உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் 5 பேர் பலி! காரும், அரசு பஸ்சும் மோதியதில் பயங்கரம்

கேரளாவில் எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் 5 பேர் பலி! காரும், அரசு பஸ்சும் மோதியதில் பயங்கரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆலப்புழா; கேரளாவில் காரும், அரசு பஸ்சும் மோதிக் கொண்ட விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் உடல்நசுங்கி பலியாகினர். இது பற்றிய விவரம் வருமாறு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0v34u4fc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கேரள மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பயிலும் சிலர் கார் ஒன்றில் சென்று கொண்டு இருந்தனர். காலர்கோடு பகுதியில் அவர்கள் கார் வந்தபோது அந்த கோரம் அரங்கேறியது. அதே ரோட்டில் எதிரே வந்த அரசு பஸ்சும், இவர்கள் வந்த காரும் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் காரில் இருந்தவர்களில் 5 பேர் காருக்குள்ளே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மோதிய வேகத்தில் கார் அப்பளமாக நொறுங்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஊர் மக்களின் உதவியுடன் காரில் இருந்த சடலங்களை அவர்கள் மீட்டனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது; காரில் எத்தனை பேர் பயணித்தனர் என்பது தெரியவில்லை. 5 பேர் பலியாகிவிட, அவர்களின் பெயர், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. அனைவரும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் என்பது மட்டும் தெரிந்துள்ளது. 5 சடலங்களுடன் காரில் இருந்த சிலரும் மீட்கப்பட்டு உள்ளனர். படுகாயம் அடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். பஸ்சில் பயணித்தவர்களில் சிலரும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. வேறு எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

DJ Serve Life
டிச 04, 2024 10:16

ஸ்பீட் லிமிட்: allowing for smooth acceleration and deceleration


நிக்கோல்தாம்சன்
டிச 03, 2024 12:01

இங்கே பொதுவான கருத்து ஒன்றை பார்க்க முடிகிறது அதாவது மாணவர்கள் பக்கமே தப்பு இருப்பதாக சொல்லியுள்ளீர்கள் , ஆனால் கேரளா rtc பஸ்களின் ட்ரைவர்களின் மனோபாவத்தையும் ங்கே கவனியுங்க ப்ளீஸ் , அவர்கள் வந்தால் எந்த வண்டியும் சாலையை விட்டு விலகி வழிவிடவேண்டும் என்று தான் அந்த டிரைவர்கள் நினைக்கிறார்கள் , அதனையும் கருத்தில் கொள்ளுங்க நண்பர்களே , இது கருநாடக குண்டலுபேட் என்ற ஊரிலும் கேரளா rtc ட்ரைவர்களின் அட்டூழியத்தை கண்ட பிறகு இதனை எழுதுகிறேன்


வைகுண்டேஸ்வரன்
டிச 03, 2024 10:50

ரொம்ப வருத்தமாக இருக்கிறது. மருத்துவம் பயில்கிறவர்களுக்கு அறிவு முதிர்ச்சி இல்லையா? வேகமாகப் போவதால் என்ன சாதிக்கிறார்கள்? இது கேரளாவில் என்பதால் திராவிட விடியல் அரசு விமர்சிக்கப்படவில்லை. இங்கேயா இருந்தால் போட்டு தாக்கியிருப்பாங்க ல்ல


Sudha
டிச 03, 2024 10:01

முதல் விசாரணை அருகே உள்ள கள்ளுக்கடையில் நடத்த வேண்டும்


SIVAMANI P V
டிச 03, 2024 11:37

மிகவும் சரியான பதில்


M Ramachandran
டிச 03, 2024 09:41

போதையில் இருக்கும் இளஞ்சர்கள் கார் ஓட்ட கூடாது. ட்ரைவரை வைத்து கார் ஒட்டி இருக்க வேண்டும்


ديفيد رافائيل
டிச 03, 2024 07:35

Car ல் over speed போனா இப்படி தான் நடக்கும். இதே average speed போயிருந்தா தப்பியிருக்கலாம் அல்லது less injury தான் இருக்கும். அடுத்தவன பார்த்தும் திருந்த மாட்டாங்க, தனக்கு நடந்தா மட்டும் தான் உயிரோட இருக்குறவனுங்க திருந்துறானுங்க.


புதிய வீடியோ