உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசே சொல்லிடுச்சு; கேரளா முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம்!

மத்திய அரசே சொல்லிடுச்சு; கேரளா முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் (SFSI) கேரளா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது; தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.ஆண்டுதோறும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தால் (FSSAI), உணவுப் பாதுகாப்பு குறியீடு மாநில பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. ஹோட்டல்கள், உணவுப்பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் செய்யப்பட்ட மதிப்பீடுகள், பதியப்பட்ட வழக்கு, எடுக்கப்பட்ட நடவடிக்கை அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு குறியீடு நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. தொடரந்து இரண்டாம் ஆண்டாக, கேரளா இந்த இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த 2022ம் ஆண்டில், கேரளா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டு மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழகம், இம்முறை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் குறியீட்டில் ஜம்மு காஷ்மீர் மூன்றாவது இடத்தைப் பிடித்து வருகிறது.

உணவு தரம்

இது குறித்து மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:நாம் உட்கொள்ளும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம். ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதற்கு உணவின் தரம் மற்றும் பாதுகாப்பின் முக்கியம் அவசியம். விதிமுறைகளின் தரநிலைகளை அமைப்பது அரசின் முதன்மைக் கடமை. பாதுகாப்பான உணவு மக்களை சென்றடைவதை உறுதி செய்வதில் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., (FSSAI) முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Tetra
செப் 22, 2024 14:25

வ்யாதிகளை இறக்குமதி செய்வதே முதல் மாகாணம்


MADHAVAN
செப் 21, 2024 20:21

இரண்டாம் இடம் பிடித்த தமிழ்நாடே இப்படின்னா,9 வைத்து இடம் பிடித்த குசராது 16 வைத்து இடம் பிடித்த உத்தரப்பிரதேசத்துல எப்படி இருக்குமோ ?


அப்புசாமி
செப் 21, 2024 17:42

விடியா ஒன்றிய அரசு. இத்தனை டன் கலப்பட நெய் செய்த கம்பெனிக்கு எப்புடி வருஷா வர்ஷம் FSSI சான்றிதழ் குடுத்திச்சு? நேருதான் காரணம்னு சொல்லி தப்பிச்சுருவாங்க.


raja
செப் 21, 2024 14:24

என்ன இரண்டாம் இடம் தானா.. விடியல் அரசருக்கு இது பிடிக்காதே...


Jysenn
செப் 21, 2024 14:03

விவிடி எண்ணெய், பிரிட்டானியா பிசகுனிட்ஸ்,3 ரோசெஸ் டீ, ஆசிர்வாத் மசாலாவை மட்டும் டெஸ்ட பண்ணிட்டு எங்கள் ஊரில் கலப்படம் இல்லை என்றால் எப்படி நம்புவது ? எல்லா பொருள்களையும் டெஸ்ட் பண்ணுங்கள் அப்போது தெரியும் உங்க லட்சணம் .


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 21, 2024 13:55

எங்க மன்னரின் ஆட்சித்திறமை, முன்னணி மாநிலம் ...... இதற்கான ஆதரவு கருத்தாக்கத்தை மெய்ப்பிப்பது போல மத்திய அரசு ஆய்வு முடிவுகளை வெளியிட்டால் கெக்கெக்கேபிக்கே ன்னு சிரிப்போம் ...... குறை சொல்வது போல ஆய்வு முடிவுகள் வந்தால் சங்கிஸ் அழுகுணி ஆட்டம் ன்னுவோம் .....


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 21, 2024 13:18

எந்த மாநிலங்கள் ???? ஃபிஷ் ஃப்ரை வாங்கி சாப்பிட்ட சிறுவன் சாவு ...... முட்டை போண்டா வாங்கி சாப்பிட்ட பெண்கள் மயக்கம் ..... ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்ட பெண் மரணம் ...... இப்படியெல்லாம் செய்திகள் வந்த மாநிலங்களா ??


நிக்கோல்தாம்சன்
செப் 21, 2024 12:59

சமீபத்தில் டன் கணக்கில் பலமுறை கெட்டுப்போன மாமிசங்களை இறக்குமதி செய்த வந்தேறி ஓட்டல்களும் , ஷவர்மா சாப்பிட்டு இறந்து போன கேசும் க்ளோஸ் ஆயிடுச்சா ?


ஆரூர் ரங்
செப் 21, 2024 12:40

வடஇந்தியாவில் பால் விற்பதைப் பார்த்துள்ளேன். கெட்டியாக இருக்கும். பாலில் தண்ணீரைக் கலப்பது பெரிய பாவம் என யாதவ்கள் உறுதியாக நம்புகின்றனர். இங்கு தண்ணீரில் பாலைக் கலப்பதும் நடக்கிறது. கலப்படமற்ற பொருள் கிடைப்பது அரிது. கலப்பட சட்டத்தில் சிறு வியாபாரிகளை தண்டிக்கக்கூடாது என இங்குள்ள வணிகர் சங்கங்கள் கோரிக்கை வைக்கின்றன. இதெப்படி இருக்கு?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 21, 2024 13:21

மாடுகளுக்கு ஹார்மோன் ஊசி போட்டு பால்கறவையை அதிகப்படுத்துவதும் இந்தியா முழுக்க நடக்கிறது ...... மாடுகளின் எண்ணிக்கை குறைவு ....... பயன்பாடு அதிகம் ..... இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது .....


Svs Yaadum oore
செப் 21, 2024 12:36

கேரளா மாநிலத்து மொத்த மருத்துவ கழிவையும் ஏற்கனவே முன்னேறிய மாநிலமான தமிழ் நாட்டில் கொண்டுவந்து கொட்டிவிட்டால் கேரளா தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் ...


நிக்கோல்தாம்சன்
அக் 01, 2024 10:48

பாயிண்ட் புடிச்சிடீங்க பாஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை