உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேட்டீங்களா இந்த அநியாயத்தை; எங்களுக்கே லஞ்சம் தர முயற்சி; கோல்கட்டா பெண் டாக்டர் குடும்பம் பகீர்!

கேட்டீங்களா இந்த அநியாயத்தை; எங்களுக்கே லஞ்சம் தர முயற்சி; கோல்கட்டா பெண் டாக்டர் குடும்பம் பகீர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: கோல்கட்டா மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் குடும்பத்தினர், 'லஞ்சம் கொடுத்து வழக்கை மூடி மறைக்க முயற்சி செய்தனர்' என போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளனர். மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இன்று வரை மேற்கு வங்கத்தில் இது தொடர்பான கொந்தளிப்பு அடங்கவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bdyihk71&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில்,லஞ்சம் கொடுத்து வழக்கை போலீசார் மூடி மறைக்க முயற்சி செய்தனர் என பெண் டாக்டர் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அவர்கள் கூறியதாவது: உடலை அவசரமாக தகனம் செய்ய வலியுறுத்தினர். லஞ்சம் கொடுத்து வழக்கை போலீசார் மூடி மறைக்க முயற்சி செய்தனர். போலீஸ் அதிகாரியிடம் இருந்து லஞ்சம் வாங்க மறுத்துவிட்டோம்.

எதற்கெடுத்தாலும் லஞ்சமா?

வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் ஆரம்பத்திலிருந்தே விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். உடலை பார்க்கவும் அனுமதிக்கவில்லை. உடலை பிரேத பரிசோதனை செய்ய எடுத்து செல்லப்பட்டபோது போலீஸ் ஸ்டேஷனில் காத்திருக்க வைத்துவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவத்துக்கு பிறகு, மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும், செவிசாய்க்கவில்லை என மருத்துவ மாணவர்கள் நிர்வாகம் மீது குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Narayanan
செப் 05, 2024 16:24

இந்த மோடி அரசு 356 ஐ பயன்படுத்தி இருந்தால் வரவேற்று மக்கள் கூடுதல் வாக்களித்திருப்பார்கள். அவர்கள் இந்த மாதிரியான அரசுகளை கண்டும் காணாமல் இருப்பதால் நமக்கு பிஜேபி அரசின் மேல் ஒரு நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது . கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு பெரும் கரும்புள்ளி . செத்தவனுக்கு பத்துலக்க்ஷம் கொடுப்பது ஏற்ற்றுக்கொள்ளமுடியாதது . மரண எண்ணிக்கை கூடியபின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை . இப்போ கொல்கட்டா சம்பவம் . இந்த ஆளுநர் , பிரதமர் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் ?.


D.Ambujavalli
செப் 05, 2024 16:16

இந்த விஷயத்தில் எல்லா அரசும், போலீசும் ஒன்றுதான் Whistle blowers க்கு எச்சரிக்கை கொடுக்கும் வழியாகத்தான் இந்த கேஸ் போய்க்கொண்டிருக்கிறது


தமிழன்
செப் 05, 2024 15:14

சரி.. லஞ்சம் கொடுத்தாங்க.. வாங்கவில்லை.. அதனால் யாருக்கு லாபம்.. ? அவர்களுக்கு தண்டனை கிடைக்குமா? சரி கிடைத்தால் மட்டும் யாருக்கு லாபம்..? கிடைக்காவிட்டால் யாருக்கு லாபம்? இது போன்ற சமயங்களில் உணர்வு பூர்வமாக மட்டும் சிந்திக்க கூடாது


Sathyanarayanan Sathyasekaren
செப் 05, 2024 18:28

பொய் பெயரில் கருத்து எழுதும் தருதலையே, என்ன சொல்ல வருகிறாய்? லாப நஷ்ட கணக்கு பார்க்க இது என்ன வியாபாரமா? உன் மகளை இதுபோல் பாலியல் கொடூரம் செய்து கொலை செய்தல் இப்படித்தான் பேசுவாய்? கத்திக்கு பயந்து மதம் மாறிய உனக்கு இது போன்ற உணர்ச்சிகள் இருக்காது. மதம் மாறிய பின் மூளை சலவை செய்யப்பட்டு, இதுவரை கூடி வாழ்ந்த உறவுகளையே கொலை செய்யும் பாவிகள் தானே நீங்கள்.


தமிழன்
செப் 05, 2024 15:06

எத்தனை கோடி தர முன் வந்தார்கள்.. ? விவரமாக சொல்லுங்க.


Dhilip beece
செப் 05, 2024 14:49

நீதி கிடைக்க வேண்டும்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 05, 2024 14:01

கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் பத்து இலட்சம். பெண் மானபங்கம் செய்து இறந்தால் அதற்கும் பணம். புள்ளி வைத்த இண்டி கூட்டணி வாழ்க. அதற்கு வாக்களிக்கும் அனைத்து இந்துக்களும் வாக்களிக்காமல் வாக்கு பதிவன்று சுற்றுலா செல்லும் இந்துக்கள் கிருஷ்ணா ராமா கோவிந்தா என்று நமக்கேன் வம்பு என்று சொல்லி கொண்டு வீட்டிலேயே முடங்கும் அனைத்து வயது இந்துக்கள் என்ன செய்தாலும் உயர் பதவியில் நம்மாள் கலெக்டராக இருக்கான் செக்ரட்டிரியா இருக்கான் அவா சொன்னால் திமுகக்கு வோட்டு போடுன்னு சொல்லிக் கொண்டு திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்கும் பிராமண சமுதாய மக்கள் இந்த வகை மானங்கெட்ட இந்துக்கள் இருக்கும் வரை இப்படித்தான் நடக்கும்.


Corporate Goons
செப் 05, 2024 13:43

மோடியின் பாஜ வின் அரசியல் வலையில் விழ வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். மாநிலம் முழுவதும் மோடியின் ஆட்கள் , பா ஜ வினர் மாதக்கணக்கில் போராடுவதால் இவர்களுக்கு என்ன பயன் ?


பேசும் தமிழன்
செப் 05, 2024 13:42

சம்பவத்தின் பின்னணியில்.... மமதை பேகம் அவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட ஆட்களின் கைங்கர்யம் இருக்கலாம் போல் தெரிகிறது.... அதனால் தான் துவக்கத்தில் இருந்தே மேற்கு வங்க காவல்துறை தில்லு முல்லு செய்து வருகிறது.


Corporate Goons
செப் 05, 2024 13:39

காசு கொடுத்து கேசுகளை செட்டில் செய்வது உலகத்தரம் வாய்ந்த, இந்திய கோர்ட்டுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட, அரங்கேற்றப்பட்ட ஒன்றுதான்


Ramesh Sargam
செப் 05, 2024 12:58

இந்த நிகழ்ச்சி வடகொரியாவில் நடந்திருந்தால் குற்றவாளிகள் இந்நேரம் மரணதண்டனை பெற்று நரகத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கு பேரிடரின்போது சரியாக பணிபுரியாத முப்பது அதிகாரிகளை மரணதண்டனை கொடுத்து கொன்றான் அந்நாட்டு அதிபர். தண்டனை அப்படி இருக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை