உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை வரும் சிறுவர், சிறுமிகளுக்கு சிறப்பு அடையாள பட்டை: கேரள போலீஸ் அறிமுகம்

சபரிமலை வரும் சிறுவர், சிறுமிகளுக்கு சிறப்பு அடையாள பட்டை: கேரள போலீஸ் அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: சபரிமலைக்கு வரும் 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு அடையாள பட்டையை கேரள போலீஸ் அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து கேரள போலீஸ் தெரிவித்துள்ளதாவது:சபரிமலை சீசன் துவங்கி உள்ளது. ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு சிறப்பு அடையாள பட்டைகள்(ஐ.டி., பேண்ட்ஸ்) ஏற்பாடு செய்துள்ளோம்.10 வயதுக்குள் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லும் போது வழங்கப்படும்.இந்த சிறப்பு அடையாள பட்டையில், குழந்தைகளுடன் வரும் பெற்றோர் அல்லது பெரியவர்களின் பெயரும் மொபைல் எண்ணும் குறிப்பிடப்பட்டிருக்கும்.இதன் முக்கிய நோக்கம், ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்ட நேரத்தில், விரைவாக அனுப்பவும், ஒருவேளை காணாமல் போகும் சூழ்நிலையில், அவரவர் பெற்றோர்கள், காப்பாளர்களுடன் அனுப்புவதற்கு எளிதாக இருக்கும்.பெற்றோர் தரிசனம் முடிந்து பாதுகாப்பாக, திரும்ப வரும் வரையில் யாரும் இந்த சிறப்பு அடையாள பட்டையை கழற்றிவிட வேண்டாம் என் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு கேரள போலீஸ் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
நவ 20, 2024 17:31

முதலில் அவரவர் வீட்டுக்குப் பக்கத்தில இருக்கும் சின்ன ஆலயங்களை கவனியுங்கள். எல்லா ஸ்வாமிகளும் சக்தி வாய்ந்தவையே.


sundarsvpr
நவ 20, 2024 16:53

கேரளா அரசு செய்தது நல்ல நடவடிக்கை. பொதுவாய் பெற்றோர்கள் திருக்கோயில்களுக்கு சாதாரண நாட்களில் குழந்தைகளை கூட்டிக்கொண்டு வருவதில்லை. ஏன் திருவிழாநாட்களில் கூட்டிவரவேண்டும்? காணாமல் போகும் அவஸ்தையைவிட தேவையற்ற பொருள்களை அதிகமானவிலைக்கு வாங்கும் நிலையை உண்டாக்கும்.


சமீபத்திய செய்தி