உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழகத்திற்கு பிப்ரவரி மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.காவிரி நீரை பெறுவதற்கு தமிழகம் தொடர்ந்து கர்நாடகாவிடம் போராடி வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையமும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும், குறைவான அளவே திறக்கப்பட்டது. இது தொடர்பாக இரு மாநிலங்கள் இடையே அடிக்கடி பிரச்னை நீடித்து வருகிறது.இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் இன்று (பிப்.,1) டில்லியில் கூடியது. இதில் தமிழக, கர்நாடக அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில், தமிழகத்திற்கு பிப்ரவரி மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை விநாடிக்கு 998 கனஅடி வீதம் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
பிப் 02, 2024 00:42

உத்தரவை கர்நாடக அரசு மதித்து தண்ணீர் திறந்து விடுகிறார்களா என்று ஆணையம் கண்காணிக்கவேண்டும். தமிழக அரசு கிடைக்கும் தண்ணீரை முறையாக எவ்வளவு சேமித்து வைக்க முடியுமோ அவ்வளவு சேமித்து, விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டும். வீணாக கடலில் சென்று கலப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்தவேண்டும். அதற்காக மேலும் ஒரு சில அணைகளை எங்கு முடியுமோ அங்கு கட்டவேண்டும்.


chennai sivakumar
பிப் 01, 2024 20:29

Uththaravu another tissue paper


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை