உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் தேர்தல்: இன்று ஸ்ரீநகரில் மோடி பேரணி

காஷ்மீர் தேர்தல்: இன்று ஸ்ரீநகரில் மோடி பேரணி

ஸ்ரீநகர்: காஷ்மீர் சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று ஸ்ரீநகரில் பேரணி நடத்துகிறார். 90 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு செப்.18, செப். 25.,அக்.01 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்தது.இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி இன்று காஷ்மீர் வரும் பிரதமர் மோடி, ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார். அப்போது பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரமும் செய்கிறார்.முன்னதாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.ஏற்கனவே கடந்த 14-ம் தேதி தோடா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.மோடி வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்புபடையினர் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை