vadanad
ஆக 10, 2025 22:14

அந்த அட்டை வழங்கும்படியான ஓட்டைகளை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது என்று எடுத்துக்கொள்ளலாமா?


Priyan Vadanad
ஆக 10, 2025 22:11

தேர்தல் ஆணையம் திரு.ராகுல் கேட்கும் டிஜிட்டல் வாக்காளர் பதிவு ஆவணங்களை எல்லோருக்கும் முன் வைக்கட்டுமே? தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு ஆணையம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.


vivek
ஆக 11, 2025 05:49

முதலில் கையெழுது போட சொல்லு.....


vivek
ஆக 11, 2025 08:16

அறிவிலி பிரியன்...தேர்தல் ஆணையம் சந்தை கடையா.... .முதலில் கையெழுது போடு...


சகுரா
ஆக 10, 2025 21:48

பொய் மட்டுமே முதலீடாக வைத்து ஒரு அரசியல்.


ரங்ஸ்
ஆக 10, 2025 21:44

இரட்டைக் குடியுரிமையை மறைக்க ஏதோ சூழ்ச்சி செய்கிறார்


Iyer
ஆக 10, 2025 21:36

இனி எந்த மாநிலத்திலும் பப்புவின் "பருப்பு வேகாது" பீகார், WB, தமிழ்நாடு - ஒன்றன்பின் ஒன்றாக பிஜேபி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கப்போவது உறுதி. காங்கிரஸ், RJD , TMC , போன்ற குடுபக்கட்சிகளுக்கு இந்த உண்மை நன்றாகவே புரிந்துவிட்டது வரப்போகும் தேர்தல் தோல்விகளுக்கு நொண்டி சாக்கு தேடிக்கொண்டு EC மீது பழி போடுகிறார்கள்


M Ramachandran
ஆக 10, 2025 21:28

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு டக்கு முக்கு தாளம். ராகுலின் நிலமை ஆப்பு புடுங்குன குரங்க்கு மாதிரி


சமீபத்திய செய்தி