உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி இப்படி பேசலாமா? லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய சுப்ரீம் கோர்ட்

நீதிபதி இப்படி பேசலாமா? லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த கர்நாடக ஐகோர்ட் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.அண்மையில் நில உரிமையாளருக்கும், குத்தகைதாரருக்கும் இடையிலான பிரச்னை குறித்த வழக்கு பெங்களூருவில் உள்ள கர்நாடகா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி, வேதவ்யாசச்சர் ஸ்ரீ ஷனாந்தா விசாரித்தார். அப்போது, அவர் பெங்களூருவில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் எனக் குறிப்பிட்டதுடன், பெண் வக்கீல் முகம் சுழிக்கும் விதமான கருத்துக்களையும் கூறியது பெரும் சர்ச்சையானது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரிக்கத் துவங்கியது. இன்றைய விசாரணையின் போது பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், 'நீதிபதிகள் எந்த மாதிரியான கருத்துக்களை கூற வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் உன்னிப்பாக கவனிக்கின்றனர். எனவே, அதனை மனதில் வைத்து நீதிபதிகள் செயல்பட வேண்டும்', எனக் கூறினார். மேலும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் விளக்கத்தைக் கேட்டு, 2 நாட்களுக்குள் கர்நாடகா ஐகோர்ட் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், என உத்தரவிட்டு, வழக்கு விசாரணை செப்டம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Mohan
செப் 25, 2024 13:21

2047 ல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்று போஸ்டர்கள் கேரளாவில் ஒட்டப்படுகின்றது . அதைப்பற்றி ஒரு வார்த்தை நீதிபதி ஐயா கூறுவாரா ????


Bala 2016
செப் 21, 2024 22:19

நீதிபதி உண்மையை கூறுவதில் தவறில்லை


Syed Sujauddin
செப் 21, 2024 14:57

THEAGENTS HAVE FILLED IN EVERY WHERE .


Venkatarama Muthuswami
செப் 21, 2024 11:15

உண்மை. உண்மையை சொல்லுவதற்கு எதற்காக பயப்பட வேண்டும்? தமிழ்நாட்டில் பல மாவட்ட டோல்கேட்டிலும் ரேடிக்கல்ஸ் ஆட்சி நடத்துகிறார்கள். இந்த திராவிட மாடல் அரசு வாயையும் கண்களையும் மூடிக்கொண்டிருக்கிறது. 2047-ல் இந்தியா ஒரு இஸ்லாமிய ரிபப்ளிக்காக கூட ஆக கூடும்.


Natarajan Ramanathan
செப் 21, 2024 00:58

தினம் இனம் ஏதாவது கலவரம் செய்து பிரச்சனை செய்யும் கேவலமான மனிதர்கள் இருக்கும் பகுதியை பாகிஸ்தான் என்று சொல்வது சரியானதுதான்...


venugopal s
செப் 20, 2024 22:49

இதைவிட மோசமாகப் பேசும் பாஜக தலைவர்களுக்கும் தலையில் நாலு குட்டு வையுங்கள் எஜமான்!


Velan Iyengaar
செப் 20, 2024 21:51

பாகிஸ்தான் என்று சொல்லியதை மட்டும் எழுதும் நீஎங்கள் பெண் வக்கீல் முகம் சுழிக்கும்படியாக என்ன கூறினார் என்று இங்கு எழுதி இருந்தால் இந்த வேத வெட்டி வியாசர் ஸ்ரீ சகதி யானந்த உள்மனசு எல்லோருக்கும் தெரியவந்து இருக்கும் தானே ??? உள்ளாடை கலர் குறித்து பெண் வக்கீலிடம் பேசும் விதம் இது போன்ற கழிசடைகளிடம் மட்டும் தான் பார்க்கமுடியும் ....


Velan Iyengaar
செப் 20, 2024 21:43

அடுத்து நம்ம சுவாமிநாதனுக்கு சீக்கிரம் இதேமாதிரி மண்டகப்படி நிச்சயம் .....


Viswanathan M
செப் 21, 2024 12:20

வேலன் அய்யங்கார் என்பது நகைமுரண். இதிலிருந்து உங்களுடைய நகைப்புக்குரிய பதிவு புரிகிறது. திரு சுவாமிநாதன் அவர்கள் எப்பக்கமும் சாராது நீதி வழங்கும் நீதியரசர்.


Bala 2016
செப் 21, 2024 22:17

வேலன் ஐயங்கார் சுவாமிநாதன் நேர்மையான நீதியரசர்.நீங்கள் உண்மையில் ஐயங்கார் அல்லது கபட வேசதாரியா.


Rasheel
செப் 20, 2024 20:46

ஸுடோ செகுலரிசம் என்பது இதுதானோ


Ravi Kulasekaran
செப் 20, 2024 19:07

உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உரிமையியல் தலையிட கூடாது தீர்ப்பு தவறா அதற்கு மேல் முறையீடுக்கு வந்தால் அதனை உங்கள் பார்வையில் நல்ல முறையில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் நீதிபதிகள் கவனமாக செயல்பட வேண்டும் என கருத்துகளை கூறலாம் தவிர நீதிபதிகளை விமர்சனம் செய்ய கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை