உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேல் ரத்னா விருது சர்ச்சை: மனு பாகர் விளக்கம்

கேல் ரத்னா விருது சர்ச்சை: மனு பாகர் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ''உயரிய 'கேல் ரத்னா' விருது விஷயத்தில் எனது தரப்பில் தவறு நடந்துள்ளது,'' என மனு பாகர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு சார்பில் விளையாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருது வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டுக்கான பரிந்துரை பட்டியலில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்றுத்தந்த இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், உயரம் தாண்டுதல் வீர் பிரவீன் குமார் (பாராலிம்பிக்கில் தங்கம்) பெயர் இடம் பெற்றுள்ளது. அர்ஜுனா விருதுக்கு 30 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இதுகுறித்த இறுதி அறிவிப்பு முறைப்படி வெளியாகவில்லை.

மனு பாகர் எங்கே

இதனிடையே பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்று வரலாறு படைத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் பெயர், கேல்ரத்னா பட்டியலில் இடம் பெறவில்லை என சர்ச்சை கிளம்பியது. 'மனு பாகர் விண்ணப்பிக்கவில்லை,' என மத்திய விளையாட்டு அமைச்சகம் கூறியது. மனுபாகர் தந்தை ராம் கிஷன் கூறுகையில்,'' மனு பாகரை துப்பாக்கிசுடுதல் வீராங்கனையாக உருவாக்கியதற்கு வருத்தப்படுகிறேன். இவரை கிரிக்கெட் வீராங்கனையாக கொண்டு வந்திருக்க வேண்டும்,'' என்றார். இதுகுறித்து மனு பாகர் 22, கூறியது: தேசத்திற்காக விளையாடி பெருமை சேர்ப்பது மட்டும் தான் எனது வேலை. இதற்காக கிடைக்கும் விருதுகளும், அங்கீகாரமும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட எனக்கு துாண்டுகோலாக இருக்கும். ஆனால் விருதுகளை பெறுவது மட்டும் எனது இலக்கு அல்ல. உயரிய 'கேல் ரத்னா' விருதுக்கு பரிந்துரை செய்யப்படுவதில், எனது தரப்பில் ஏதோ தவறு நடந்திருக்கலாம். விரைவில் இது சரி செய்யப்படும். மற்றபடி விருதுகளை பொருட்படுத்தாமல், தேசத்திற்காக தொடர்ந்து பதக்கங்கள் வெல்ல முயற்சிப்பேன். இவ்விஷயத்தில் தவறாக எதுவும் தெரிவிக்க வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

kulandai kannan
டிச 25, 2024 11:56

அட்டகாசம் அதிகமாகிவிட்டது


Sridhar
டிச 25, 2024 10:50

விண்ணப்பிக்கவில்லை என்றால், இந்திய அரசின் விருதில் ஆர்வம் இல்லை என்று பொருள். இத்தாலியிலிருந்து நிறைய கிடைத்ததே போதும் என்று இருந்திருக்கலாம். எதுவும் அரசின் விதிமுறைகள் படியே நடக்கவேண்டும். இதில் அவளுடைய அப்பனின் ஆதங்கம் சிரிப்பை வரவைக்கிறது


nirmal kumar
டிச 25, 2024 10:29

நல்லாசிரியர் விருது கொடுக்கறாங்க தமிழ்நாட்டுல. விண்ணப்பித்தால் தான் கிடைக்கும். இல்லையென்றால் நீங்கள் சிறப்பானவறாக இருந்தாலும் கிடைக்காது


saravanan
டிச 25, 2024 08:37

மனு பாகர் கேல் ரத்னா விருதுக்கு விண்ணப்பிக்காமல் இருந்திருக்கலாம் தவறான வழிகாட்டுதலால் அரசியலில் முரணான நிலைபாட்டை எடுத்திருக்கலாம் அரசின் விருதுகள் வழங்கப்படுவதன் நோக்கமே விளையாட்டு வீரர்கள் நாட்டுக்கு சேர்த்த பெருமையும், புகழையும் கெளரவிக்கவும் அவர்களின் ஆற்றலையும், உழைப்பையும் ஊக்குவிக்கவுமே தவிர வேறு காரணங்கள் இருக்க வாய்பில்லை அரசாங்கம் தகுதியானவர்களுக்கு விருது கொடுத்து பாராட்ட நினைத்தால் தானாகவே முன்னெடுத்து சென்று கெளரவிக்க வேண்டும். உலக அரங்கில் பதக்கம் வென்றவர்களை ஏதோ உத்தியோகத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் போல நடத்துவது கேலி கூத்து


Kasimani Baskaran
டிச 25, 2024 07:31

விண்ணப்பித்து விருது வாங்குவதா? புதிய நடைமுறை போல தெரிகிறது.


visu
டிச 25, 2024 12:33

ஆதிகாலத்தில் இருந்து இதுதான் நடைமுறை


Mohan
டிச 25, 2024 07:22

இந்த வீராங்கனை பட்டம் வென்று இந்தியா வந்து முதலில் சோனியா அம்மாவை சந்தித்து ஆசி பெற்று பின்னர் தான் மற்ற வேலைகளைப் பார்த்தார். தேர்வு செய்து, பயிற்சிக்கு எல்லா செலவுகளையும் செய்து ஒலிம்பிக் அனுப்பிய அரசுக்கு அவர் தந்த மரியாதை அவ்வளவு தான்.


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 25, 2024 11:29

சோனியாவை சந்தித்தது என்ன தேச துரோக குற்றமா? அல்லது நீங்கள் வணங்கும் தலைவரை கும்பிடாதது குற்றமா? உங்கள் கருத்தில் நேர்மையில்லை. உதாரணமாக எனக்கு கம்யூனிச கொள்கைகளில் உடன்பாடில்லை. ஆனாலும் பல முன்னணி கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்து நான் உரையாடி இருக்கிறேன். அதில் என்ன தவறு?


visu
டிச 25, 2024 12:37

சோனியாவை சந்தித்தது குற்றமில்லை ஆனால் அது அரசியலுக்கு பயன்படுத்த படுகிறது .முதலில் நாட்டின் பிரதமரையோ அல்லது முக்கிய அமைச்சர்களையோ சந்திப்பதுதான் வழக்கம் வித்தியாசமாக இவர் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்துள்ளார் அது அவர் தந்தையின் கட்சி சார்பு காரணமாக இருக்கலாம் .அரசு தரப்பில் ஏதோ குழப்பம் விருது வழங்குவதில் உள்ளது


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 25, 2024 14:27

விசு அவர்களே, பழக்கம் வழக்கம் என்பதெல்லாம் நாமாக ஏற்படுத்தியதே. சொல்லப்போனால் நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்களை அமைச்சர்கள் தேடிச்சென்று சந்திப்பதுதான் நியாயம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை