உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கருத்துக்கணிப்பை நம்பாதே; இந்த தேர்தல் சொல்லும் பாடம் இதுதான்!

கருத்துக்கணிப்பை நம்பாதே; இந்த தேர்தல் சொல்லும் பாடம் இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை தரைமட்டமாக்கி இருக்கிறது ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள். ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளன. இந்த முடிவுகளை அறிய அரசியல் கட்சிகள் மட்டும் அல்லாமல் நாட்டு மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் வழக்கம் போல், மக்கள் ஆதரவு யாருக்கு என்ற கருத்துக்கணிப்புகள் வெளியாகின.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6cuy4adm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த கணிப்புகளில் எல்லாம் ஹரியானா தேர்தல் முடிவுகள் பற்றியே பெரும்பாலும் பேசப்பட்டு இருந்தன. 2 முறை அரியணையில் இருந்த பா.ஜ., இம்முறை ஆட்சியை இழக்கும். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியுடன் அரியணை ஏறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தன. ஒன்றல்ல, இரண்டல்ல...! கிட்டத்தட்ட பிரபல நிறுவனங்கள், தேர்தல் கணிப்பு சூத்திரங்களை அலசி ஆராய்ந்து மக்கள் மத்தியில் புள்ளி விவரங்களுடன் அள்ளி வீசும் அமைப்புகள் இந்த கருத்துக் கணிப்புகளை நடத்தின. மொத்தம் 8 கருத்துக்கணிப்புகள் வெளியானது.அனைத்திலும், ஹரியானாவில் பெரும்பான்மைக்கு தேவையான 46 தொகுதிகளை கடந்து, காங்கிரஸ் கட்சி அரியணை ஏறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆட்சியை தக்க வைக்க முடியாமல் பா.ஜ., 18 முதல் 29 தொகுதிகள் வரையே பெறும். இப்படித்தான் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட்டு இருந்தன.கருத்துக்கணிப்பு முடிவுகளை கண்ட காங்கிரஸ் கொண்டாட, பா.ஜ., நம்பிக்கையுடன் காத்திருந்தது. மக்கள் மீதான பா.ஜ., நம்பிக்கை வீண் போகாமல் இருந்திருக்கிறது. ஹரியானா ஓட்டு எண்ணிக்கை தொடக்கத்தில் பின்னடைவில் இருந்த பா.ஜ., பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை கடந்து அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.8 நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை மக்கள் அடித்து, நொறுக்கி பா.ஜ., அரியணை ஏற ஹாட்ரிக் வாய்ப்பு அளித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஹரியானா தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் பொய்யாகி இருக்கின்றன.கருத்துக்கணிப்புகளில் மக்களின் கருத்துகள், அவர்களின் மனோநிலை, எந்த தொகுதிகளில் எந்த வயது உள்ளோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன, அவர்களின் எதிர்பார்ப்பு என பல காரணிகளை முன் வைத்து, விஞ்ஞான ரீதியாக கணக்கிடப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதாக அதை வெளியிடும் நிறுவனங்கள் கூறி வருகின்றன. கருத்துக்கணிப்புகள் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் பொய்யானது. ஆளும் பா.ஜ., 400க்கும் அதிகமாக தொகுதிகளை கைப்பற்றும், காங்கிரசை மக்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் 400 தொகுதிகளை எட்ட முடியாமல் பா.ஜ., கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தாலும், அப்போதைய கருத்துக் கணிப்பு முடிவுகள் மாறியே இருந்தது.என்னதான் கணிப்புகள் களத்தில் இருந்தாலும் மக்கள் மனதில் நினைத்ததை மாற்ற முடியாது என்பது தான் ஹரியானா தேர்தல் கருத்துக்கணிப்புகள் இம்முறை சொல்லும் பாடம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

VENKATASUBRAMANIAN
அக் 09, 2024 08:30

கருத்துக்கணிப்புகள் கருத்து திணிப்பு ஆகிவிட்டது. அதன் விளைவு இது


M.COM.N.K.K.
அக் 08, 2024 19:55

கருத்துக்கணிப்பு என்பது ஒரு பொழுதுபோக்கு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே


s.sivarajan
அக் 08, 2024 19:10

கருத்துக்கணிப்பு மட்டுமில்லை எதையுமே நம்பமுடியல


HoneyBee
அக் 08, 2024 17:01

பார்த்து இதை கூட ஓட்டு எந்திரங்கள் பாஜகவுக்கு தான் என்று மாற்றி அமைத்த மாதிரி இருக்கு என்று தோல்வி அடைந்த நாதாரிகள் கூட்டம் புலம்பும்.


Rangarajan Cv
அக் 08, 2024 13:32

Opinion polls are seeming to be farce, may be due to many issues. Instead of national media blindly engage them, better those psephologists/ firms do first introspection and build good model. I notice high percentage of failure by them.


RAMAKRISHNAN NATESAN
அக் 08, 2024 13:13

இப்படித்தான் தோணுது ..... பத்து கோரிக்கைகளில் நாலு நிறைவேற்றினால் கூட மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள் ..... இவர்களே இருந்துட்டுப் போகட்டும் என்று அடுத்த தேர்தலிலும் ஆதரிக்கிறார்கள் ..... உருப்படியா ஒன்னும் செய்யாமலேயே தாங்களே விளம்பரம் செய்துக்கிட்டா மக்களுக்கு வெறுப்பாயிடுது ..... இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும் .....


எஸ் எஸ்
அக் 08, 2024 12:36

சட்டீஸ்கர் மாநிலத்திலும் கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று எல்லா கருத்து கணிப்புகளும் கூறின. ஆரம்பத்தில் முந்திய காங்கிரஸ் பின்னர் பின்தங்கி பிஜேபி ஆட்சியை பிடித்தது


Palanisamy Sekar
அக் 08, 2024 12:29

காங்கிரஸ் இவ்வளவு கூட்டத்தை வைத்து கூட்டணி அமைத்தும் கூட ஹரியானாவில் கோட்டைவிட்டுவிட்டது என்றால் எந்த காலத்திலும் காங்கிரஸ் இந்த புனிதமான இந்தியாவில் தேறாது. ஒருமுறை ஆட்சியிலேயே மக்களுக்கு சலிப்பு தோன்றி எதிர்க்கட்சியை தேர்வு செய்வார்கள். அப்படி இல்லையென்றாலும் கூட இரண்டாம் முறையில் ஆளும் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு எதிர்க்கட்சியை தேர்வு செய்வார்கள். ஹரியானாவில் பார்த்தால் பாஜகவில் உள்ள உட்பூசலையெல்லாம் தாண்டி கூட காங்கிரஸ் கூட்டணி தேறவில்லை என்றால் காங்கிரஸ் மீதான மக்களின் வெறுப்பினை என்னென்பது? காலையில் அதற்குள் எவ்வளவு செய்திகள் பாஜகவுக்கு எதிராக. பொறுத்திருந்து காத்திருந்து எழுதுகின்றேன் மட்டற்ற மகிழ்ச்ச்சியுடன். இது மோடிஜியின் ஆட்சிக்கு கிடைத்த வெகுமதி. இனியேனும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் பாஜக மென்மேலும் செழித்து ஆட்சி புரிய வாழ்த்துக்கள்


பாமரன்
அக் 08, 2024 12:29

சுருக்கமாக சொன்னால் காஷ்மீர்ல ரெடி பண்ணி வச்சிருந்த லப்பர் இஷ்டாம்பு மற்றும் ஹரியானாவில் ரொப்பி வச்சிருந்த பொட்டிகளுக்கு வேலை இல்லாமல் போச்சு...


பாமரன்
அக் 08, 2024 12:27

கருத்து கணிப்பு முறை ஒரு டுபாக்கூர் என்று சென்ற பாராளுமன்ற தேர்தலில் படம் போட்டு காட்டியும் இன்னுமா இதை நம்பறாங்க ... நானும் இத்தனை வருஷமா ஓட்டு போடுறேன்... நோட்டாவுக்கு தான்... ஆனால் இதுவரை ஒரு தடவை கூட யாரும் என்னிடம் கருத்து கேட்கலை... அட என் பூத்தில்... கிட்டத்தட்ட ஆறு போலிங் ஸ்டேஷன் இருந்தும் யாரும் கருத்து கேட்டு பார்த்ததில்லை... அட கூலிப்படைகளா நீங்க யாராண்ட கேக்குறீங்க... தெர்ல...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை