உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரள முதல்வர் மகள் வீணா மீது மோசடி வழக்கு; விசாரணையை துவக்கியது அமலாக்கத்துறை!

கேரள முதல்வர் மகள் வீணா மீது மோசடி வழக்கு; விசாரணையை துவக்கியது அமலாக்கத்துறை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், கொச்சி மினரல்ஸ் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா. இவர், பெங்களூரை தலைமையிடமாக வைத்து, 'எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ்' என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இந்த நிறுவனத்தின் கணக்குகளை வருமான வரித்துறை பரிசோதித்ததில், 'கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூடைல்' எனும் நிறுவனம், 1.72 கோடி ரூபாய் செலுத்தி இருப்பதை கண்டுபிடித்தது. எக்சாலாஜிக் நிறுவனம் அதற்காக எந்த சேவையையும் கொச்சின் மினரல்சுக்கு வழங்கவில்லை எனவும் தெரிவித்தது.இதையடுத்து, மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத் துறையின் விசாரணைப் பிரிவான, தீவிர மோசடி விசாரணை அலுவலகம், எக்சாலாஜிக் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத் துறையில் புகார் அளித்தது. புகாரை ஏற்ற அமலாக்கத்துறை, எக்சாலாஜிக் நிறுவனம், அதன் நிர்வாகியான வீணா மற்றும் பலர் மீது சட்டவிரோத பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், கொச்சி மினரல்ஸ் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் 25 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வீணாவும், அவரது நிறுவனமும், ரூ.2.73 கோடி வரை சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

naranam
ஏப் 04, 2025 18:29

கம்மிகளின் கள்ளத்தனம் இது தான்.


என்றும் இந்தியன்
ஏப் 04, 2025 16:55

வீணா - வீணாப்போனவர்... வீணான காரியங்கள் செய்கின்றவர்


M R Radha
ஏப் 04, 2025 15:40

அட லெனினே நீ கண்டு புடிச்ச ஒரு தத்துவம் ஒன் நாட்டிலேயே செத் போச். இங்கே அந்த செத் போன பொணத்த வச்சி எப்டியெல்லாம் கொள்ளை அடிக்குறாங்க பார்ப்பா.


sankaranarayanan
ஏப் 04, 2025 13:46

கம்மி ஆட்சியில் குடும்பத்தினர் பணம் அடைந்தால் யாருமே கேட்க முடியாதாம் பிறகு அவர்கள் சீனாவிற்கே ஓடிப்போயிடுவார்களாம் அல்லது சீனப்படை இங்கே வந்துவிடுமாம் ஜாக்கிரதை


A1Suresh
ஏப் 04, 2025 12:54

கேரளாவில் 1 கோடி ரூபாய் என்னும் அளவில் சில்லறை ஊழல்கள் தான். மாறாக தமிழகத்திலோ லட்சம் கோடி அளவில் ஊழல் நடக்கிறது.


Ray
ஏப் 04, 2025 12:18

இந்த வழக்கில் எப்பாடுபட்டாவது பாகிஸ்தான் தொடர்புள்ளதுன்னு அடித்து சொல்லணும் அதையெல்லாம் நிரூபிக்க வேண்டிய நிர்பந்தமெல்லாம் கிடையாது சீக்கிரமா அடிச்சுவிடுங்கோ அதுசரி இன்னும் கணவன் மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகளையெல்லாம் கைது செய்யாமல் இருப்பது சரியா வரும் தேர்தலில் ஜெயிக்கணுமே.


Barakat Ali
ஏப் 04, 2025 12:50

குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்தால் தேர்தலில் ஜெயிக்கலாம் என்றால் தமிழக துக்ளக் மன்னர் குடும்பம் இதுகாறும் தப்பித்தது எப்படி ????


Ray
ஏப் 04, 2025 18:46

போயிட்டு வந்தவர்களை ஆட்சியில அமர்த்தி அழகு பார்த்ததோடு பூங்கொத்தோடு வந்து பார்த்தது எப்படி? சிறை செல்லாமல் வழியனுப்பி வைத்ததெப்படி? எல்லாமே பார்த்திருக்கிறோமே


Barakat Ali
ஏப் 05, 2025 10:41

ஆமாம் ..... வாரிச்சுருட்டுபவர்களை பாஜகவுக்கு மிகவும் பிடிக்கும் ..... நாணயமும் வெளியிடுவார்கள் .... பாராட்டுப்பத்திரம் வாசிப்பார்கள் .....


Amar Akbar Antony
ஏப் 04, 2025 11:43

மாநில சுயாட்சியில் ஒன்றிய அரசு தலை இடுகிறது. முதல்வர்.


Raghavan
ஏப் 04, 2025 11:27

சிறுபான்மையினர் மீது வழக்குகளோ அல்லது புகார்களோ பத்தியக்கூடாது என்று ஒரு சட்டம் போட்டுவிட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்கள் எங்கும் புகுந்து விளையாடலாம். உங்களை முதல்வராகவோ அல்லது அமைச்சர்களாகவோ பதவியில் உட்காரவைத்தால் இந்த நாடு வெகு சீக்கிரம் சோமாலியாக மாறிவிடும் .


C.SRIRAM
ஏப் 04, 2025 11:26

என்னது? இப்போது தான் அனுமதியா? விளங்கிடும். ஒருவேளை ஆதாரங்களை முழுவதும் அழிக்க வேண்டுமென்று அதிக நேரம் கொடுப்பர்களோ ?.


Barakat Ali
ஏப் 04, 2025 11:18

வீணா விஜயனின் கணவர் முகம்மது ரியாஸ் சிறுபான்மையினர்.. ஆகவே வீணா விஜயன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது ......


Anand
ஏப் 04, 2025 11:33

திமுக வழக்கு தொடுக்கும்....


RAMAKRISHNAN NATESAN
ஏப் 04, 2025 11:59

ஆ ராசா பட்டியலினத்தவர் என்பதால்தானே அவர் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறீர்கள்.. இப்படித்தான் கேட்டார் கருணாநிதி. அவரு எங்க ஆளு ..... அவர் மீது நடவடிக்கை கூடாது ன்னு பல பேரு கெளம்புனா அப்புறம் எதுக்கு ஜனநாயகம் ? எதுக்கு சட்டம் ?


தமிழ்வேள்
ஏப் 04, 2025 13:02

நேரடியாக, பாகிஸ்தான் தொடர்பில் இருப்போர், குண்டு வைத்து போதை கடத்தி தேச துரோகம் செய்வோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சொல்லலாமே ...


சமீபத்திய செய்தி