உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்.எஸ்.எஸ்., தலைவருக்கு கெஜ்ரிவால் 5 கேள்விகள்

ஆர்.எஸ்.எஸ்., தலைவருக்கு கெஜ்ரிவால் 5 கேள்விகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி, செப். 23-டில்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின், ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்திற்கு ஐந்து கேள்விகளை எழுப்பினார்.

கேள்விகள் என்ன?

1 அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர், 75 வயதில் ஓய்வு பெற்றனர். பா.ஜ.,வின் இந்த விதி, மோடிக்கு பொருந்தாது என அமித் ஷா கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன? 2 எதிர்க்கட்சியில் இருக்கும் தலைவர்களை ஊழல்வாதிகள் என, பா.ஜ., அழைக்கிறது. பின், அவர்களையே கட்சியில் இணைத்துக் கொள்கிறது. இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?3 'பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., தேவையில்லை' என அக்கட்சி தலைவர் நட்டா கூறிய போது, நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?4 விசாரணை அமைப்புகளை ஏவி, எதிர்க்கட்சிகளை உடைத்து, ஆட்சியை கவிழ்த்து, பா.ஜ., தற்போது செய்து வரும் அரசியல், உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?5பா.ஜ.,வின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்., தன் குழந்தை தவறு செய்யும்போது, கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு தாய்க்கு உள்ளது. மகன் தற்போது பெரிய மனிதராகி விட்டார். அவர் தவறு செய்யும் போது அதை தட்டிக் கேட்க வேண்டியது உங்கள் பொறுப்பு இல்லையா?இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கெஜ்ரிவால் பொதுக்கூட்டத்துக்கு போட்டியாக, ஆம் ஆத்மி அரசை கண்டித்து, ஜந்தர் மந்தரில் இருந்து 1 கி.மீ., தொலைவில் உள்ள கனாட் பிளேஸ் என்ற இடத்தில், நேற்று பா.ஜ., போராட்டம் நடத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R K Raman
செப் 23, 2024 17:40

இவருக்கு சில கேள்விகள் ௧. அரசியல் வேண்டாம் என்று முதலில் சொல்லி விட்டு பிறகு கட்சி ஆரம்பித்து உண்மையா? ௨. அன்னா ஹசாரேவை கழற்றி விட்டது ஏன்? ௩. பிரசாந்த் பூஷன் யோகேந்திர யாதவ் போன்றவர்கள் ஒதுங்கியது ஏன்? ௪. காங்கிரஸ் ஊழல் பேர்வழி என்று சொல்லிவிட்டு பிறகு அவர்களுடன் கூட்டு ஏன்? ௫. கட்சி விவகாரத்தில் உம் மனைவி ஏன் தலையிடுகிறார்?


THERESHM P.M.PERUMAL
செப் 23, 2024 12:03

நான் ஒரு சாதாரண உறுப்பினர் சங்கத்தின் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல கடமை பட்டு உள்ளேன் கேஜெரிவால் அவர்களே 1 பிஜேபி கட்சியின் உள்ள உள் விவாகரம் இதை மாற்று கட்சிகாரர்கள் யோசிக்க தேவையில்லை. ஊழல் செய்யும் நபர்களை கட்சியில் சேர்க்க கூடாது என்ற சட்ட வரைமுறை ஏதவது உள்ளதா குற்றச்சாட்டு உள்ள நபர் பிஜேபி யில் இணைந்த பிறகு அவருடைய அவரின் குற்றச்சாட்டு இல்லை என்பதற்க்காக ஏதவது நீதிபதிகள் நிர்பந்திக்க பட்டு உள்ளார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா. சங்கம் என்றும் தாய் அமைப்பு தான் தாய் தனது பிள்ளைக்கு அறிவு திறன் இல்லாத வயதில் சொல்லிக்கொடுக்கலாம் அதே குழந்தை வளர்ந்து வந்த பின்பு தெரிந்த விஷயங்களை சொல்லி கொடுக்க முடியுமா


NAGARAJAN
செப் 23, 2024 11:24

மிகச்சிறந்த கேள்விகள். . நாட்டின் குடிமக்கள் அனைவரின் கேள்வியும் அதுதான். . ஆனால் இவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். .


S. Neelakanta Pillai
செப் 23, 2024 11:15

முதலில் சிபிஐ கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும், அதன் பிறகு நீங்கள் மற்றவர்களை கேள்வி கேட்கலாம். சொல்லுங்கள் எப்படி கொள்ளையடிக்கிறீர்கள், கொள்ளையடித்த பணத்தை எங்கு வைத்திருக்கிறீர்கள்


Kasimani Baskaran
செப் 23, 2024 05:53

ஆர் எஸ் எஸ் என்ன இவர்கள் சொல்லித்தான் செயல்பட வேண்டுமா? சாராய வியாபாரிகளுடன் உயர் தொழில் நுணுக்கம் மூலம் உறவு வைத்து கள்ளத்தனமாக சம்பாதிப்பது நீதிமன்றத்தில் நன்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஜாமீனில் இருக்கும்பொழுது வெட்டி வேலைகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.


Sathyanarayanan Sathyasekaren
செப் 23, 2024 03:08

ஊழலால் சிறைக்கு சென்ற இவன், RSS பற்றி கேள்வி கேட்க தகுதியற்றவன். முதலில் ஊழல் கரை படிந்த கான் ஸ்கேம் காங்கிரெஸ் உடன் கூட்டணி சேரமாட்டேன் என்று சொல்லி அவர்களை எதிர்த்து கட்சியை துவங்கி பின் அவர்களுடனே கூட்டணி எப்படி வைத்தான் என்ற கேள்விக்கு பதில் சொல்லவேண்டும். இவனுக்கு ஜாமின் கொடுத்த நீதிபதிகள், கேவலப்படுத்தியுயம் எப்படி சொரணையற்று பிறரை கேள்வி கேட்கிறான்? மோடிஜி பதிவில் இருப்பதும் இல்லாததும் பிஜேபியின் உட்கட்சி பிரச்னை. அது பற்றி இந்த திருடனுக்கு என்ன கவலை. இவன் திருடுவதை அவர் தடுப்பதால் இந்த வெறி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை