உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோலார் காங்., அழுக்கு நிறைந்தது!

கோலார் காங்., அழுக்கு நிறைந்தது!

கோலார்: ''கோலார் காங்கிரஸ் அழுக்கு நிறைந்தது,'' என, பங்கார்பேட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமி அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளார்.பங்கார்பேட்டையில் நேற்று அவர் அளித்த பேட்டி:கோலார் மாவட்ட காங்கிரசில், நான் தான் மூத்த எம்.எல்.ஏ.,. ஆனால் மாவட்ட வளர்ச்சி குறித்து விவாதிக்கும்போது, கோலார் பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் என் பேச்சை கேட்பது இல்லை. என்னை அலட்சியப்படுத்துகிறார்.கோலார் காங்கிரஸ் அழுக்கு நிறைந்தது. இங்கு யார் தலைவர் என்று தெரியவில்லை. மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் அணிகளுடன், என்னை அடையாளப்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை.தற்போது எனக்கு வாரிய தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் அமைச்சர் பதவி தருவதாக, மல்லிகார்ஜுன கார்கே எனக்கு உறுதி அளித்துள்ளார். வக்பு வாரிய சர்ச்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக துணை நிற்போம்.இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்பு முதல்வர் மாற்றம் குறித்து எந்த விவாதமும் இல்லை. எதுவாக இருந்தாலும் கட்சி மேலிடமே முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி