உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரூர் சம்பவம்; பார்லியில் தமிழில் பேசப் போகிறார் ஹேமமாலினி

கரூர் சம்பவம்; பார்லியில் தமிழில் பேசப் போகிறார் ஹேமமாலினி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர் விவகாரம் குறித்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, அஜய் ரஸ்தோகி விசாரணையைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது. பா.ஜ., சார்பில் ஹேமமாலினி தலைமையில், எம். பி.,க்கள் குழு கரூர் 'விசிட்' செய்து பாதிக்கப்பட்ட குடும் பங்களை சந்தித்து விசாரணை நடத்தியது; இது குறித்து கட்சி தலைமைக்கு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார் ஹேமமாலினி. விரைவில், நீதிபதி அஜய் ரஸ்தோகி குழு வையும் சந்தித்து, கரூரில் பா.ஜ., குழு சந்தித்து சேகரித்த, விபரங்களை சமர்ப்பிக்க உள்ளாராம் ஹேமமாலினி.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ot9xfrl4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பார்லிமென்ட்டின் குளிர்கால கூட் டத்தொடரில், கரூர் விவகாரம் நிச்ச யம் எழுப்பப்படும் என சொல்லப் படுகிறது. பா.ஜ., சார்பில் எம்.பி., ஹேமமாலினி பேசுவார் என, கட்சி ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாம். தமிழில் தான் அவர் பேசப்போகிறாராம்.பார்லிமென்ட்டில் விஜய்க்கு ஆதர வாக பேச, எம்.பி.,க்கள் யாரும் இல் லாத நிலையில், ஹேமமாலினி மறை முக ஆதரவு தருவதுடன், தி.மு.க.,வை கடுமையாக விமர்சிக்க உள்ளாராம். இதற்கு பதிலடி தர, 'காங்கிரஸ் தரப்பில் ஜோதிமணி எம்.பி., தயாராக உள்ளார்' என சொல்லப்படுகிறது.ஒரு வழக்கை சி.பி.ஐ., விசாரணை செய்தாலோ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் விசாரணை செய்து கொண்டிருந்தாலோ இந்த விவகாரம் குறித்து பார்லிமென்ட்டில் விவாதிக்கக் கூடாது' என்பது நடைமுறை. எனினும், 'அந்த விவகாரம் சார்ந்த பொதுக் கொள்கை குறித்து பொதுவாகப் பேசலாம். ஆனால், விசாரணையின் உண்மை விபரங்கள் அல்லது குற்றச்சாட்டு கள் மீது அலசல் வேண்டாம்' என, வழிகாட்டப்பட்டுள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிப்பாரா... அப்படி அனுமதி அளித்தால் பெரும் அமளி நடக்கும் என்பது மட்டும் நிச்சயம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Venugopal S
அக் 19, 2025 21:10

சினிமா போல் டூப் போடச் சொல்வாரோ?


Barathan
அக் 19, 2025 19:09

கவிதா கிருஷ்ணமூர்த்தி...ரகுமான் ...பம்பாய் ஜெயஶ்ரீ பாடிய ஹிந்தி பாடல்கள் கேட்கவும்


அப்பாவி
அக் 19, 2025 17:05

தமிழகத்தின் வருங்கால முதல்வர் ஹேமமாலினி வாழ்க.


BHARATH
அக் 19, 2025 14:26

சிபிஐ முடிவு இப்படித்தான் வரும். முதல் குற்றவாளி விஜய் அப்புறம் ரெண்டாம் குற்றவாளி தி மு க.


Kulandai kannan
அக் 19, 2025 13:17

புரிவதற்காகத்தானே??


திகழ்ஓவியன்
அக் 19, 2025 12:07

என்ன பிரயோஜநம் அம்மணி தமிழ் என்று சொல்லி, ஏன் மகாமகம் பிபிசி சொன்ன 82 பேர்க்கு பேசினாரா இந்த தமிழபெண், நிம்மி தமிழ் பெண் அனால் இட்டிலி தோசைக்கு 5% GST அனால் சப்பாத்திக்கு க்கு exemption இது தான் தமிழ்ப்பற்று


ஆரூர் ரங்
அக் 19, 2025 13:41

எந்த ஓட்டலில் சப்பாத்திக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதில்லை ன்னு சொல்லுங்க பார்ப்போம். 200 க்கு இது டூ மச்.


vivek
அக் 19, 2025 18:05

கனடா புலம்பாதே


Gnana Subramani
அக் 19, 2025 12:02

ஹேமா மாலினி இதுவரை எத்தனை முறை தமிழில் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்


Gnana Subramani
அக் 19, 2025 12:01

இது வரை தமிழைப் பற்றியோ தமிழ் நாட்டை பற்றிய ஹேமா மாலினி ஒரு முறை கூட நாடாளுமன்றத்தில் பேசியது கிடையாது


duruvasar
அக் 19, 2025 14:01

பொது வெளியை விடுங்கள் ஒரு அவையிலேயே துண்டு சீட்டு இல்லாமல் தமிழ் பேச முடியாது என்று தமிழ்நாடு பிரபலங்கள் இருக்கும்போது இவர்கள் பொது வெளியிலேயே தமிழ் பேசினார்கள். அது போக இங்கே இருக்கிறவங்க என்னமோ தமிழக மக்களுக்காக பேசுகிறார்கள் என எதை வைத்து முடிவுக்கு வந்தீர்கள்.


Apposthalan samlin
அக் 19, 2025 11:44

தமிழ் நாட்டில் தான் பிறந்தார்கள் 30 வருஷம் கழித்து கட்சியின் கட்டாயத்தால் கரூருக்கு வந்தது பேசும் பொழுதே தமிழ் திக்கி திக்கி பேசுது . காமெடி தான்


Matt P
அக் 19, 2025 12:47

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பிரபலமே தமிழை முக்கி முக்கி பேசுது. 30 வருஷம் கழிச்சு வந்தாலும் திக்கி திக்கியாவது பேசுகிறார்களே.


முருகன்
அக் 19, 2025 11:26

மக்கள் துன்பத்தில் குளிர் காய்வதில் வல்லவர்கள் தவறு இழைந்த விஜய் நல்லவர் என கூட்டணிக்காக பேசுவது சாரியா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை