உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கணும்; தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் கடிதம்

பா.ஜ.,வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கணும்; தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆம்ஆத்மி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.,வினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.டில்லி சட்டசபைக்கு வரும்(பிப்.) 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. 8ம் (பிப்.) தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pognh0v2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கெஜ்ரிவால் மீதான ஊழல் குற்றச்சாட்டை முன்னிறுத்தி பா.ஜ.,வினர் தொடர்ந்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, ஆம்ஆத்மி கட்சியினர் மத்திய பா.ஜ., அரசை விமர்சித்து பிரசாரம் செய்து வருகின்றனர். இதனிடையே, ஆம்ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த ஆம் ஆத்மி கட்சியினர் மீது பா.ஜ.,வினர் மற்றும் ரவுடிகள் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பெண் தொண்டர்களை தொந்தரவு செய்ததாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது. இந்த நிலையில், தங்கள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.,வினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். முறையான பாதுகாப்பு வழங்காத போலீசாரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்திய அவர், தேர்தல் கண்காணிப்பாளர்களை புதுடில்லி தொகுதியில் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஆம் ஆத்மி தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V வைகுண்டேஸ்வரன்,chennai
பிப் 02, 2025 21:36

உம்மை வெளியே விட்ட மன்றத்தை சொல்லனும்


MARUTHU PANDIAR
பிப் 02, 2025 20:48

இவர் காலிஸ்தான் தீவிரவாதிகளை வைத்து போலி விவசாயிகள் போராட்டம் நடத்தியவர்.இந்த நாட்டைப் பீடித்த பெரும் சாபக்கேடு .இம்முறை இவரை ஜெயிக்க விட்டால் அதோ கதி தான்.


MARUTHU PANDIAR
பிப் 02, 2025 20:44

இவர் போடும் வேஷத்தைப் பார்த்தீர்களா ? .ஒரு ஐ.ஆர்.எஸ் ஆக அருகதை அற்றவர். அண்ணா ஹசாரேயின் செல்வாக்கை களவாடி பதவியை பிடித்து அந்நியனுக்கு உளவு வேலை பார்த்து சொந்த நாட்டின் பாதுகாப்பு , மற்றும் வளர்ச்சியின் மீதும் தடியடி நடத்திக் கொண்டு இருக்கும் வேஷதாரி .


Rajan A
பிப் 02, 2025 20:25

கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஃபராடை வெளியே சுற்ற விட்டதற்கு.


M Ramachandran
பிப் 02, 2025 17:12

அசிங்கம் பிடித்தவனெ. யூன் புளுகு நாறிப்போனாய் நீதி மன்றம் வரைக்கும் போயும் உனக்கு புத்தியில் ரசிக்க வில்லை. டில்லி மக்கள் விரட்டும் போது தான் தற்கு விடிவு


SUBBU,MADURAI
பிப் 02, 2025 16:00

Even the worst pathological liar in the world will hang his head in shame listening to Kejriwal. He gets emboldened after each lie as no action is taken against him.


சமீபத்திய செய்தி