உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளா சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

கேரளா சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கேரளாவில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, 60க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, 18 வயது தடகள வீராங்கனை புகார் அளித்த சம்பவம் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த, 18 வயதாகும் தடகள வீராங்கனை, குழந்தைகள் நலத்துறையில் சமீபத்தில் புகார் அளித்தார். அதில், தன் 13வது வயதில், ஆபாச வீடியோக்களை காட்டி, பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் அவரது நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். குழந்தைகள் நலத்துறை பரிந்துரையின்படி, இது குறித்து 'போக்சோ' சட்டத்தின் கீழ், பத்தனம்திட்டா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.முதற்கட்ட விசாரணையில், ஐந்து ஆண்டுகளில், சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர், அவரது நண்பர்கள் மற்றும் சிறுமியின் பயிற்சியாளர் உட்பட, 60க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக இதுவரை, 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட தடகள வீராங்கனை, காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். 60க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, 18 வயது தடகள வீராங்கனை புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், 5 ஆண்டுகளாக சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

skv srinivasankrishnaveni
ஜன 13, 2025 07:47

எல்லா கழிசடை பேய் நாய்களை பப்லிக்லேயே சுட்டுத்தள்ளவேண்டும் வெறிநாய்க்கூட்டங்களை அழிக்கவேண்டும் வயசுபேதம் இல்லாமல் கருணையும் வேண்டாம் அதென்னங்க பொண்ணுகளை நாசம் செய்றாங்க நாசமாப்போக


ஆரூர் ரங்
ஜன 12, 2025 18:44

திலீப் வழக்கு நடக்கும் லட்சணம் எல்லோருக்கும் தெரியும். இதற்கும் அதே கதிதான்.


Mmurugesan
ஜன 12, 2025 15:48

கேரளா நீதிபதிகள் இந்த மாதிரி பாலியல் தொந்தரவு நடக்காமல் இருக்க கடுமையான தண்டனையை சிந்தித்து அறிவிக்கலாமே


அன்பு
ஜன 12, 2025 18:05

அங்கேயும் திராவிட மாடல் பரவி வருகிறது.


Nagarajan D
ஜன 12, 2025 13:33

மெத்த படித்தவர்கள் மாநிலம் கேரளம் பெருமையாக இருக்கிறது. கேவலம்... சரி இந்த ஆணையம் பூனையும் இதுவரை எத்தனையோ அறிக்கை தாக்கல் செய்துள்ளது ஆனால் அதனால் நடந்த ஒரு நன்மையை யாரவது சொல்லுங்கள்.. உபயோகமில்லாத வேலை... தண்டனைகள் துரிதமாக கடுமையாக இருக்கும் வரை குற்றங்கள் தொடரும்... காரணம் நீதித்துறை தான்


rvijaykumar Kumar
ஜன 12, 2025 13:33

5 வருஷம் எப்படி நடந்தும் சொல்லாமா


Ramesh Sargam
ஜன 12, 2025 11:51

கோல்கட்டாவில் மருத்துவருக்கு நிகழ்ந்த கொடூரம், சென்னையில் அண்ணா பல்கலை வளாகத்துக்குள்ளே மாணவிக்கு நேர்ந்த கொடூரம், இப்பொழுது கேரளாவில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.... நாளை எங்கேயோ...? அப்படி எதுவும் நடக்கவேண்டாம் என்றுதான் பிரார்த்திக்கிறேன். நம் நாட்டில் தண்டனைகள் முறையாக இருந்தால், இதுபோன்ற குற்றங்கள் இனிவரும் நாட்களில் நடக்கவாய்ப்பில்லை. என்றோ எழுதிய சட்ட புத்தகத்தில் உள்ளவற்றை இன்றும் நாம் தொடர்ந்தால், தினமும் ஒரு கொடூரம் நிகழத்தான் செய்யும். முதலில் சட்டங்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றி எழுதப்படவேணும். கேட்டவுடன் ஜாமீன் கொடுப்பது உடனே நிறுத்தப்படவேண்டும். தினம் தினம் வழக்குகள் தாமதமின்றி விசாரிக்கப்பட்டு, எவ்வளவு சீக்கிரம் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமோ அப்பொழுதுதான் நாட்டில் குற்றங்கள் குறையும். அது நடக்குமா...? கேள்விக்குறிதான்...


தமிழ் மைந்தன்
ஜன 12, 2025 11:05

நீ திருட்டு கோமளீ


நிக்கோல்தாம்சன்
ஜன 12, 2025 11:03

அங்கே சேட்டன்கள் என்றால் தமிழகத்தில் ..ள் அல்லவா "சார்" ??


அப்பாவி
ஜன 12, 2025 10:36

எங்கேடா இன்னும் காணோம்னு பாத்தேன். எல்லாம்.முடிஞ்ச பிறகு சினிமாவில் கடைசியில் வரும் சிரிப்பு போலுஸ் மாதிரி.


Sampath Kumar
ஜன 12, 2025 10:32

சேட்டன்களின் சேட்டை இத்தகு பிஜேபி சொம்புகள் பொங்கி வருவனுக பாருங்க


தமிழ் மைந்தன்
ஜன 12, 2025 11:07

சிலை வைத்தது அதன் வேலை ஆரம்பம்


Ganapathy
ஜன 12, 2025 16:52

ராசபக்சமுன்னாடி மண்டிபோட்ட திராவிட "அடிவருடிகளின்" பொங்கு அருமை அருமை.


skv srinivasankrishnaveni
ஜன 13, 2025 07:59

எப்போதும் இந்தவெறிநாய்களின் ஆட்டம் அதிகம்


புதிய வீடியோ