உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தோல்வி பயத்தில் புலம்பும் கெஜ்ரிவால்; பா.ஜ., விமர்சனம்

தோல்வி பயத்தில் புலம்பும் கெஜ்ரிவால்; பா.ஜ., விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி பயத்தின் காரணமாக, ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் புலம்பி வருவதாக பா.ஜ, விமர்சனம் செய்துள்ளதுகடந்த 5ம் தேதி டில்லி சட்டசபைக்கு நடந்த ஓட்டுப் பதிவில், 60 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என, தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனை ஆம்ஆத்மி கட்சி ஏற்க மறுத்து வருகிறது. மீண்டும் 3வது முறையாக ஆட்சியை தக்க வைப்போம் என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இதனிடையே, 16 ஆம்ஆத்மி வேட்பாளர்களுக்கு தலா ரூ.1 கோடி கொடுத்து பா.ஜ., தங்கள் வசம் இழுக்க முயற்சிப்பதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதேபோல, 7 ஆம்ஆத்மி வேட்பாளர்களை இழுக்க ஆபரேசன் லோட்டஸ் திட்டத்தை பா.ஜ., செயல்படுத்தி வருவதாக ஆம்ஆத்மி ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங்கும் குற்றம்சாட்டியிருந்தார்.இந்த நிலையில், ஆம்ஆத்மியின் இந்த குற்றச்சாட்டு குறித்து டில்லி பா.ஜ., தலைவர் விரேந்திரா சச்தேவா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'தேர்தல் தோல்வி பயம் காரணமாக, கெஜ்ரிவால் இதுபோன்று பேசி வருகிறார். 'சஞ்சய் சிங் தன்னுடைய கருத்துக்களை திரும்பபெற வேண்டும். அவரது இந்தப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,'எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Venkatesh
பிப் 07, 2025 13:17

சீண்டுவது வேலை இல்லை..... ஊழல் செய்து கொள்ளை அடித்து வாழும் ஒரு கேடு கெட்ட ஆள்.... பிஜேபி எதிர்ப்பு என்ற நினைப்பில் அனைத்து ஊழல் பேர்வழிகளையும் தூக்கி பிடிக்கும் உங்களை போன்ற வெட்கங்கெட்ட பிறவிகள் நாட்டின் சாபக்கேடு


Raman
பிப் 07, 2025 12:28

At last good things on the way to Delhi.. AAP into the oblivion


Kuppusamy
பிப் 07, 2025 11:31

பிஜேபி வெச்சது தான் sattam


Barakat Ali
பிப் 07, 2025 10:59

பாஜக ஆட்சி அமைத்தாலும் கெஜ்ரியை இனி சீண்டிப்பார்க்காது... அதற்குத் தேவை காசு, பணம், துட்டு மணி மணி .....


vijai hindu
பிப் 07, 2025 12:32

வாய மூடும்


அப்பாவி
பிப் 07, 2025 10:06

மூணு தடவை ஜெயிச்சாச்சு. மக்கள் மாற்றத்தை விரும்பி ஒட்டளித்தாலும் விந்தை இல்லை.


சமீபத்திய செய்தி