பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் கேரளா!
மத்திய அரசின் நிதியை பெற, 'பி.எம்., ஸ்ரீ' எனப்படும், பிரதமரின் எழுச்சி இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டத்தில் இணைய கேரளா முடிவு செய்துள்ளது. எனினும், மாநிலத்தில் தற்போதுள்ள கல்விக் கொள்கையிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். கேரளாவுக்கு கிடைக்க வேண்டிய நிதியை பெறவே, இத்திட்டத்தில் இணைகிறோம். வி.சிவன்குட்டி கேரள கல்வி அமைச்சர், மார்க்.கம்யூ.,என்னை தாக்க முயற்சி!
தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்க, மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்துக்கு காரில் சென்றேன். பல இடங்களில் வழிமறித்து, வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய முஸ்லிம்கள் என்னை தாக்க முயன்றனர். இது, ஆளும் திரிணமுல் காங்., ஆதரவுடன் நடக்கிறது. ஊடுருவல்காரர்களுக்கு அக்கட்சி ஆதரவு அளிக்கிறது. சுவேந்து அதிகாரி மூத்த தலைவர், பா.ஜ.,போலி வாக்காளர்களை நீக்குங்க!
மஹாராஷ்டிராவில், 96 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களை தேர்தல் கமிஷன் நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிசெய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூ டாது. அப்படி நடந்தால், அது வாக்காளர்களை அவமதிப்பதற்கு சமம். இதில், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ராஜ் தாக்கரே தலைவர், மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா