உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விசா ஊழல் வழக்கு : கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை

விசா ஊழல் வழக்கு : கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை

புதுடில்லி பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில், 1,980 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையத்தை அமைக்கும் பணியை, பஞ்சாபைச் சேர்ந்த டி.எஸ்.பி.எல்., எனப்படும், 'தாலாவாண்டி சாபோ பவர்' என்ற நிறுவனம் செய்து வந்தது.மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான டி.எஸ்.பி.எல்., இந்த பணியை, ஷான்டாங் எலக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக் ஷன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தது.இந்த பணிக்காக பஞ்சாப் வந்த சீன பணியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக விசா வழங்க, கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக 2022ல் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. கார்த்தியின் தந்தை சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சராக அப்போது பதவி வகித்தார். இந்த வழக்கில், இரண்டு ஆண்டு விசாரணையை முடித்துள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி, அவரது உதவியாளர் பாஸ்கரராமன், டி.எஸ்.பி.எல்., மற்றும் மும்பையை சேர்ந்த பெல் டூல்ஸ் நிறுவனம் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ., குறிப்பிட்டு உள்ளதாவது:அனல்மின் நிலையம் அமைக்கும் பணி, நிறைவடைய திட்டமிட்டதை விட அதிக காலதாமதம் ஏற்பட்டது. இதனால், டி.எஸ்.பி.எல்., நிறுவனம் அபராதம் செலுத்தும் நிலை ஏற்பட்டது.இதை தவிர்ப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான சீன பணியாளர்களை அழைத்து வர அந்நிறுவனம் திட்டமிட்டது. இதற்காக அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான விசாக்களை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியுடன் அந்நிறுவனம் பெற்றுள்ளது.இதற்கு, தன் தந்தை சிதம்பரத்தின் உதவியை கார்த்தி பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Balaji Ramanathanfeellikebecoming shiva
அக் 18, 2024 12:01

In India justice will not be given to right people.


R K Raman
அக் 18, 2024 10:47

இவர்கள் கொள்ளுப் பேரன் காலத்தில் கூட தீர்ப்பு வராது.... திமுக அதிமுக மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னதும் பாஜகவின் ஊழல் வழக்குகளில் செய்து வருவதும் வேறு அல்ல


Raghavan
அக் 18, 2024 10:12

இப்போதுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது இன்னும் நம்பர் ஆகி விஜாரணைக்கு வருவதற்கு குறைந்தது ஒரு மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகும். பிறகு வாய்தா வாய்தா என்று அது ஒரு ஐந்து ஆறு வருடங்கள் ஓடிவிடும். விசாரணைக்கு வரும் பொது எவ்வளவு சாட்சிகள் பிறர் சாட்சிகளாக்க மறுகிறார்களோ யாருக்கு தெரியும். மறுபடியும் இவர்களே ஆட்சிக்கு வந்தால் வழக்கு அதோ கதிதான்.


Narayanan Sa
அக் 18, 2024 07:46

அப்பா பிள்ளை இருவருமே குற்றவாளிகள் தான்


sankaranarayanan
அக் 18, 2024 07:32

தந்தை சிதம்பரம் தமயன் கார்த்தி இருவரையும் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதற்காகவாவது அவர்களின் பதவிகளை ஏன் இன்னும் தனி சிறப்பு மன்றம் பறிக்கவில்லை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக நீதிமன்றமே முன்வந்து இவர்களின் பதவிகளை பறித்தால் இதுபோன்று அடுத்தவர்கள் யாருமே செய்யமாட்டார்கள் நடக்குமா பொறுத்திருந்து பாருங்கள் மக்களே.


Lion Drsekar
அக் 18, 2024 07:25

பல சீரியல்கள் தினம் தினம் ஒளிபரப்படுவது போல் இந்த ஒரு சீரியல், இதற்கு முன்னால் நாம் பார்த்த இதே குடும்ப சீரியலில் சுவர் எகிறிக்குதித்து கைது, சிறையில் அடைப்பு, வீட்டு சாப்பாடு, பிறகு வெளியே வருதல், தேர்தலில் போட்டி, மீண்டும் அதே பதவி, இப்போது மீண்டும் ஆரம்பத்தில் இருந்து சீரியல் நம்பர் 2 , நடிகர்கள் இவர்களே, கதை வசனம் எப்போதும்போல் அதே துறைகளே, பாராட்டுக்கள் வாசகர்கள் கவனத்துக்கு, இவ்வளவு எளிமையாக நாம் இந்த செய்தியைப் படிக்கும்போது, வேண்டாதவர்களை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், நிஜத்தில் பார்த்தல் உண்மை புரியும், இந்து போன்ற குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு ஒரு கொசுகூட உள்ளே நுழைய முடியாது அப்படி ஒரு பாதுகாப்பு , அவர் வீட்டுக்கு மட்டும் இல்லை, அவர்கள் வசிக்கும் ரோடு இருபுறமும் ,. இப்படி இருக்க குற்றப்பத்திரிக்கை, நடவடிக்கை, சிறை, வந்தே மாதரம்


Kasimani Baskaran
அக் 18, 2024 05:33

கூட்டுக்கள்ளனான முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை இந்த வழக்கில் சேர்த்து இருக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை