உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி பாலியல் புகார் அளிக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்: கேரள ஐகோர்ட் உத்தரவு

போலி பாலியல் புகார் அளிக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்: கேரள ஐகோர்ட் உத்தரவு

கொச்சி: பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அப்பாவி ஆண்களை சிக்க வைக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் பெண் ஊழியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு முன்ஜாமின் வழங்கும் போது நீதிபதி பி.வி. குஞ்சிகிருஷ்ணன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில், சரியாக வேலை செய்யாததற்காக, நிறுவனத்தின் மேலாளர், புகார்தாரான அந்த பெண்ணை வேலையில் இருந்து நீக்கிய பின்னர், அந்த பெண்ணை வாய்மொழியாக திட்டியதாகவும், மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண் அளித்த புகாரை போலீஸ் சரியாக விசாரிக்க வில்லை.இன்றைய காலகட்டத்தில் அப்பாவி மக்கள் மீது கடுமையான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை சுமத்தும் போக்கு உள்ளது. புகார்தாரர் ஒரு பெண் என்பதால், அவரது கூறுவது முற்றிலும் உண்மை என்று எடுத்துக்கொள்ள முடியாது.​புகார்தாரர் ஒரு ஆண் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக காவல்துறை கண்டறிந்தால், அந்தப் பெண் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்.இந்த வழக்கில், தான் பணிபுரிந்த ஒரு நிறுவனத்தின் மேலாளராக இருந்த குற்றம் சாட்டப்பட்டவர், பாலியல் நோக்கத்துடன் தனது கைகளைப் பிடித்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.மறுபுறம், குற்றம் சாட்டப்பட்டவர், அந்தப் பெண்ணின் வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து போலீசில் புகார் அளித்தார், மேலும் நீதிமன்ற உத்தரவின்படி, அவர் பேசியவற்றின் ஆடியோ பதிவு அடங்கிய பென் டிரைவையும் கொடுத்தார்.தவறான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படும் ஒருவருக்கு ஏற்படும் சேதத்தை பணம் செலுத்துவதன் மூலம் மட்டும் ஈடுசெய்ய முடியாது. அவரது நேர்மை, சமூகத்தில் அந்தஸ்து, நற்பெயர் போன்றவற்றை ஒரே ஒரு பொய் புகாரால் நாசம் செய்ய முடியும். எனவே, இதுபோன்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பு காவல்துறை இருமுறை யோசிக்க வேண்டும் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் இருவரின் தரப்புகளையும் காவல்துறை விசாரிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ram pollachi
மார் 02, 2025 15:49

மருத்துவர்கள் உண்மையை மட்டும் பேசினால் இத்தனை மருத்துவமனைக்கான தேவை இருக்காது... வக்கீல்கள் எல்லாம் தர்மம், நியாயத்தை பேசினால் நீதிமன்றங்கள் தியான மண்டபம் ஆகிவிடும்.... சொல்வது எல்லாம் பொய், பொய்யை தவிர வேறு ஒன்றும் இல்லை ஐயா! வயிற்று பிழைப்புக்காக வக்கீல்கள் செய்யும் கோமாளித்தனம். நீங்கள் செய்யும் சேவைக்கு எவ்வளவு கட்டணம் வாங்குகிறீர்கள் என்பதை மக்களுக்கு தெரியும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் விலை பலகை வைத்தால் நன்றாக இருக்கும்.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 01, 2025 21:00

அப்பா ஆட்சியின் சாதனை விடியல்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 01, 2025 20:40

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பு காவல்துறை இருமுறை யோசிக்க வேண்டும். இந்த வரிகளை நன்கு படிக்கவும். இது கேரளாவில் இப்போது தான் நீதி மன்றம் தெரிவித்து உள்ளது. ஆனால் படித்தவர்கள் அதிகமுள்ள இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் முன்னரே அதிகாரிகள் நன்கு அறிந்து பாலியல் வன்முறைக்கு அளாகி பாதிக்கப்பட்டவர்கள் மீதே தவறு கூறி எப்ஐஆர் போடப் படுகிறது. அதுவும் செய்த வந்த சில நொடிகளிலே கண்டுபிடித்து எப்ஐஆர் பதியப்படுகிறது. அதன் உச்ச கட்டம் 3 வயது குழந்தை தவறு செய்தால் தான் அந்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கலெக்டர் உடனடியாக கண்டுபிடித்து செய்தி வெளியிட்டார். அப்பப்பா புலனாய்வு செய்வதில் தமிழகம் உலகத்திற்கே முண்ணனியாக திகழ்கிறது. சிஐஏ கூட இங்கு வந்து பயிற்சி பெறப்போகிறது.


வல்லபன்
மார் 01, 2025 20:34

அபாவி ஆணும் கிடைதாது. அப்பாவி பெண்ணும் கிடையாது. எல்லாரும் அடப்பாவிகள் தான்.


அப்பாவி
மார் 01, 2025 20:31

திருட்டு இந்தியர்களில் ஆண் பெண் வித்தியாசம் கிடையாது. யார் யாரை எப்போது எவ்வாறு ஏமாத்தலாம்னு காத்துக்கிட்டிருக்காங்க....


GMM
மார் 01, 2025 20:31

பாலியியல், தீண்டாமை போன்ற புகாரில் நாடு முழுவதும் மிகவும் கவனிக்க வேண்டிய உத்தரவு. போலி புகாரில் நல்லவர் வாழ்வு நிர் மூலம் ஆகிவிடும். இருவரின் பள்ளி, கல்லூரி, தலைவர், குடியிருப்புகளில் உரிமையாளர் ... ஒழுக்கம் சான்று பெறுவது அவசியம். அனைத்து அதிகாரமும் வக்கீல், போலீஸ் எடுத்து வருவது தவறு. வங்கி தேர்வில் சுய ஒழுக்கம் அறிய நடைமுறைகள் உண்டு.


Rajathi Rajan
மார் 01, 2025 20:07

படித்தவன் படித்தவன் தானடா... இந்தியாவில் படிப்பறிவு அதிகம் உள்ள மாநிலத்தில் கேரளா முதன்மை, தமிழ்நாடு இரண்டாம் இடம், உ.பி. குஜராத், ம.பி, பிஜேபி ஆளும் மாநிலம் எல்லாம் கடைசில் முதல் இடம், 2டாம் இடம், 3ராம் இடம்...


Nagendran,Erode
மார் 01, 2025 20:19

நீ உண்டியலா அல்லது உபிஸா ஏதாவது ஒரு பக்கம் முட்டுக் கொடு எல்லா பக்கமும் முரட்டு முட்டுக் கொடுத்து மண்டையை உடைத்துக் கொள்ளாதே..


பெரிய ராசு
மார் 01, 2025 21:14

நாகேந்திரன் முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு புன்னாச்சு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை