உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சருக்கு எதிரான விசாரணைக்கு கர்நாடகா ஐகோர்ட் இடைக்கால தடை

மத்திய அமைச்சருக்கு எதிரான விசாரணைக்கு கர்நாடகா ஐகோர்ட் இடைக்கால தடை

பெங்களூரு: தேர்தல் பத்திரம் வாங்க மிரட்டப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் மீது பெங்களூரு போலீசார் விசாரணைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர், ஜனாதிகார சங்கர்ஷ பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஆதர்ஷ் அய்யர், 50; ஏப்ரல் 15ல் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தேர்தல் பத்திரம் வாங்கி பா.ஜ.,வுக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்று பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குனரை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்க துறையினர், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, டில்லி பா.ஜ., அலுவலக ஊழியர்கள், கர்நாடக பா.ஜ., முன்னாள் தலைவர் நளின்குமார் கட்டீல், உள்ளிட்டோர் மிரட்டி உள்ளனர்.பணம் தராவிட்டால் அமலாக்கத் துறை வாயிலாக, 'ரெய்டு' நடத்துவோம் என்று கூறி, ரூ. 8,000 கோடி தேர்தல் பத்திரம் வாங்க வைத்து உள்ளனர். இது குறித்து, பெங்களூரு திலக்நகர் போலீஸ் நிலையத்தில் மார்ச் 30ம் தேதி புகார் செய்தேன். பெங்களூரு தென்கிழக்கு மண்டல டி.சி.பி.,யிடம் ஏப்., 2ல் புகார் அளித்தேன். என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிரட்டி பணம் பறித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, நீதிபதி கே.என்.சிவகுமார், திலக்நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி, போலீசார் பெங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.போலீஸ் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் போலீஸ் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து அடுத்த விசாரணையை அக்.22ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

K.n. Dhasarathan
அக் 07, 2024 14:26

நேர்மையான அமைச்சர் வழக்கை சந்திக்க வேண்டியதுதானே அதற்க்கு ஏன் தடை வாங்கணும் ? அதிகாரம் காட்டவா ? பண பலம் காட்டவா ? கர்நாடகத்தில் நீதி நிலை நாட்டப்படும் என்று நம்புவோம்.


venugopal s
அக் 01, 2024 09:06

சிவப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்!


Saai Sundharamurthy AVK
அக் 01, 2024 08:16

பொறாமை, காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் போடப்பட்ட லாஜிக்கே இல்லாத கேனைத்தனமான வழக்கு.


Ramalingam S
அக் 01, 2024 06:42

தேர்தல் பத்திர வழக்கு உச்ச நீதிமன்றத்தின் பார்வையில் இருப்பதால், இந்த தனிப்பட்ட வழக்கு தல்லுபடிதான் செய்யப்படும்


பாமரன்
செப் 30, 2024 22:53

நம்ம பகோடாஸ் பாணியில் கேட்டா... நிம்மி நிரபராதின்னு கோர்ட்டில் நிரூபிச்சிட்டு வர வேண்டியதுதானே... என்ன நான் சொல்றது


Anantharaman Srinivasan
செப் 30, 2024 22:00

தேர்தல் பத்திரம் வசூல் முறைகேடு என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தீர்ப்பு கொடுத்து விட்டது. வசூல் செய்த முறையை விசாரிப்பபதில் என்ன தவறு..? எதற்கு தடை?


ஆரூர் ரங்
செப் 30, 2024 21:31

அரசு தயாரித்திருக்கும் மருத்துவக் கல்லூரி (CONFIDENTIAL)தேர்வுப் பட்டியலை முன்கூட்டியே MAM அவர்களிடம் கொடுத்து பிரதியுபகாரமாக கட்சிக்கு தேர்தல் நிதி தி.மு.க பெற்றதாக ஆற்காட்டார் டிவி பேட்டியளித்தாரே. இப்போது வழக்கு போடலாமா?


ஆரூர் ரங்
செப் 30, 2024 21:10

ஜனாதிபதியின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அமைச்சர் மீது வழக்கு போட முடியாது என்பது வழக்குப் போட்ட ஆளுக்கு தெரிந்ததுதான்..மிரட்டினார்கள் என்பதற்கு ஆதாரம் கொடுக்காமல் வழக்கு முதல் நிலையிலேயே டிஸ்மிஸ் ஆகிவிடும்.


வழிப்போக்கன்
செப் 30, 2024 22:28

ஆனா தொழிலதிபர்களை மிரட்டி அடிச்சு பணம் பிடுங்க ஜனாதிபதி ஒப்புதல் தேவையே இல்லை. ஆனா வழக்கு போட்டா எல்லாருடைய ஒப்புதலும் தேவை.


அப்பாவி
செப் 30, 2024 20:40

எந்தக் கேசையும் நீர்த்துப்.போகச் செய்து விடும் கோர்ட்டுகள்.விசாரணையை எதிர்கொண்டு நிரபராதியாய் வெளியே வரட்டுமே.


venugopal s
செப் 30, 2024 20:35

இந்த வழக்கைத் கொடுத்தவர் ஆதர்ஷ் ஐயர் என்பவர், சொல்வாரா?


hari
செப் 30, 2024 22:36

உண்மை வேணுகோபால்... செந்தில் பாலாஜி உத்தமர்... பிடி 200 ரூவா....


முக்கிய வீடியோ