உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பத்து நாட்களுக்கு பின் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

பத்து நாட்களுக்கு பின் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

புதுடில்லி:டில்லியின் தென் கிழக்கு பகுதியில் உள்ள சரிதா விஹார் என்ற பகுதியில் இருந்து கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட சிறுமி, 25 கி.மீ., தொலைவில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார்.கடந்த 2ம் தேதி, தென் கிழக்கு டில்லியின் சரிதா விஹார் என்ற பகுதியில் இருந்து, 15 வயது சிறுமி திடீரென கடத்தப்பட்டார். அவரை மீட்க, போலீசார் தனிப்படைகள் அமைத்திருந்தனர்.அவரை யார் கடத்தினர்; எதற்காக கடத்தப்பட்டார் என்ற விவரங்கள் தெரியாத நிலையில், அவர் காபஷெரா என்ற இடத்தில் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அந்த இடத்திற்கு சென்ற போலீசார், அந்த சிறுமியை மீட்டு, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். எதற்காக அந்த சிறுமி கடத்தப்பட்டார் என்பது குறித்து அந்த சிறுமியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !