வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சாரி சாரியாக சுற்றுலா பயணிகள் வரவில்லை என்றால் அங்குள்ளவர்கள் பாடு திண்டாட்டம் தான். இனி சுற்றுலா பயணிகள் வருவது சந்தேகமே. அதனால் தான் இந்த புலம்பல். இது வரை வாய் திறக்காதவர்கள் திறக்கிறார்கள் என்றால் அடி மடியில் தீவிரவாதிகள் கை வைத்து விட்டார்கள். இன்னும் இரண்டு மாதங்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அது இப்போது நின்று விட்டிருக்கும். குல்மார்க் பகுதியில் ஆயிரக்கணக்கான குதிரைகளுக்கு வியாபாரத்தை தருவது இந்த சுற்றுலா, குல்மார்க் உலகின் அழகிய சுற்றுலா இடம், சோன்மார்க் மற்றும் குல்மார்க் பகுதிகளில் பயணம் செய்ய தனியாக கட்டணம், குதிரை சவாரிக் கட்டணம், விஞ்ச் கட்டணம் என்று கட்டணக்கணக்கில் மக்கள் ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கில் சிலவு செய்கின்றனர். அவை அனைத்தும் இப்போது இல்லை. வாழ்வாதாரத்தில் கை வைத்து விட்டார்கள் இந்த தீவிரவாதிகள். அந்த பயம் இப்போது காஷ்மீரிகளுக்கு வந்து விட்டது. தீவிரவாதத்தின் பிடியில் இருந்து வெளிப்பட்டு இப்போது தான் சுதந்திரக்காற்றை சுமார் நாற்பது ஆண்டுகள் கழித்து காஷ்மீரிகள் அனுபவிக்கிறார்கள். அது பொறுக்கவில்லை பாகிஸ்தான அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும்.
மேலும் செய்திகள்
மின் திருட்டுக்கு துணை போகும் ஆளுங்கட்சி புள்ளி!
02-Apr-2025