உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆடிட் பீரோ ஆப் சர்க்குலேஷன் தலைவராக கருணேஷ் பஜாஜ் தேர்வு

ஆடிட் பீரோ ஆப் சர்க்குலேஷன் தலைவராக கருணேஷ் பஜாஜ் தேர்வு

மும்பை: மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், 'ஆடிட் பீரோ ஆப் சர்க்குலேஷன்' நிறுவனத்திற்கு 2025 - 2026ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் தலைவராக, ஐடிசி நிறுவனத்தின் கருணேஷ் பஜாஜ் தேர்வு செய்யப்பட்டார்.இந்தியாவில் உள்ள அச்சு ஊடகங்களின் விற்பனையை கணக்கிடும், தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனமாக, ஏபிசி எனப்படும் 'ஆடிட் பீரோ ஆப் சர்க்குலேஷன்' செயல்படுகிறது. அரசின் அங்கீகாரம் பெற்ற இந்த நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, ஓராண்டுக்கு பதவி வகிக்கின்றனர். 2025-2026ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இதன்படி தலைவராக ஐடிசி நிறுவனத்தின் தலைவர் கருணேஷ் பஜாஜ்துணைத்தலைவராக - பென்னட் கோல்மென் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மோகித் ஜெயின் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.கவுன்சிலின் உறுப்பினர்களாகவிளம்பரதாரர் பிரதிநிதிகள்1. கருணேஷ் பஜாஜ்2. அனிருத்தா ஹல்தார்( டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்)3. பர்தோ பானர்ஜி( மாருதி சுசிகி இந்திய நிறுவனம்)

வெளியீட்டாளர் பிரதிநிதிகள்

1. மோகித் ஜெயின்2. ஏபிபி நிறுவனத்தின் துருபா முகர்ஜி 3. மலையாள மனோரமா நிறுவனத்தின் ரியாத் மாத்யூ4. டிபி கழக நிறுவனத்தின் சைலேஷ் குப்தா5. ஜக்ராஜ் பிரகாசன் நிறுவனத்தின் சைலேஷ் குப்தா 6. லோக்மாத் மீடியா நிறுவனத்தின் கரன் தர்தா7. சகால் பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதாப் ஜி பவார்8. 'தினமலர்' நாளிதழின் கோவை பதிப்பின் பதிப்பாளரும், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைவருமான எல்.ஆதிமூலம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

விளம்பர ஏஜென்சி பிரதிநிதிகள்

1. மேடிசன் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விக்ரம் சகுஜா2. ஆர்கே சுவாமி நிறுவனத்தின் சீனிவாசன் கே சுவாமி3. குரூப் எம் மீடியா இந்தியா நிறுவனத்தின் பிரசாந்த் குமார்4. இனிஷியேட்டிவ் மீடியா நிறுவனத்தின் வைஷாலி வர்மா5. பப்ளிசிஸ் மீடியா இந்தியா குழுமத்தின் சேஜல் ஷா செயலாளராக அதில் காசத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ