உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா தாக்குதலில் 40 பாக்., ராணுவ வீரர்கள், முக்கிய பயங்கரவாதிகள் பலி: உறுதி செய்தது இந்தியா

இந்தியா தாக்குதலில் 40 பாக்., ராணுவ வீரர்கள், முக்கிய பயங்கரவாதிகள் பலி: உறுதி செய்தது இந்தியா

புதுடில்லி: ''பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் தான் இந்திய ராணுவம் முதலில் தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது,'' என ராணுவ டி.ஜி.எம்.ஓ., ராஜிவ் கய் கூறினார்.

பேட்டி

பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவம் மற்றும் விமானப்படை, கடற்படை டி.ஜி.எம்.ஓ.,க்கள் இன்று 11ம் தேதி பேட்டி அளித்தனர்.

இலக்கு

ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) ராஜிவ் கய் கூறியதாவது: பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்கவும், பயங்கரவாத முகாம்களை அழிக்கவும் தெளிவான ராணுவ குறிக்கோளுடன் ஆபரேஷன் சிந்தூர் துவக்கப்பட்டது. ஒரு தேசமாக நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது. 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளை தாக்குவதை மட்டுமே இலக்கு என்று உறுதியாக கொண்டோம்.

அச்சம்

ஏராளமான பயங்கரவாத முகாம்கள் இருந்தாலும், நாம் தாக்குவோம் என்ற அச்சத்தில் பல பயங்கரவாத முகாம்கள் முன்னரே காலி செய்யப்பட்டு விட்டன என தெரியவந்தது. முதல் தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டது. 9 பயங்கரவாத முகாம்கள் உளவுத்துறை தகவல்கள் மூலம் மூலம் உறுதி செய்யப்பட்டது. அதில் சில பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்தது. சில பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்தது.

பாக்., வீரர்கள் உயிரிழப்பு

முரிட்கேயில் உள்ள லஷ்கர் இ தொய்பாவின் பயங்கரவாத அமைப்பின் முகாம் தான் அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி போன்ற பயங்கரவாதிகளை உருவாக்கியது. இந்த முகாமில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் யூசுப் அசார், அப்துல் மாலிக் ராப் மற்றும் விமான கடத்தல், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான முதாசிர் அஹமது உள்ளிட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பதிலுக்கு பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். குருத்வாரா உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மற்றும் கிராமங்கள் சேதமடைந்தன.அதன்பிறகே இந்திய ராணுவம், பாகிஸ்தானிய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இதில், 35 முதல் 40 பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதில் விமானப்படை முக்கியபங்கு வகித்தது. இந்திய கடற்படை முக்கிய வெடி மருந்துகளை வழங்கியது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு தெளிவான செய்தியை அனுப்பி உள்ளோம்.

வீரமரணம்

இந்திய ராணுவ உட்கட்டமைப்பை குறிவைத்த பாக்., முயற்சி தோல்வியடைந்தது. இந்திய விமானங்கள் தாக்கப்பட்டதாக பாக்., கூறுவது பொய். சண்டையை நிறுத்த வேண்டும் என பாக்., அவசர கோரிக்கை வைத்தது. நாளை காலை12 மணிக்கு பாக்., ராணுவ இயக்குனரோடு பேச்சு நடக்க உள்ளது. எந்தவொரு அத்துமீறலுக்கும் பதிலடி கொடுக்கப்படும். பாக்,.குக்கு பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாக்., தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் இன்று தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

S.L.Narasimman
மே 12, 2025 08:01

இன்னும் 50க்கும் மேல் இருக்கும் பயங்கரவாதிகளின் முகாம்கள் ,தீவிரவாதிகள் ஒழிக்கப்படும் வரை இதில் இந்தியா வெற்றி பெற்றதாக கருதமுடியாது.


S.L.Narasimman
மே 12, 2025 07:57

இன்னும் 50 க்கும்


S.L.Narasimman
மே 12, 2025 07:54

இன்னும் 50க்கும் மேல் பயங்கரவாத முகாம்கள் அழிக்கபடாமல் இருக்கும் போது பாக்கித்தான் 50 ராணுவ வீரர்கள் செத்தது பெரிய சாதனை கிடையாது.


Kasimani Baskaran
மே 12, 2025 05:04

சில மணி நேரத்துக்குள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த விமானதளங்களில் அடி விழுந்தவுடன் பாக்கிகள் ஆடிப்போனார்கள்.. இது வெறும் சாம்பிள் மட்டுமே. எல்லா விமானங்களும், விமானிகளும் திரும்பி வந்துவிட்டார்கள். ஆகவே ரபேலை சுட்டோம் என்று சொல்லுவது வெறும் சமூக வலைத்தளங்களில் மட்டுமே.


spr
மே 11, 2025 21:16

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை சுட்டவர்களை பாகிஸ்தான் அரசு நம்மிடம் ஒப்படைக்கும் வரை அவர்களைக் கொல்லும்வரை இந்தத் தாக்குதல் நிறுத்தப்படக் கூடாது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீரை திரும்ப மீட்டெடுக்க வேண்டும் நதி நீர்ப் பங்கீட்டுக்கான புதிய ஒப்பந்தம் அவசியமானால் மட்டுமே உருவாக்க வேண்டும் இவையனைத்திற்கும் மேல் உள்நாட்டில் இருந்து கொண்டே பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்போர் ஆதரிப்போர் அனைவரையும் நாடு கடத்த வேண்டும் இல்லையேல் அவர்களைப் பற்று ஏதுமில்லாத சந்நியாசி யோகி ஆதித்யனாத் வசம் ஒப்படைக்க வேண்டும்


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 11, 2025 23:06

நேற்றுகூட காஷ்மீர் எல்லை ஓர கிராமங்களில் உள்ளவர்களை சுட்டானுங்களே நமது ராணுவ வீரரும் பலியானாரே. அதையும் கொஞ்சம் பழி தீர்க்கணுமே.


R SRINIVASAN
மே 12, 2025 04:29

வக்கீல் வாஞ்சிநாதன் எனபவர் எதோ டிரம்ப்புக்கு பயந்துதான் மோடியும் அமிட்ஷாவ்ம் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டார்கள் என்று கூறியிருக்கிறார். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரஸ்-n தலைவராக நேருவை நியமித்தார் காந்தி .காங்கிரஸ்-ல் பெரும்பான்மையோர் வல்லபை பட்டேலுக்குத்தான் அதரவளித்தனர்.ஆனால் நேருவோ அருணாச்சல பிரதேசத்தில் 10000 sq.mt -ஐ சீனாவுக்கு 1962-ல் விட்டுக்கொடுத்தார் .இந்திரா காந்தியோ தான் பதவிக்கு வருவதற்காக அஸ்ஸாமில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு குடியுரிமையும்,otturimayum கொடுத்தார் .இன்று அவர்கள் யுனைடெட் மைனாரிட்டி பிராண்ட் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள் .


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 11, 2025 20:14

இன்னும் மிக முக்கியமானவர்கள் இருக்கிறார்களே


சமீபத்திய செய்தி