உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கீழடி! சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக அறிவிப்பு

அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கீழடி! சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசின் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.கலாசாரம், இயற்கை வளங்களை பாதுகாத்து மேம்படுத்தும் கிராமங்களை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த சுற்றுலா கிராம விருதுகள் கடந்தாண்டு முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2024ம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா கிராம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 991 விண்ணப்பங்கள் இதற்காக தருவிக்கப்பட்டு இருந்தன.8 பிரிவுகளின் கீழ் சிறந்த சுற்றுலா கிராமங்கள் என 36 கிராமங்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த கீழடி, பாரம்பரிய பிரிவின் கீழ் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆன்மிகம், ஆரோக்கியம் என்ற பிரிவின் கீழ் தமிழகத்தில் உள்ள மேல்காலிங்கம்பட்டி சிறந்த சுற்றுலா கிராமமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த விவரத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது; உலகின் முன்னோடி இனமான பழந்தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கும் கீழடியில், மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், ரூ.18.8 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. பழந்தமிழ் சமூகத்தின் முற்போக்கு சிந்தனைகள் பொருந்திய ஏறத்தாழ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியகத்தை உள்ளம் குளிர கண்டு களிக்கின்றனர். மத்திய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் வழங்கப்படும் 'சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது, திராவிட மாடல் அரசுக்குப் பெருமை. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
செப் 28, 2024 20:26

முறையான பராமரிப்பு, சரியான கண்காணிப்பு இல்லாவிட்டால், சமூக விரோதிகள் அடைக்கலமாக ஆகிவிடும். பாதுகாக்க வேண்டியது மாநில காவல்துறையினர், சமூக சேவகர்கள் மற்றும் சேவை மனப்பாங்கு உள்ள பொதுமக்கள்.


ManiK
செப் 28, 2024 19:06

இத கட்டியது அதிமுக ஆட்சியில், அகழ்வாராய்ச்சி செய்தது மத்திய அரசு. தமிழன் கிமிளன்னு ஒட்டு மீசமுறுககி கூவினதை தவிர இந்த திமுகவும் temporaryly மறைந்துபோன fake போராளிகளும் செய்தது என்ன?!


venugopal s
செப் 28, 2024 22:53

மத்திய தொல்லியல் துறை கீழடி அகழ்வாய்வை தொடர்ந்து செய்ய மறுத்து விட்டது. அதனை தொடர்ந்து செய்து முடித்தது மாநில தொல்லியல் துறை தான்!


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 28, 2024 18:57

இன்னும் சில நூறு ஆண்டுகள் கழித்து தோண்டினால் தமிழகத்தில் டாஸ்மாக் பாட்டில்கள் மட்டும்தான் கிடைக்கும்.


Ramesh Sargam
செப் 28, 2024 20:23

சரியாக கூறினீர்கள்.


Rajan
செப் 28, 2024 18:48

முன்னோடிகள் விடுங்க, பின்னோடிகள் பற்றி கவலை படுங்க. வரிகளை வரிசையாக ஏற்றி, விலைவாசி முன்னேறி, மக்கள் கீழ் அடியில் இருக்கிறார்கள்


Ravi Kumar Damodaran
செப் 28, 2024 18:40

மிகவும் நல்ல செய்தி.


Apposthalan samlin
செப் 28, 2024 18:08

இன்னும் தளபதி ஆட்சி 2026 2031 அமைய வேண்டும் இந்தியாவில் நம்பர் 1 ஆக மாற்றி விடுவார்


புதிய வீடியோ