உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏமனில் கேரள நர்சுக்கு மரண தண்டனை; தடுத்து நிறுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

ஏமனில் கேரள நர்சுக்கு மரண தண்டனை; தடுத்து நிறுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏமனில் வரும் ஜூலை 16ம் தேதி கேரள நர்ஸ் நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், அதனை தடுத்து நிறுத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நர்ஸ் நிமிஷா பிரியா, 38. இவர் மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். அங்கு தன்னுடன் பங்குதாரராக இருந்த ஏமன் நாட்டவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.அவருக்கு அந்நாட்டு கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. அவருக்கு வரும் 16ல் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 10) மரண தண்டனையை தடுத்து நிறுத்தக் கோரி, சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மூத்த வழக்கறிஞர் ராகேந்திர பசந்த், நீதிபதிகள் சுதன்ஷு துலியா, ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், அவசரமாக பட்டியலிடக் கோரி மனு தாக்கல் செய்தார். ஜூலை 14ம் தேதி வழக்கை பட்டியலிட பெஞ்ச் ஒப்புக்கொண்டது. ஜூலை 16ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதால், இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கிறது, இன்று அல்லது நாளை விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதிகளிடம் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பேசும் தமிழன்
ஜூலை 11, 2025 07:57

அடுத்த நாட்டின் நீதிமன்ற நடவடிக்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.... நமது நாட்டின் நீதிபதிகளுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது ?


Subburamu Krishnasamy
ஜூலை 11, 2025 06:17

I think Supreme Court is exceeding it's limit. whether Supreme Court is jurisdiction to admit the case involving the crime in foreign soils? The learned judges are wasting their precious time, when thousands of urgent cases are pending in courts. Functioning of our courts lacks accountability not moving in right direction, completely derailed from it's mandatory duties The affected person can approach only through a diplomatic channels and not Indian judiciary Complete revamping of our judicial systems urgent need of the hour.


Easwar Kamal
ஜூலை 10, 2025 17:47

மலையாளிகளுக்கு திமிர் எப்போதுமே உண்டு. இப்போது இந்த தண்டனையில் இருந்து விடு பட்டு விடுதலை கொடுத்தாலும் அடுத்த flight பிடித்து வேறு ஏதவது வளைகுடா நாட்டுக்கு சென்று மீண்டும் ஏதாவது வம்பு இழுத்து கொண்டு வருவார்கள். மலையாளிகளுக்கு எவ்வளவு அறிவு உள்ளதோ அவ்வளவு திருட்டு புத்தியும் இருக்கும்.


vivek
ஜூலை 10, 2025 18:12

இவன் நியூயார்க்கில் தேடப்படும் குற்றவாளியோ...


spr
ஜூலை 10, 2025 17:26

"தன்னுடன் பங்குதாரராக இருந்த ஏமன் நாட்டவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.அவருக்கு அந்நாட்டு கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது." செய்தியில் உண்மை இருந்தால், தண்டனையில் தவறேதுமில்லையே. ஒரு மருத்துவத் துறை சார்ந்தவர் இப்படி செய்யலாமா? இத்தகு குற்றங்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் இந்தியர் என்பதற்காக இவருக்குப் பரிந்து பேசுபவது சரியல்ல. பிறநாட்டு நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதும் முறையல்ல பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு இந்திய நீதிமன்றம் இப்படியொரு தண்டனை கொடுக்காது என்றாலும் கொடுத்திருந்தால் அதற்கு பாகிஸ்தான் கோரிக்கை வைத்தால் பரிசீலிப்போமா?


Srinivasan Krishnamoorthy
ஜூலை 10, 2025 17:24

What a funny appeal ? How can Indian courts intervene overseas. She has done unpardonable crime. she has to face it


Dr.Joseph
ஜூலை 10, 2025 16:56

ஆயுள் தண்டனை கொடுங்கள் .ஒரு மூலையில் உயிருடன் கிடந்துவிட்டு போகட்டும். இங்கே அடித்தே கொன்ற போலீஸ்காரன் உயிருடன் அலைகிறான்.....


NRajasekar
ஜூலை 10, 2025 16:51

இந்தியாவில் தான் குற்றவாளிகள் சுதந்திரமாக ஜாமீன். முன்் ஜாமீன் நெஞ்சு வலி என்று எல்லாவித தன்டனையிலிருந்தும் தப்பி விடுகின்றனர். அந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு நடைமுறையில் உள்ளது. அதையும் கெடுக்க


Naga Subramanian
ஜூலை 10, 2025 16:50

வேறொரு நாட்டிற்குச் சென்று, பல இன்னல்களை சந்தித்து, இப்பொழுது "அந்த" கடைசி நிமிஷத்திற்காக காத்திருக்கும் நிமிஷப் ப்ரியாவின் விஷயத்தை அறிந்தது முதல் , இந்த பெண் விரைவில் வெளி வந்து இனிமேலாவது தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.


Tiruchanur
ஜூலை 10, 2025 13:54

விஷ ஊசி போட்டு கொன்னவளுக்கு எவ்வளவு பேர் வக்காலத் வாங்குறாங்க


தெற்கத்தியான்
ஜூலை 10, 2025 13:17

நமது நீதித்துறை முற்றிலும் திருத்தப்பட்டு மாற்றம் செய்ய வேண்டிய காலக் கட்டாயத்தில் உள்ளது. கால அவகாசம் இல்லாமல் 20-30 வருடங்கள் கடந்த வழக்குகள், கெட்பாரில்லாமல் சிறையில் வாடும் அப்பாவி விசாரணைக் கைதிகள், நீதிபதிகளின் எதேச்சாதிகார போக்கு, சாமானியனுக்கு அநீதி/மறுக்கப்பட்ட நீதி. பணம் படைத்த முதலைகளுக்கு உடனடி நிவாரணம். இவை அனைத்தும் மாற வேண்டும்.