உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவுரங்கசீப் கல்லறை அமைந்த நகரத்தின் பெயர் மாறுகிறது

அவுரங்கசீப் கல்லறை அமைந்த நகரத்தின் பெயர் மாறுகிறது

மும்பை : மஹாராஷ்டிராவில் முகலாய மன்னர் அவுரங்கசீபின் கல்லறை அமைந்துள்ள குல்தாபாத் நகரம், ரத்னாபூர் என பெயர் மாற்றப்படவுள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அவுரங்காபாதின் பெயர் சத்ரபதி சம்பாஜி நகர் என மாற்றப்பட்டது. இந்த மாவட்டத்தின் குல்தாபாதில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. இந்த கல்லறையை அகற்றக் கோரி, ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நாக்பூரில் வன்முறை வெடித்தது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்லறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குல்தாபாதில் தான் அவுரங்கசீபின் மகன் ஆஸம் ஷா, நிஜாம் ஆஸப் ஜா உள்ளிட்ட சிலரின் கல்லறைகளும் உள்ளன. இந்நிலையில், அவுரங்கசீப் கல்லறை இருக்கும் குல்தாபாத் நகரின் பெயரை ரத்னாபூர் என மாற்றப் போவதாக, சிவசேனாவைச் சேர்ந்த அமைச்சர் சஞ்சய் சிர்ஷாத் தெரிவித்தார். அவுரங்கசீப் கல்லறையை அகற்றுவதில் தீவிரமாக இருக்கும் தலைவர்களில் இவரும் ஒருவர்.சஞ்சய் சிர்ஷாத் நேற்று கூறியதாவது:அவுரங்காபாத் போல, தேவையற்ற பெயர்களைக் கொண்ட அனைத்து இடங்களின் பெயர்களையும் நல்ல பெயர்களாக மாற்றி வருகிறோம். அவுரங்கசீப் ஆட்சிக்கு முன், குல்தாபாத் நகரம், ரத்னாபூர் என்றுதான் அழைக்கப்பட்டது. அந்த பெயரை மீண்டும் கொண்டு வருகிறோம். வேறு ஒன்றும் இல்லை. மஹாராஷ்டிரா சட்டசபை கூட்டத்தொடரில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

தஞ்சை மன்னர்
ஏப் 10, 2025 16:02

கையில் ஆட்சி கொடுத்தால் இப்படித்தான் சிந்தித்து கொண்டு தான் செய்யும் ஊழல் தெரியாமல் மறைத்து மக்களை மோதி இவிடுவார்கள் சாதி மத பெயரால்


தஞ்சை மன்னர்
ஏப் 10, 2025 16:01

செப்பல்ஸ் மாறெங்கே


BHASKARANV.
ஏப் 12, 2025 23:55

நீ உன்னுடைய உண்மையான பெயரில் முதலில் கருத்து எழுது...


Ranganathan Parthasarathi
ஏப் 09, 2025 15:34

இருப்பவனுக்கே இடம் இல்லாதபோது இறந்தவர்களுக்கெல்லாம் இடம் தேவையா?


Ranganathan Parthasarathi
ஏப் 09, 2025 15:30

இறந்தவர்களுக்கு சிலை வைப்பது,கல்லரை கட்டுவதெல்லாம் பாரத நாட்டில் இல்லாமலிருந்தது.முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி உருவான பிறகு உருவாக்கப்பட்ட ஓன்றுதான்.இருப்பனுக்கு இடமில்லாதபோது இறந்தவனுக்கு இடம்தேவையா?


Iyer
ஏப் 09, 2025 10:51

ஹிந்துக்கள் - சாதி பேதம் இன்றி - ஒன்று பட்டு - ஒவ்வொரு தேர்தலிலும் ஹிந்துக்களுக்கு ஆதரவான ஊழல் இல்லாதகட்சிக்கு மட்டும் வாக்களிப்போம். அதே போல் நம்மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமிய, கிறித்துவ கொள்ளையர்களின் உள்ள பெயர்களை உடனே மாற்றுவோம்


Pandi Muni
ஏப் 09, 2025 10:36

நம் மக்களை கொன்று குவித்த கயவர்களின் கல்லறையை இடித்து கடலில் கலப்போம்


vijai hindu
ஏப் 09, 2025 09:36

முதல்ல நாட்டுல இது மாதிரி கல்லறை எல்லாம் இடிச்சு தள்ளனும்


சொல்லின் செல்வன்
ஏப் 09, 2025 09:03

சீனாக்காரன் உலகத்துலேயே வேகமாக செயல்படக்கூடிய கணினியை கண்டுபிடிச்சு எங்கயோ போயிட்டு இருக்கான். இவனுங்க பேரை மாத்தி வெச்சு விளையாடிட்டு இருக்கானுங்க


vijai hindu
ஏப் 09, 2025 10:30

உனக்கு கஷ்டமா இருந்தா உன் பெயரை மாத்திக்கோ


Pandi Muni
ஏப் 09, 2025 10:31

அடிப்படையே சரியில்லாம இருக்கும் போது எந்த ஆணிய புடுங்கினாலும் உபயோகப்படாது


Seekayyes
ஏப் 09, 2025 10:54

சீனாவை எந்த அயோக்கியனும் வெளியில் இருந்து வந்து ஆளால, அதானல அவர்களுக்கு அந்த தலைவலி இல்ல.


M R Radha
ஏப் 09, 2025 08:16

நேரு, திருட்டு காந்தி பெயரை வைத்து நாட்டை ஏமாற்றியவனின் பெயரை எல்லாம் தூக்குங்க. விஞ்ஞானியின் சிலை மற்றும் சொரியாரின் சிலை/பேர வச்சி ஏமாற்றியதும் போதும். தூக்குங்க அதையும். இது நடக்கத்தான் போகிறது


Sampath Kumar
ஏப் 09, 2025 08:03

800 ஆண்டுகள் அவர்களின் ஆட்சி இந்த மண்ணில் நடந்த பொழுது இந்த வீராதி வீரர்கள் சூராதி சூரர்கள் எங்கே பொய் ஒளிந்து இருந்தார்கள் ? பெயரை மாற்றி விட்டால் எல்லாம் சரி ஆகுமா ?தும்பை விட்டு வாலை பிடிக்கும் கோழைத் தனத்தின் வெளிப்பாடுதான் இது


M R Radha
ஏப் 09, 2025 08:12

? ஆயிர ஆயிர ஆண்டுகாலமாக இருந்த ஹிந்து பெயர்களை மாற்றிய கருங்காலிகள் பற்றி உன் கருத்து என்ன?


N Sasikumar Yadhav
ஏப் 09, 2025 08:49

வாங்கி தின்கிற பிரியாணிக்கு நீங்க காட்டுகிற விசுவாசம் அப்படியே புல்லரிக்க வைக்கிறது


தமிழ்வேள்
ஏப் 09, 2025 08:59

இன்னும் புரோக்கர் வேலை மீதான மயக்கம் கலையவில்லையா சம்பத்து? உன்னை போன்ற தன்மானம் இல்லாத புரோக்கர்களால்தான் அந்த மாமிசப் பிண்டங்கள் 800 ஆண்டுகள் இங்கு அட்டகாசம் செய்தார்கள்....


Mettai* Tamil
ஏப் 09, 2025 09:27

உங்களைப்போல் உங்கள் முன்னோர்களும் பிரிவினைவாத நய வஞ்சக மனநிலையில் நிறைய பேர் இருந்ததால் ஒற்றுமை இல்லாமல் போய்விட்டது . சூழ்ச்சியின் காலடியில் வீழ்ந்தோம் .....இது மோடியின் காலம்.. இனி விழிப்புடனும் , ஒற்று மையுடனும் இருந்து பாரத நலனை காப்போம் ....


r ravichandran
ஏப் 09, 2025 09:30

வாள் முனையால் கொடுங்கோல் ஆட்சி செய்வது , மதம் மாற்றம் செய்வது தான் ஆட்சியா? இந்து மன்னர்களின் ஒற்றுமை இன்மை தான் இஸ்லாமியர்கள், பிரிட்டிஷ்காரர்கள் இங்கு ஆட்சி செய்ய முக்கிய காரணம். இப்போதும் இங்கு இந்து மக்கள் அப்படிதான் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.


vijay
ஏப் 09, 2025 09:59

அப்போ, அந்த காலகட்டத்தில், இந்த நாட்டில வீரர்கள் இல்லை என்கிறாயா? என்னதான் சொல்லவர்ர நீ? மதத்தின் பெயரால், பல ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்து, கொள்ளை அடிச்சு, கோவில்கள் உட்பட பல இடங்களை தரைமட்டமாக்கிய ஒருவனின் பெயரில் ஊர் இருந்தால் மாற்றத்தான் வேண்டும். தும்பை விட்டு வாலை பிடிக்கிறாங்கன்னு சொல்றியே, வேற என்ன செய்யலாம்னு நீயே சொல்லேன். எவனோ எழுதிக்கொடுத்த இடங்களை, இல்லாட்டி அந்த காலத்தில் பிடுங்கிய இடங்களை தங்களுக்கு சொந்தம் என்று சொல்லும் வக்ப் வாரியம், செந்துறை என்ற ஊரே எங்களுக்குத்தான் சொந்தம் என்கிறது. உனக்கு தில்லு இருந்தால், போயி கேளேன். அதற்கு தில்லு இல்லை, வழி இல்லை. வந்துட்டாரு இதற்கு மட்டும்.


Pandi Muni
ஏப் 09, 2025 10:33

விளைந்த பயிர்களுக்கிடையே முளைத்த களைகளை அகற்றும் நேரம் இப்போதுதான் வந்திருக்கு திராவிடா


Dharmavaan
ஏப் 09, 2025 10:49

துலுக்கனுக்கு வால் பிடிக்கும் தேசத்துரோகி


முக்கிய வீடியோ