உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்டணியை உடைக்க கெஜ்ரிவால் மூவ்: நிதிஷ், சந்திரபாபுவுக்கு கடிதம்

கூட்டணியை உடைக்க கெஜ்ரிவால் மூவ்: நிதிஷ், சந்திரபாபுவுக்கு கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பி.ஆர்.அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு குறித்து ஆழ்ந்து சிந்திக்க வலியுறுத்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளான ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.இந்த கடிதங்களை தன் 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்து, அவர் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியை அவமதித்த பா.ஜ.,வை அம்பேத்கரை நேசிப்பவர்களால் ஆதரிக்க முடியாது. இதுபற்றி நிதிஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும் சிந்திக்க வேண்டும்.அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் கருத்து, அவமரியாதைக்குரியது மட்டுமல்ல, அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பு மீதான பா.ஜ.,வின் கண்ணோட்டத்தையும் வெளிப்படுத்தியது. அம்பேத்கர் குறித்து அமித் ஷா பார்லிமென்ட்டில் வெளியிட்ட அறிக்கை ஒட்டுமொத்த தேசத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி மற்றும் ஒடுக்கப்பட்ட உரிமைகளுக்காகப் போராடிய அம்பேத்கருக்கு எதிராக பா.ஜ., எப்படி இப்படி ஒரு கருத்தைச் சொல்லத் துணிகிறது? இது நாடு முழுதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது.பாபாசாகேப் அம்பேத்கர், ஒரு தலைவர் மட்டுமல்ல. நம் தேசத்தின் ஆன்மா. பா.ஜ.,வின் இந்த அறிக்கைக்குப் பிறகு, இந்த விஷயத்திலும் நீங்கள் ஆழமாக சிந்திப்பீர்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு அதில் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தவர் அல்ல!

நவீன இந்தியாவின் கடவுளுக்கு அம்பேத்கர் எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை. பாபா சாகேப் அம்பேத்கர் அல்லது பா.ஜ., இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அமித்ஷாவின் வார்த்தைகள் அம்பேத்கரை மிகவும் வேதனைப்படுத்துவதாகவும், அவமானப்படுத்துவதாகவும் இருந்தது. அவர் பேசிய தொனியில், பாபா சாகேபை எவ்வளவு வெறுக்கிறார் என்று தெரிந்தது. முதலில் அவர் வாயில் இருந்து வந்ததாக நினைத்தேன். ஆனால் அடுத்த நாள் அவரது பேச்சை பிரதமர் நரேந்திர மோடியும் ஆதரித்தார். - அரவிந்த் கெஜ்ரிவால்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

naranam
டிச 21, 2024 03:27

போதும் அம்பேத்கர் பாட்டு. செயலில் காட்டவும்..என்ற அர்த்தத்தில் தான் அமித்ஷா பேசினார்.


V வைகுண்டேஸ்வரன் , Chennai
டிச 20, 2024 22:12

பாவம் கேஜரிவால் தம்பிக்கு நிதீஷ் பற்றி தெரியாது. அவர் கட்சி தலைவர் சரத் யாதவ் பதவியை தூக்கி விட்டார். நீ எல்லாம் சும்மா அவருக்கு. நீர் இன்னும் LKG ஃபெயில் .அவங்க அரசியலில் முனைவர். கொஞ்சம் சூதானமாக இருங்க கெஜ்ரி


வாசகர்
டிச 20, 2024 19:04

போப்பே நீயே வர்ற டெல்லி தேர்தலில் மண்ணை கவ்வுவது உறுதி. நிதிஷ் மற்றும் நாயுடு அரசியலில் நீ படித்த பள்ளிக்கு தலைமை ஆசிரியர்.


Nagarajan S
டிச 20, 2024 19:01

அமித்ஷா அம்பேத்கரை பற்றி எதுவும் தவறாக பேசவில்லை. எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவது ஒரு பேஷனாக போய்விட்டது, என்றுதானே கூறினார். இதில் என்ன அவமதிப்பு இருக்கிறது? ஆம் ஆத்மி கட்சியும் இண்டி கூட்டணி கட்சிதானே, அதனால் வேண்டுமென்றே பிஜேபி கூட்டணியை உடைக்க சதிசெய்கிறார். சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ் குமாரும் மசிய மாட்டார்கள்.


Dharmavaan
டிச 20, 2024 18:46

இந்த திருடன் சகுனி வேலை செய்கிறார். சிண்டு முடியும் வேலை இருவரும் அடிபட்டவர்கள்.இவரை மதிக்க மாட்டார்கள்.தூக்கி எறிவார்கள்


Venkatesan Srinivasan
டிச 20, 2024 15:14

திராவிட மாடலின் வார்த்தை ஜாலங்கள் - ஒடுக்கப்பட்ட மக்கள் - தாழ்த்தப்பட்ட மக்கள் - சமூக நீதிக்கு எதிரான- மக்கள் விரோதம்- மாற்றுக்கருத்து இல்லை - வாழ்வாதாரம் பாதிப்பு - சிறுபான்மையினர் - ஆட்சி கட்டில் - ஆட்சி அதிகாரம் - குந்தகம் விளைவித்தல் -மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட - பெரியார் மண் - திராவிட மண் - திராவிட பாரம்பரியம் - அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான - ஒன்றிய அரசு ஓரவஞ்சனை - அடிப்படை உரிமை - மத நல்லிணக்கம் பாதிப்பு - மதச்சார்பின்மை - திட்டமிட்ட பொய் பிரச்சாரம் - அடிப்படை ஆதாரமற்ற பொய்கள் - இனவாதம் -மொழி வெறி - மொழி திணிப்பு - கருத்து திணிப்பு - பார்ப்பனீயம் - எந்த கொம்பனும். எங்காவது மாடு கன்று போடுவதில் சிக்கல் ஆனாலும் மேற்கூறிய வார்த்தை ஜாலங்கள் மூலம் ஒன்றியத்தை குறை சொல்வார்கள் .


Rajasekar Jayaraman
டிச 20, 2024 13:47

இந்த கொள்ளை கூட்ட தலைவனை வெளியே விட்டது தப்பு.


RAMAKRISHNAN NATESAN
டிச 20, 2024 13:35

பாஜக இவர் மீது எடுத்த நடவடிக்கையை எந்தக்கோர்ட்டும் பழிவாங்கல் என்று சொல்லவில்லை ..... ஜாமீனில் வந்து அவதூறு பரப்புவது ஏன் ???? சட்டப்படி நடவடிக்கை எடுத்துவிட்டார்களே என்கிற ஆத்திரம் ....


Sivasankaran Kannan
டிச 20, 2024 13:17

kejariwal ஒரு ........


Raju
டிச 20, 2024 12:14

நாயுடுவும் நிதிஷ் ம் ஒரு வார்த்தை அண்ணா ஹசாரே கிட்ட கெட்டுக்ககிடுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை