உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளியுறவு கொள்கை குறித்து விவாதிக்க பார்லி.,யை கூட்ட கார்கே வலியுறுத்தல்

வெளியுறவு கொள்கை குறித்து விவாதிக்க பார்லி.,யை கூட்ட கார்கே வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கதேசத்தில், ரவீந்திர நாத் தாகூரின் பூர்வீக இல்லம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வெளியுறவு கொள்கை பிரச்னைகள் குறித்து விவாதிக்க பார்லி., சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி வலியுறுத்தி உள்ளார்.

பூர்வீக இல்லம்

நம் நாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவரும், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளருமான ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம், அண்டை நாடான வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. இது, தற்போது அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியருக்கும், பார்வையாளருக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறியதில், அருங்காட்சியகம் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது. இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று கூறியதாவது:சர்வதேச அளவில் இரண்டு சம்பவங்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளன. வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. இது ஒரு புறமிருக்க, பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டாளி என பாகிஸ்தானை அமெரிக்கா அழைத்துள்ளது.

பிரச்னை

மேலும், ராணுவ தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும்படியும் அந்நாடு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது மிகவும் தீவிரமான பிரச்னை. அமெரிக்கா - இந்தியா இடையேயான துாதரக உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக, மோடி அரசின் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்துள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க, பார்லி., சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., கண்டனம்

பா.ஜ., செய்தித் தொடர்பாளரும், அக்கட்சியின் லோக்சபா எம்.பி.,யுமான சம்பித் பத்ரா நேற்று கூறியதாவது:ரவீந்திரநாத் தாகூரின் பூர்விக இல்லம் தாக்கப்பட்ட சம்பவத்தில், ஜமாத் -- இ- - இஸ்லாமி, ஹெபாசத் - -இ- - இஸ்லாம் போன்ற அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இதை உலகளவில் கண்டிக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டு வங்கி அரசியலுக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த சம்பவத்தை கண்டிக்கவில்லை. எங்களுக்கு கலாசாரமே முக்கியம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

theruvasagan
ஜூன் 13, 2025 21:27

ஆமாம். வெளியுறவுக் கொள்கையாக இருந்தாலும் விண்வெளி கொள்கையாக இருந்தாலும் எடுபிடியும் எசமானனும் அக்குவேர் ஆணிவேரா அலசி விவாதித்து அறுத்து தள்ளிடுவாங்க.


பேசும் தமிழன்
ஜூன் 13, 2025 18:55

தாக்குதல் நடத்திய ஆட்கள் எல்லாம்.... நீங்கள் ஆதரவு கொடுத்து வளர்க்கும் ஆட்கள் தான்..... நீங்களே அவர்களிடம் பேசலாமே ???


Rajasekar Jayaraman
ஜூன் 13, 2025 17:33

சீன கொத்தடிமைகள் ஓலம்.


theruvasagan
ஜூன் 13, 2025 16:54

பாராளுமன்றத்தை கூட்டணும்னு ஆசைப்பட்டா அதுக்கு தேவையான பக்கெட் துடைக்கற துணி பினாயில் எல்லாம் நாங்க வாங்கித் தாரோம். அதுக்கு எதுக்கு மத்தவங்களை கூப்பிடணும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 13, 2025 11:45

வர வர கார்கே ராகுல் போன்றோர் நம்ம ஊர் ராமதாஸ் அய்யா போல பேசுகிறார்கள்.


M Ramachandran
ஜூன் 13, 2025 11:06

வெளியுறவு கொள்கையாய் பற்றி ராவுளை தலை வராக கொண்டிருக்கும் உங்கள் அடிமை கட்சியெல்லாம் பேசக்கூடாது. இப்பொடுது உள்ள வெளி உறவு கொள்கை மற்றும் வெளியுறவு துறையை அமைச்சர் நன்றாகாவே செய்து கொண்டிருக்கின்றனர். நீங்க குட்டையை குழப்பி மீன் பிடிக்கயென்ன வேண்டாம். முதலில் உங்கள் ராகுல் எதிர் கட்சி தலைவர் அந்தஸ்து கொடுத்ததும் அதற்க்கு உரிய மதிப்பளிக்காமால் அடிக்கடி வெளி நாட்டிற்கு அரசிடம் அனுமதியை வாங்காமல் ஓடுகிறாரெ அதை கேட்க உங்களுக்கு மன தைய்ரியமுண்டா?


Nagarajan D
ஜூன் 13, 2025 10:52

முதலில் உங்க முதலாளி குடும்பம் சீனாக்காரன்கிட்ட செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன என்று கேட்டு மக்களுக்கு தெளிவு படுத்து... உன் கூட்டத்தில் நடப்பதே உனக்கு தெரியவில்லை அப்புறம் எதுக்கு நாட்டு விஷயத்தில் நீ எதிர்பாக்குற?


கண்ணன்
ஜூன் 13, 2025 10:13

இந்த ஆளுக்கு என்ன புரியும்? வெறுமனே இந்தியில் பேசிவிட்டால் போதுமா? ஐயா நல்ல படிப்பறிவும், பன்னாட்டு அரசியல் அறிவும் நிரம்ப இருந்தால்தான் புரியும்- ஏதோ நானும் கச்சேரிக்குப் போனேன் என்று அங்குபோய் கான்டீனில் நன்றாக சாப்பிட்டுவிட்டு, பார்லியில் தூங்க வேண்டிமா? உங்கள் கட்சியனர் அனுவரையும் முதலில் ஒழுங்காகப் பள்ளிப் படிப்பை முடிக்கச் சொல்லுங்கள்


Satish NMoorthy
ஜூன் 13, 2025 09:48

Sirji, please retire and enjoy the time with your grand children. It doesn’t look nice if you are getting trolled at your age (83 )


Bhakt
ஜூன் 13, 2025 09:40

சீனாக்காரன் கேட்க சொன்னானா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை