உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கேரள அரசு பஸ்: 10 பேர் காயம்

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கேரள அரசு பஸ்: 10 பேர் காயம்

மூணாறு:கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி வாளரா அருகே கேரள அரசு பஸ் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர், கண்டக்டர் உட்பட பத்து பேர் பலத்த காயமடைந்தனர்.இடுக்கி மாவட்டம் மூணாறு அருகில் உள்ள அடிமாலியில் இருந்து அடூருக்கு நேற்று மதியம் 2:00 மணிக்கு கேரள அரசு பஸ் புறப்பட்டு சென்றது. 15 பயணிகள் இருந்தனர்.கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வாளரா அருகே மதியம் 2:30 மணிக்கு சென்றபோது எதிரே வந்த சுற்றுலா பஸ்சிற்கு வழிவிட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. பஸ் டிரைவர் லத்தீப் 43, கண்டக்டர் மதுசூதனன் பிள்ளை 46, மற்றும் பயணிகள் மனு ஜோசப் 43, அரவிந்த்அஜி 29, ஜிம்மி சசீந்திரன் 46, மீனா 25, உட்பட பத்து பேர் பலத்த காயமடைந்தனர். அடிமாலி தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் பொதுமக்களின் உதவியுடன் அவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த பகுதி கடும் மலைச்சரிவு ஆகும். பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் மரம் தட்டி நின்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ