மேலும் செய்திகள்
காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் ஒமர் அப்துல்லா
17-Oct-2024
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் நக்ரோடா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் தேவேந்தர் சிங் ராணா, 59. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், ஹரியானா மாநிலம் பரிதாபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு காலமானார். இவர், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் இளைய சகோதரர். ராணா சமீபத்தில் நடந்த ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் நக்ரோடா தொகுதியில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்த தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் ஜோகிந்தர் சிங்கை 30,472 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.எம்.எல்.ஏ., ராணாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, ஜம்மு - காஷ்மீர் துணை முதல்வர் சுரேந்தர் குமார் சவுத்ரி, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
17-Oct-2024