உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவைச் சேர்ந்த போதைப்பொருள் மாபியாவின் முக்கிய நபர் கைது

கேரளாவைச் சேர்ந்த போதைப்பொருள் மாபியாவின் முக்கிய நபர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த போதைப்பொருள் மாபியாவின் முக்கிய நபரை என்.சி.பி., அதிகாரிகள் கைது செய்தனர். அவனிடம் இருந்து பல லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் எடிசன் பாபு,35, என்பவரை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர். புனே, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்த எடிசன் பாபு, ஆலுவாவில் ஹோட்டல் தொழிலை தொடங்கினார். கொரோனாவுக்குப் பிறகு ஹோட்டலை மூடிய இவர், பிறகு மருந்து விற்பனையில் இறங்கினார். அதன்பிறகு, 'கெட்டமெலான்' என்ற பெயரில் நாட்டின் மிகவும் பிரபலமான டார்க்நெட் போதைப்பொருள் கும்பலை அவர் நடத்தி வந்துள்ளார். எடிசன் பாபுவை பிடிக்க 'மெலோன்' என்ற பெயரில் என்.சி.பி., அதிகாரிகள் ஆபரேஷனை தொடங்கினர். ஒரு வாரம் விழிப்புடன் செயல்பட்ட அதிகாரிகள், மிகப்பெரிய போதைப்பொருள் விற்பனையாளர் எடிசன் பாபுவை கைது செய்தனர். மேலும், அவனிடம் இருந்து கெட்டமைன், எல்.எஸ்.டி., உள்ளிட்ட போதைப்பொருட்களையும், ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அதேபோல, இந்த வழக்கில் அருண் தாமஸ் மற்றும் தியோலை என்.சி.பி., அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை